Type Here to Get Search Results !

11th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு ஒப்புதல்
  • இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் நியூட்ரினோ மையம் தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 9 விருதுகள்
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 62 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 
  • இந்த அமைப்பானது போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.இதன் ஒருபகுதியாக 2018-19 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் 26- ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. 
  • இதில் தமிழகத்தின் 3 போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 9 விருதுகளை கழக மேலாண் இயக்குநர்கள் பெற்றுக் கொண்டனர். 
மாநிலங்களவைத் தேர்தல்: ஆறு பேர் போட்டியின்றி தேர்வு
  • மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தலா மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 
  • ஆறு பேரும் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வியாழக்கிழமை நேரில் அளித்தார்.
  • இந்தச் சான்றிதழை தில்லி சென்று மாநிலங்களவைச் செயலகத்தில் வழங்கி, ஆறு பேரும் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்வர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும்.. ஐகோர்ட் தீர்ப்பு
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பிளாஸ்டிக் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், மேற்கண்ட அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி 1 முதல் அரசு தடை விதித்துள்ளது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக புகார் கூறினர்.
  • இந்த வழக்கில் வாதிட்ட தமிழக அரசு 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும் வாதிட்டது.
  • இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என கூறினர்.



நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
  • நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  • மேலும், வரும் 2023ம் ஆண்டுக்குள் 2,371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 13 சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
  • இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • நாட்டில் மக்கள் பல அங்கீகரிக்கப்படாத, முறைகேடான நிதி நிறுவனங்களில் (சீட்டு கம்பெனிகள்) பணத்தை டெபாசிட் செய்து பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க 'முறைப் படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை-2019' என்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு சட்டமசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.
  • இதன்மூலம் நாட்டில் கள்ளத்தனமான டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் இந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவது, டெபாசிட் பணத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கும் இதில் வழிவகை காணப்பட்டுள்ளது.
  • பஞ்சாபில் தனிநாடு கேட்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கமான அமெரிக்காவில் உள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' (எஸ்.எப்.ஜெ) இயக்கம் தடை செய்யப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படுகிறது.
  • 'பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்-111' தொடங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.80,250 கோடியில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். முக்கிய ஊரக இணைப்புகள், கிராம விவசாய சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவைகளை இணைக்கும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்படும்.
  • 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து 'பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைக்கான நிபந்தனைகள் சட்டம்-2019' உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் வரை இந்த சட்டம் பொருந்தும்.
  • 'மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகள் (திருத்த) சட்டம்' கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்று நீர் பிரச்சினைகளுக்கான இப்போதைய தீர்ப்பாயங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உரிய தீர்ப்புகளை பிறப்பிக்க வேண்டும். இது நீர் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்க உதவும்.
  • திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் கொண்டுவருவதற்கான பரிந்துரைக்கும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டமசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு அடைய வழிவகுக்கப்படும்.
உலகின் பெரிய சூரிய மின் பூங்கா
  • அபுதாபிக்கும் துபாயிற்கும் கடும் போட்டி. கச்சா எண்ணெய் உற்பத்தியில் அல்ல. சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில்.அண்மையில் 32 லட்சம் சூரிய மின் பலகைகளைக் கொண்டு, 1.77 ஜிகா வாட்டுகள் மின்சாரம் தயாரிக்கும் நுார் அபுதாபி சூரிய மின் திட்டம், மின்சாரத்தை வர்த்தக ரீதியில் உற்பத்தியை தொடங்கியது.
  • ஷாங்காயைச் சேர்ந்த ஜிங்கோ சோலார், ஜப்பானை சேர்ந்த மருபேனி கார்ப்பரேஷன் மற்றும் அமீரக நீர், மின் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு திட்டம் இது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel