Type Here to Get Search Results !

15th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்
  • பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க பேரூரில் ரூ.6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
  • அதுபோல, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு சிறந்த திட்டங்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இந்தத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • 2011 முதல் 2019 வரை 11 லட்சத்து 46,000 பெண்களுக்கு 5,525 கிலோ தங்கம், ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என ரூ.3,955கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3 லட்சத்து 33,000 மகளிர் பதிவு செய்துள்ளனர். 2017 - 2018 ஆம் ஆண்டில் 1லட்சத்து 40,000 மகளிருக்கு மானியமாக ரூ.338 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு
  • 2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
  • மாநிலம் முழுவதும் 4.60 லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்று வரும் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் பேசினார்.



பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி
  • பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது இந்தியாவின் பங்கஜ் அத்வானி முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் மியான்மரின் மண்டலே நகரில் நடைபெற்ற போட்டியில் மியான்மர் வீரர் நே துவே உ-வை வீழ்த்தி பட்டம் வென்றார்.
தென் மண்டல தடகளத்தில் ராமநாதபுரம் மாணவி தங்கம்
  • கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வரும் தென் மண்டல தடகளப்போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துஉள்ளார்.
  • தென் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா,மாலத்தீவு, கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 
  • இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி பிளஸ்1 மாணவி எம்.ஐஸ்வர்யா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் 35:50 மீ., வீசி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 
  • ஈட்டி எறிதல் போட்டியில் 30:38 மீ., எறிந்து மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சவுரப் வர்மா
  • வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். வியட்நாமின் ஹோசிமின் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சன் பெய் சியாங்கை சவுரப் வர்மா வீழ்த்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel