Type Here to Get Search Results !

19th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதல்வர்களாக இருந்த தலைவர்களின் முழு உருவப்படங்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன. பேரவையில் இதுவரை மொத்தம் 11 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார்.
  • சட்டப்பேரவையில் இதுவரை 11 முக்கியத் தலைவர்களின் முழு உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 12-ஆவதாக சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவு
  • பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பனாமா நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • அதேபோல், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்களா நியமிக்கப்பட்டுள்ளார். 
33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு
  • தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தனி அலுவலராக கிரண் குரலா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • புதிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படும் வரை மாவட்ட நிர்வாக பணிகளை தனி அலுவலர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல்
  • நேற்று நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையே பிரச்சினைகள் நேரும் போது அவர்கள் தேசிய நடுவர் மற்றும் சமரச மையத்திடம் விண்ணப்பம் செய்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் பல நேரங்களில் குறைந்த நேரத்தில் முடிக்கப்படாமல் இழுக்கடிக்கப் படுவதாக பலரும் குறை கூறி வருகின்றனர்.
  • அது மட்டுமின்றி இவ்வாறு இழுக்கடிக்கப்படுவதால் அந்த நடுவர் மையத்தினர் இதற்காக பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளன. இதையொட்டி மத்திய அரசு இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்றதை அடுத்து மாநிலங்களவையில் அளிக்கப்பட்டது.
தேசிய தரவரிசைப் பட்டியலில் 25-ஆம் இடத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்
  • இந்தியாவில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக அங்கீகாரத்துடன் செயல்படும் வேளாண்மை சார்ந்த 72 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக உள்ள நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள மாநில வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் 25- ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.



பிரதமரின் தனி செயலராக விவேக் குமார் நியமனம்
  • பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இயக்குனராக பணியாற்றி வருபர் ஐ.எப்.எஸ். அதிகாரி விவேக் குமார். இவர் தற்போது பிரதமர் மோடியின் தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று(ஜூலை 19) பிறப்பிக்கப்பட்டது.
ரூ.345 கோடியில் கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம்
  • இஸ்ரேலிடம் இருந்து கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை வாங்குவதற்காக ரூ.345 கோடியில் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. 
  • தரையில் இருந்து புறப்பட்டு வானில் எதிரி ஏவுகணைகள், விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நடுத்தர ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 
  • இந்த ஏவுகணைகள், கடற்படையில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம், கடந்த புதன்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. 
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
  • டிராய் அளித்துள்ள தகவலின்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன்-ஐடியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 
  • கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி அந்த நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 38.75 கோடியாகவும், தொலைத் தொடர்புச் சந்தை வருவாயில் அதன் பங்கு 33.36 சதவீதமாகவும் உள்ளது. 
  • 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 32.03 கோடி.



காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்
  • ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இப்போட்டியின் அணிகள் பிரிவு இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  • மகளிர் பிரிவில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 3-0 என்ற செட் கணக்கில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • அர்ச்சனா காமத் 8-11, 13-11, 11-9, 11-9 என ஹோ டின்னையும், மனிகா பத்ரா 11-6, 11-4, 11-3 என டெனிஸ் பேயட்டையும், மதுரிகா 11-9, 11-7, 11-6 என எமிலி போல்டனையும் வீழ்த்தி மொத்தத்தில் 3-0 என வென்றனர்.
  • ஆடவர் பிரிவில் இந்தியா 3-2 என போராடி இங்கிலாந்தை வீழ்த்தியது. சரத் கமல் 7-11, 8-11, 4-11 என தாமஸ் ஜார்விஸடம் தோற்றார். அதே போல் சத்யன் 11-5, 11-9, 4-11, 8-11, 8-11 என சாமுவேல் வாக்கரிடம் போராடி தோல்வியுற்றார். 
  • பின்னர் முக்கியமான ஆட்டத்தில் ஹர்மித் தேசாய் 4-11, 11-5, 8-11, 11-8, 11-8 என டேவிட்டை வீழ்த்தினார். மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சத்யன் 11-2, 6-11, 11-4, 11-4 என தாமûஸயும், சரத் கமல் 15-13, 12-10, 11-6 என சாமுவேலையும் வீழ்த்தி 3-2 என ஆட்டத்தை கைப்பற்றினர்.
  • இந்திய ஆடவர் அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் மகளிர் அணி முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்
  • கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைக்காக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸி வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • கிரிக்கெட்டின் பிதாமகன் எனக் கூறப்படும் டான் பிராட்மேனுக்கு ஈடாக கருதப்படும் சச்சின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 34357 ரன்களை எடுத்துள்ளார்.100 சர்வதேச சதங்களை அடித்தவர். கடந்த 2013-இல் ஓய்வு பெற்றார் சச்சின்.
  • தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டொனால்ட் 330 டெஸ்ட், 272 ஒரு நாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2003-இல் அவர் ஓய்வு பெற்றார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்குத் தடை ஐசிசி தொடர்களில் பங்கேற்க முடியாது
  • ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு உடனடி தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்ட ஐசிசி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கான தொகையைம் நிறுத்தி வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
  • ஜிம்பாப்வே கிரிக்கெட் விவகாரங்களில் அந்நாட்டு அரசு தலையீடு அளவுக்கு மீறி இருப்பதால் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது ஐசிசி.
  • ஜிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது, பணவீக்க விகிதம் கடுமையாக அதிகரித்து அரசு கஜானா காலியாக உள்ளதால், ஜிம்பாப்வே கிரிக்கெட் வளர்ச்சிக்காக அனுப்பப்படும் தொகையை ஜிம்பாவே அரசு தங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • முதன் முதலாக ஐசிசி முழு உறுப்பு நாடு ஒன்று தடைகளில் சிக்கியுள்ளது. 2015-ல் இலங்கைக்கும் ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel