Type Here to Get Search Results !

10th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்
  • மத்திய நீர்வள ஆணைய தலைவராக கடந்த வாரம் பதவியேற்ற ஏ.கே.சின்ஹா, கூடுதலாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலானநியமனக் குழு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஏ.கே.சின்ஹாவை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் வேறு வேறு தலைவர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் 1 லட்சம் கோடியை தாண்டியது
  • அனைவருக்கும் வங்கிக் கணக்கை இலக்காக கொண்டு பிரதமர் ஜன்தன் திட்டம் 2014 ஆகஸ்ட் 28ம் தேதி துவக்கப்பட்டது. 
  • அடிப்படை சேமிப்பு கணக்குகளான இவற்றுக்கு ரூபே கார்டு மற்றும் ஓவர் டிராப்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 28.44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ரூபே டெபிட் கார்டு பெற்றுள்ளனர். இந்த கணக்கில் உள்ள டெபாசிட் தொடர்பாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதியமைச்சக புள்ளி விவரங்களின்படி ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் தொகை, 1,00,495.94 கோடியாக உள்ளது. 
  • கடந்த 3ம் தேதி வரை உள்ள புள்ளி விவரம் இது. ஜன்தன் கணக்குகளில் டெபாசிட்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. கடந்த மாதம் 6ம் தேதி இந்த கணக்குகளில் மொத்த டெபாசிட் தொகை 99,649.84 ஆக இருந்தது. 
  • இதற்கு ஒரு வாரம் முன்பு டெபாசிட் 99,232.71 கோடியாக இருந்தது. கடந்த 2018 மார்ச் மாதத்தில் மொத்தம் உள்ள ஜன்தன் கணக்குகளில் 16.22 சதவீதம், அதாவது 5.10 கோடி கணக்குகளில் நிதி இருப்பு பூஜ்யமாக இருந்தது.
  • ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் பூஜ்ய இருப்பு வங்கி கணக்குகள் எண்ணிக்கை 14.37 சதவீதமாக, அதாவது 5.07 கோடியாக சரிந்துள்ளது என அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
"இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?" - மத்திய உள்துறை விளக்கம்
  • நாட்டின் தேசிய மலர் எது என்பது தொடர்பாக எந்த அறிவிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை என விளக்கம் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த ‌பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இதைத் தெரிவித்தார்.
  • 2011ஆம் ஆண்டு தேசிய விலங்கு அந்தஸ்து புலிக்கும், தேசியப் பறவை அந்தஸ்து மயிலுக்கும் வழங்கப்பட்டதாக அமைச்சர்‌ தெரிவித்தார். எனினும் தேசிய மல‌ர் தொடர்பாக எந்த அறிவிக்கையும் இதுவரை ‌வெளியிடப்பட‌வில்லை என்றும் அவர் தன் பதிலில் தெரிவித்தார்
நதி நீர் பிரச்சினையை தீர்க்க நாடு முழுவதும் ஒரே தீர்ப்பாயம்! புதிய மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல்
  • நாடு முழுவதும் எழும் நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்கவும், தண்ணீர் பிரச்சினை தீர்க்கவும் 'ஜல்சக்தி அபியான்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த வாரம் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் இதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • குறிப்பாக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சனையை தீர்க்கும் 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா கொண்டு வரப்பட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் செயல் இழந்துவிடும் வாய்ப்பு உருவாகிவிடும் என நம்பப்படுகிறது.



போக்சோ சட்டதிருத்தம்: அமைச்சரவை ஒப்புதல்
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்துவதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதே போன்று திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டதிருத்த மசோதாவிற்கும், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கலப்பட உணவுப் பொருட்கள் விநியோகம் முதலிடத்தில் தமிழகம்
  • கலப்பட உணவுவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
  • இந்தநிலையில், கலப்பட உணவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 2 இடங்களில் உத்தர பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • உணவுக்கலப்படம் தடுப்பு சட்டங்களில் கடுமை இல்லை. இ.பி.கோ 272 மற்றும் 273 பிரிவுகளில் திருத்தங்கள் செய்து, ஆயுள் தண்டனை வரை வழங்கிட பரிந்துரைக்கப்பட்டும் மாற்றங்கள் இல்லை.
கழிவுகளை அகற்றும் பணியின்போது உயிரிழப்பு தமிழகம் முதலிடம்
  • கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. 
  • கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
  • இதன்படி கழிவுகளை அகற்றும் பணியின்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரபிரதேசத்தில் 71 , ஹரியானாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். ‌
  • கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது 15 மாநிலங்களை சேர்ந்த தரவுகள் தான், அனைத்து மாநிலங்களின் தரவுகளும் கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.



உலக தடகளத்தில் தங்கம்; வரலாறு படைத்தார் டூட்டி
  • இத்தாலியில் நடைபெற்று வரும் உலக யுனிவர்சியாட் தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்றுவரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார்.
  • இத்தாலியின் நபோலி நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற 100 மீட்டர்ஓட்டப்பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனையான டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.
  • இதன்மூலம் சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை டூட்டி சந்த் படைத்துள்ளார்.
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை கிளீன் அண்ட் ஜெர்க் தங்கம் வென்றார்
  • காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராஹி ஹால்டெர் 'ஸ்னாச்' முறையில் 94 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 120 கிலோவும் என மொத்தம் 214 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் தங்கம் வென்றார்
  • காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைபிரிவில் இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் 'ஸ்னாச்' முறையில் 80 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 104 கிலோவும் எடை தூக்கினார். மொத்தம் 184 கிலோ எடை தூக்கிய அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel