Type Here to Get Search Results !

13th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

'பாரம்பரிய இயற்கை உணவுகள்' - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா
  • தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதராசபட்டினம் என்ற பெயரில் ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில்நடைபெறுகிறது. 
  • வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், உணவு சார்ந்த தொற்று நோய்கள், நுண்சத்து குறைபாடுகளின் தடுப்பு முறைகள், நமது ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
  • மழை நீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
  • ராஜாஜி ஹால் வரை நடைபெற்ற பேரணியில், சுகாதாரத்துறை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களான ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மந்த நிலையில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எஃப்) கருத்து
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மந்த நிலையில் உள்ளதாக ஐ.எம்.எஃப் கருத்து தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அடைந்து 5 சதவிகிதமாக இருந்தது. 
  • முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2013ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்ததே மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். 
  • நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் என முன்னர் ஐ.எம்.எஃப் கணித்திருந்தது. 
  • ஆனால், உள்நாட்டு தேவை எதிர்பார்த்ததை விட பலவீனமாக தோன்றுவதால் இந்த இரு நிதியாண்டுகளுக்குமான பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 0.3 சதவிகிதம் அளவுக்கு ஐ.எம்.எஃப் குறைத்துள்ளது. 
  • நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்
  • இந்திய ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்நிலையில், இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில்,ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மேலும்,ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி72, டி90 ஆகிய பீரங்கிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கவும்,நிலத்தில் கண்ணி வெடிகளை பதிக்கும் இயந்திரங்களை டி.ஆர்.டி.ஓ.விடம் இருந்து கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.



கடற்படைக்கான தேஜஸ் விமானம் சோதனை வெற்றி
  • கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தை தரை இறக்கும் சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்' நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், தேஜஸ் ரக போர் விமானங்களை முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
  • இந்த தேஜஸ் ரகத்தை சேர்ந்த, 40 போர் விமானங்களை வாங்க, எச்.ஏ.எல்., நிறுவனத்திடம், இந்திய விமானப் படை, ஏற்கனவே கோரிக்கை வைத்தது. இந்நிலையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 83 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய, கடந்த ஆண்டு, கோரிக்கை வைத்தது.
  • இதையடுத்து, கடற்படைக்கு என, பிரத்யேகமான தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில், எச்.ஏ.எல்., ஈடுபட்டுள்ளது. 
  • இதன் பணிகள், முடிவடைந்த நிலையில், இதை தரை இறக்கும் சோதனை, மஹாராஷ்டிரா மாநிலம், கோவாவில் உள்ள, கடற்பகுதியில், நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்க்கப்பல்களை தரம் உயர்த்துவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது
  • டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், ரஷ்ய அரசின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி நிறுவனமான ரோசோ போரோன் நிறுவன அதிகாரிகளும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இதன் படி இந்தியா கடற்படை போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ்.டெல்லி, மைசூர், மும்பை ஆகிய கப்பல்களின் ரேடார்கள் மற்றும் ஏவுகணை தாக்கும் திறனை மேம்படுத்த ரஷ்ய உதவி செய்யும்.
  • கப்பல்களை பழுது பார்த்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றை ரஷ்ய நிறுவனம் இந்தியாவிலேயே மேற்கொள்ளும். கப்பல்களுக்கான மென்பொருள் மேம்பாட்டையும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ரஷ்ய நிறுவனம் மேற்கொள்ளும்.
  • இந்த ஒப்பந்தத்தின் படி புதுப்பிக்கப்பட உள்ள மூன்று கப்பல்களும் 6200 டன் எடையும்,163 மீட்டர் நீளமும் கொண்டவை. அவற்றில் தலா 40 அதிகாரிகளும், 310 மாலுமிகளும் உள்ளனர். மூன்று கப்பல்களும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டவை.
கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டல்
  • பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் என்கிற முறையில் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
  • இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மைதானத்திற்கு அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டது.
  • இதே போல மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் மாடத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel