Type Here to Get Search Results !

12th & 13th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

உலக முதலீட்டாளர் மாநாடு 2021ல் நடக்கிறது
  • தமிழக அரசு சார்பில், மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வரும், 2021ல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தொழில் வழிகாட்டி நிறுவனம் துவங்க உள்ளது.
  • தற்போதைய ஒற்றைச்சாளர இணையதளம் மேம்படுத்தப்பட்டு, ஏற்கனவே உள்ள, 24 சேவைகளுடன், 30 புதிய சேவைகள் சேர்த்து, 54 சேவைகளாக வழங்க, புதிய ஒற்றைச்சாளர இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.
  • முதலீடு மேம்பாடு, திட்ட மேலாண்மை போன்ற துறைகளில், திறமை வாய்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தொழில் வழிகாட்டி நிறுவனம் பலப்படுத்தப்படும்.மேலும், தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு, புதிய அலுவலக வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2015ல் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு, 2019ல் நடைபெற்றது. முதலாவது மாநாட்டின் மூலம், 2 லட்சத்து, 42 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் முதலீடும்; இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 3 லட்சத்து, 451 கோடி ரூபாய் முதலீடும் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம்
  • முத்திரைத்தாள் வரி மற்றும் பத்திரப் பதிவிற்காக அதிகக் கட்டணம் வசூலிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • முத்திரைத்தாள் வரி மற்றும் பத்திரப் பதிவுக்கான கட்டணம் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது சட்டப்பேரவையில்
  • தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களில் மூலம் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக முத்திரைத் தாள் வரி மற்றும் பத்திரப் பதிவிற்கு 16 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • இரண்டாவதாக தமிழ்நா‌ட்டில் 11 சதவிகிதமும், கேரளாவில் 10 சதவிகிதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில்
  • ஆண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ய முத்திரை தாள் வரியுடன் கூடிய கட்டணம் 10 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • மத்தியப்பிரதேச மாநிலத்தில் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் வரிக் கட்டணம் 9 புள்ளி 5 சதவிகிதமாக இருக்கிறது.
  • நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 7 சதவிகிதமும், கர்நாடகாவில் 6 புள்ளி 6 சதவிகிதமும், தெலங்கானாவில் 6 சதவிகிதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அஸ்ஸாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் 5 சதவிகிதத்திற்குள்ளேயே இருக்கிறது.
  • பத்திர‌ப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் மூலம் கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு 21 சதவிகிதம் வருவாய் அதிகமாகக் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. 
  • குறிப்பாக, டாஸ்மாக்கிற்கு அடுத்தபடியாக, பத்திரப் பதிவில்தான் அரசுக்கு வருவாய் அதிகரித்திருக்கிறது.



3 நீதிபதிகளுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஜனாதிபதி
  • சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதிபதிகள் சதாசிவம், ஷரத் அரவிந்த் பாப்டே, தஹிலரமானி ஆகியோருக்கு முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம்
  • புதுச்சேரி அதிகார மோதல் விவகார வழக்கில், அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்த கடந்த ஜூன் 4-இல் விதிக்கப்பட்ட தடையை வெள்ளிக்கிழமை நீக்கிய உச்சநீதிமன்றம், இது தொடர்புடைய வழக்கையும் தள்ளுபடி செய்தது.
  • மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மத்திய அரசு வழக்குத் தொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
  • புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
`எர்த் ஹீரோஸ்' விருதுக்குத் தேர்வான முதல் தமிழக வனஅதிகாரி
  • மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பக பகுதியில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த வனச் சரக அதிகாரி `எர்த் ஹீரோ' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்டவற்றை கடத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் ஆமைகள் இனப்பெருக்கத்தை மேம்படுத்த அதிக அளவிலான ஆமை முட்டைகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மகராஷ்டிராவில் இயங்கி வரும் RBS FOUNDATION என்ற அமைப்பானது வனத்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்களைத் தேர்வு செய்து `EARTH HEROS' என்ற விருதை வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. 
  • இந்த ஆண்டுக்கான `எர்த் ஹீரோஸ்' விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் வனச்சரக அலுவலரான சதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட சதீஷ் கடந்த 2014-ம் ஆண்டு வனத்துறை பணியில் சேர்ந்தார். 2016-ம் ஆண்டு ராமநாதபுரம் வன உயிரின கோட்ட வனச்சரகராக பொறுப்பேற்றார். 
  • இப்பொறுப்பை ஏற்று கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் கோட்டத்துக்குட்பட்ட மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளார். 
தபால் துறை பணி: தேர்வு நடத்துங்கள்; முடிவுகளை வெளியிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்
  • தபால்துறை வேலைகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தாமல், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 11ஆம் தேதி தபால் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.



அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய சாதனை
  • தங்கம் மற்றும் செலாவணி சொத்துக்களின் மதிப்பு கடுமையாக அதிகரித்ததையடுத்து ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 223 கோடி டாலர் (ரூ.15,610 கோடி) அதிகரித்து 42,991கோடி டாலரை (ரூ.3.09 லட்சம் கோடி) எட்டி புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 126 கோடி டாலர் உயர்ந்து 42,768 கோடி டாலராக காணப்பட்டது.
  • அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 90.68 கோடி டாலர் உயர்ந்து 40,080 கோடி டாலரானது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 134 கோடி டாலர் உயர்ந்து 2,430 கோடி டாலராக காணப்பட்டது. 
  • அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 47 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகஇருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' இணையதளம் - முதல்வர் அறிவிப்பு
  • சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளைமுதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ்ச் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற தனிச் சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
  • 'தொழில் தோழன்' என்ற இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ஏற்படுத்தப்படும், தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ‌நடத்தப்படும், காஞ்சிபுரம் வல்லம் - வடகால் மற்றும் ஈரோடு பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் தலா 50 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்கூட கட்டடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
  • அனைத்து மாவட்டங்களையும் தொழில் மயமாக்க தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில் தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • கோவையில் 200 கோடி மதிப்பில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம், ஸ்ரீபெரும்புதூரில் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
  • கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் , காஞ்சிபுரம் மற்றும் ‌நாகை மாவட்டங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் , மக்களை தேடி அரசு என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் ஒரே விதியின் கீழ் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
  • தொழிலாளர் நலச் சட்டங்களான 13 சட்டங்களையும் ஒரே விதியின் கீழ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவில் தற்போது 13 தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் 4 பிரிவுகளாக மாற்றி அவைகளை ஒரே விதியின் கீழ் கொண்டு வர அரசு முடிவெடுத்தது. அவ்வகையில் ஊதியம், மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பிரிவுகளுக்கு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்போது இந்த பிரிவுகள் அனைத்தையும் ஒரே விதியின் கீழ் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 'இந்த விதி துறைமுகம், சுரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒரே ஒரு தொழிலாளர் இருந்தாலும் கடை பிடிக்க வேண்டும். இந்த விதியின் படி அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி உறுதி அளிப்பு உள்ளிட்டவைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
  • இந்த விதி பணியாள்ர்களை அமர்த்த ஒரே உரிமம் என்னும் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிப்பதை எளிமையாக்கி உள்ளது. அத்துடன் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை நியமன உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊதியம் மற்றும் ஊதியம் வழங்கும் தினம் குறித்து நிர்ணயம் செய்ய வசதி உண்டாகும்.
  • தற்போது ஊழியர்களுக்கு குறைந்த பட்ச தினசரி ஊதியம் ரூ. 50 அல்லது ரூ.60 ஆக உள்ளது. இனி இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.178 ஆக உயர்த்தப்பட் உள்ளது. மாநிலங்கள் விரும்பினால் இந்த குறைந்த பட்ச ஊதியத்தை மேலும் அதிகரித்து சட்டம் இயற்றலாம்.



உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த் நியமனம்
  • உலக நாடுகளின் வளர்ச்சிக்கு, கடன் உதவி அளிக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றாக, உலக வங்கி உள்ளது. இந்த வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 
  • அதே போல், உலக வங்கியிடம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடன் பெற்று நாட்டிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுலா காந்த், கடந்த 35 ஆண்டுகள் வங்கித்துறையில் அனுபவம் பெற்றவர். தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். 
  • கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் ஸ்டேட் பேங்கில் பொது மேலாளர் பதவியில் இருந்து தற்போது தலைமை நிதி அதிகாரி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • 35 ஆண்டுகளாக வங்கித்துறையில் அன்ஷுலா ஆற்றிய பணிகளை கொண்டு, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக அவரை தேர்ந்தெடுத்ததாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். 
  • முதல் முறையாக உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி என்ற பெருமையும் இவரையே சாரும்.
விம்பிள்டன்: ஹாலெப் சாம்பியன்
  • விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், அமெரிக்காவின் செரினாவை வீழ்த்தினார்.
  • இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-7' ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 10வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மோதினர். 
  • மொத்தம் 55 நிமிடம் நீடித்த பைனலில் ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன், 2014ல் அரையிறுதி வரை சென்றிருந்தார். 
  • இது, ஹாலெப் வென்ற 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தார். தவிர இவர், செரினாவுக்கு எதிராக 2வது வெற்றியை பதிவு செய்தார்.
  • இத்தோல்வியின் மூலம் செரினா, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 24வது பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.ரூ.20 கோடி பரிசுவிம்பிள்டன் பைனலில் வெற்றி பெற்ற ஹாலெப், சாம்பியன் கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த செரினாவுக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை
  • ஆஸ்திரேலியாவில் நடந்த, காமன்வெல்த் பளு துாக்கும் போட்டியில், புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர், அனுராதா, 26; பளு துாக்கும் வீராங்கனை. தஞ்சை மாவட்டம், தொகூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார்.ஆஸ்திரேலியாவின், சமோவா பகுதியில், காமன்வெல்த்சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
  • பளு துாக்கும் போட்டியில் பங்கேற்ற அனுராதா, 100 கிலோவும், 121 கிலோவும் துாக்கி, தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel