Type Here to Get Search Results !

நம்பர் பிளேட் இல்லாத குடியரசுத் தலைவர் வாகனம் / NO NUMBER PLATE FOR INDIA PRESIDENT CAR

  • குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் ஆகியோர் பயன்படுத்தும் கார்களில் பதிவு எண்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 2018-ல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆளுநர்கள் வாகனங்களில் வாகன எண் பொருத்தப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் வாகனத்தில் மட்டும் வாகன எண் இன்னும் பொருத்தப்படவில்லை.
  • புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் ''குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், வெளியுறவுத்துறை அமைச்சரக வாகனங்கள், மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யப்படுவது இல்லை. இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவெண்கள் வெளியே தெரியும்படி நம்பர் பிளேட்களைப் பொருத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.
  • கடந்த மார்ச் 2018-ல் இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி கீதா மித்தல், நீதிபதி ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தாக்கல்செய்த பதில் மனுவில், ''குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் கார்களின் எண்கள் வெளியில் தெரியும்படி வாகனங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்கள்.
  • அதுபோல் வெளியுறவுத் துறையினரும், ''வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போது அவர்கள் பயன்படுத்த 14 கார்கள் உள்ளன. அவை விரைவில் பதிவுசெய்யப்படும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் கார்களின் எண்கள் வெளியில் தெரியும்படி வாகனங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பதில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
  • பொதுவாகவே குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் கார்களில் முன்பக்கம் தேசியக் கொடியும், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கத்திலும் தேசியச் சின்னமான அசோக சக்கர முத்திரையும் இருக்கும். அந்த வாகனங்களில் வாகனப் பதிவு எண் வைக்கப்படுவதில்லை. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 2018-ல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஆளுநர்களின் வாகனங்களில் வாகன எண் பொருத்தப்பட்டன.
  • இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கறுப்பு நிற பென்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார். அவரது, காரில் TN07 RB 7777 என்ற பதிவு எண் முன்பக்கமும் பின்பக்கமும் தெரியும்படி வைக்கப்பட்டது. அவர் பயன்படுத்தும் மற்றொரு காரிலும் இதேபோல் வாகன எண் பொருத்தப்பட்டுள்ளது.
  • பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. அதனால் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் வாகனப் பதிவு எண் எதுவும் வைக்கப்படவில்லை. பிரணாப் முகர்ஜி 24.06.2017-ல் காஞ்சிபுரம் வந்திருந்தார். சங்கரமடத்துக்கு வந்த அவர், ஜெயேந்திரரைச் சந்தித்து பின்பு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அப்போது வெள்ளை நிற ஸ்கார்பியோ வாகனத்தைப் பயன்படுத்தி இருந்தார் பிரணாப் முகர்ஜி.
  • தமிழக ஆளுநரின் கார் பின்பக்கமும் வாகன எண் பொருத்தப்பட்டுள்ளது
  • அந்த வாகனத்தில் முன்னும் பின்னும் வாகனப் பதிவு எண் வைக்கப்படவில்லை. அதேநேரத்தில், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்துவரும் நிலையில், கடந்த ஆண்டு அவர் வாகனத்திலும் வாகன எண் வெளியில் தெரியும்படி பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இதுவரை குடியரசுத் தலைவரின் வாகனத்தில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை.
  • காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவத்துக்குக் கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது அவர், டாடா நிறுவனத்தின் சஃபாரி காரைப் பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய காரில், வாகன எண் முன்னும் பின்னும் வைக்கப்படவில்லை. அதுபோல், அவர் குடும்பத்தினர் பயன்படுத்திய காரிலும் வாகன எண் வைக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel