Type Here to Get Search Results !

18th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இ - வே' பில் பதிவில் தமிழகம் 5ம் இடம்
  • ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, 'இ - வே' பில் முறையில், ஏழு கோடி பில்கள் பதிவுடன், தமிழகம், ஐந்தாம் இடத்தில் உள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையே, சரக்குகளை எடுத்துச் செல்ல, 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி பெறும், இ - வே பில், கடந்த ஆண்டு, ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது. 
  • மாநிலத்துக்கு உள்ளே, 1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்பிலான சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான, இ - வே பில், கடந்த ஆண்டு ஜூனில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
  • தற்போது, இ - வே பில் பெறும் முறையில், தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும், 78 கோடி பில்கள் பதிவாகி உள்ளன. இதில், மஹாராஷ்டிரா மாநிலம், முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, குஜராத், கர்நாடகா, ஹரியானா ஆகியவை உள்ளன. 78 கோடி பில்லில், மாநிலங்களுக்கு உள்ளே, 42 கோடி, இ - வே பில்கள் பெறப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில், நான்கு கோடி பில்கள் மாநிலங்களுக்குள்ளும், மூன்று கோடி பில்கள், மாநிலங்களுக்கிடையேயும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு உள்ளே பெறக் கூடிய, இ - வே பில்லில். தமிழகம், நான்காம் இடத்தில் உள்ளது. 
'டிஜிட்டல்' பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம்
  • இந்தியாவில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளதாக, 'ரேஸர் பே' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரேஸர் பே என்ற ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது. 
  • இரண்டு மற்றும் மூன்றில், முறையே, மஹாராஷ்டிரா, டில்லியும்; ஐந்தாவது இடத்தில், ஆந்திராவும் உள்ளன.நகரங்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனையில், சென்னை ஆறாவது இடத்தில் உள்ளது. 
  • தற்போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன் வாயிலாக செய்யும் பரிவர்த்தனை, 2021ல், 10 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் உதயம்
  • சட்டசபையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று வெளியிட்டார். பேரவை விதி, 110ன் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:மக்கள் கோரிக்கைகளை ஏற்று, நிர்வாக வசதிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, தென்காசி தலைமையில், புதிய மாவட்டம் உருவாக்கப்படும். 
  • அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, செங்கல்பட்டை தலைமை யிடமாக வைத்து, புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்.தனி அதிகாரிஇவ்விரு மாவட்டங்களுக் கும், தலா, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
இந்திய ரயில்வேயிடம் ரூ.750 கோடிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றது "பெல்'
  • இந்திய ரயில்வே மற்றும் தேசிய அனல்மின் நிறுவனத்தின் (என்டிபிசி) கூட்டு நடவடிக்கையில் உருவாகும் திட்டத்துக்கான சாதனங்களைத் தயாரிக்கும் ரூ.750 கோடிக்கான ஒப்பந்தத்தை பாரத் ஹெவிஎலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் ("பெல்') பெற்றுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் புகையில், சல்ஃபரைப் பிரித்தெடுப்பதற்கான சாதனத்தை வடிவமைத்தல், தயாரித்தல், நிறுவுதல், செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை பெல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இவை தவிர மேலும் ஒருசில பணிகளையும் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
தமிழில் உச்சநீதிமன்ற முதல் தீர்ப்பு
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார். 
  • இதையடுத்து உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இதில் தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. 
  • இந்த நிலையில் முதல் முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது. அதில் முதல் தீர்ப்பே சரவணபவன் ராஜகோபாலின் தீர்ப்புதான். 



சந்திரயான்-2 விண்கலத்தை ஜூலை 22-இல் விண்ணுக்கு அனுப்ப முடிவு
  • தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, "சந்திரயான்-2' விண்கலம் வரும் 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. 
  • நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பில் முதன் முதலில் "சந்திரயான்-1' என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
  • மெக்னீஷியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் "சந்திரயான்-1' கண்டறிந்தது. அதன் தொடர்ச்சியாக, "சந்திரயான்-2' விண்கலத்தை இந்தியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த 4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 - எம்1ராக்கெட் மூலம், கடந்த 15-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது.
  • இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாலும், அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்கும் முயற்சியை முதன்முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாலும், "சந்திரயான்-2' திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டிற்கு F-35 போர் விமானங்களை விற்பனை இல்லை டிரம்ப் அறிவிப்பு
  • துருக்கி நாட்டின் வான் பரப்பை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்தது.
  • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, F-35 ரக போர் விமான தயாரிப்பு தொடர்பாக தொழில்நுட்ப பயிற்சி பெற அமெரிக்கா வந்திருக்கும் துருக்கி விமானிகளை வெளியேற்றுவோம் என எச்சரித்திருந்தது.
  • இந்நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்த அதிபர் டிரம்ப், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
  • மேலும் துருக்கிக்கு அதிநவீன F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை கைவிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அமெரிக்கா, கனடாவிற்கு திருப்பி அனுப்ப கம்போடியா தீர்மானம்
  • சுமார் 1600 ரொன் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
  • அமெரிக்காவிலிருந்து 70 கொள்கலன்களும், கனடாவிலிருந்து 13 கொள்கலன்களும் கம்போடியாவின் மீன்பிடிக் கிராமமொன்றிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
  • எனினும், இதனை நாட்டிற்குக் கொண்டுவந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என கம்போடிய சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மீள்சுழற்சிக்காக, சில மேற்கத்தேய நாடுகள் தமது நாட்டின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனாவுக்கு அனுப்புகின்றன.
  • எனினும், வெளிநாட்டுக் கழிவுப் பொருட்களுக்கு சீனா கடந்த வருடம் தடை விதித்திருந்தது. இந்தநிலையிலேயே கழிவுப்பொருட்கள் கம்போடியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel