Type Here to Get Search Results !

19th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

1,200 வட்டெழுத்துடன் கூடிய நடுகல்
  • வட்டெழுத்துடன் கூடிய, 1,200 ஆண்டுபழமையான நடுகல், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தை அடுத்த, சாப்பரம், பஞ்., பனகமுட்லு கிராமத்தில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். 
  • முரளி என்பவரின் நிலத்தில், 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வட்டெழுத்துடன் கூடிய நடுகல்கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது:இந்த நடுகல்லில், ஒரு கையில் வாள், மறு கையில் வில்லுடன் வீரன் ஒருவன் போரிடுவது போல் உள்ளது. மார்பின் கீழ் பகுதியில், அம்பு பட்டு இறந்துள்ளான். 
  • போரில் இறந்ததன் நினைவாக, இக்கல்எடுக்கப்பட்டுள்ளது.அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியுள்ளார். இந்த வழக்கம், எட்டாம் நுாற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் கொள்ளலாம். மாவட்டத்தில் கிடைத்த மிக பழமையான நடுகல்.
ரஷியாவுடன் இணைந்து எஸ்-500 ஏவுகணைகள் தயாரிப்பு: துருக்கி அறிவிப்பு
  • எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கொள்முதலுக்குப் பிறகு, எஸ்-500 ரக ஏவுகணைகளை ரஷியாவுடன் இணைந்து தயாரிக்கவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
  • கடந்த 2016-ஆம் ஆண்டில், அதிபர் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக துருக்கியால் குற்றம் சாட்டப்படும் ஃபெதுல்லா குலெனுக்கு அமெரிக்கா அடைக்கலம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே மோதல் நீடித்து வந்த சூழலில், அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ரஷியாவின் அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதியான எஸ்-400-களை வாங்க அதிபர் எர்டோகன் முடிவு செய்தார்.
  • ரஷியாவுடனான இந்த ராணுவ ரீதியிலான உறவு, மேற்குலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, அதற்குப் பதிலடியாக துருக்கிக்கு எஃப்-35 ரக நவீன போர் விமானங்களின் விற்பனையை நிறுத்திவைத்தது.



ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது
  • ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
  • ஆனால் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தொழிலாளர் கட்சி 63 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிசன் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரொனால்டோவுக்கு சீரி ஏ லீக் சிறந்த வீரர் விருது
  • ஜூவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டி சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே இங்கிலாந்து, ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளின் லீக் போட்டிகளிலும் சிறந்த வீரர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • மேலும் அவர் 5 முறை தங்கக் கால்பந்து விருதுகளையும் வென்றுள்ளார். 34 வயதான ரொனால்டோ கடந்த 2018-இல் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி ஜுவென்டஸ் அணியில் சேர்ந்தார். இந்த சீசனில் மொத்தம் 21 கோல்களை அந்த அணிக்காக அடித்துள்ளார்.



எப்ஏ கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மான்செஸ்டர் சிட்டி
  • லண்டனில் நடைபெற்ற எப்ஏ கால்பந்து கோப்பைக்கான இறுதி போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமாக வெற்றிபெற்றது.
  • உலக கால்பந்து ரசிகர்களின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது எப்ஏ கோப்பை. நடப்பாண்டில் இந்த தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வாட்போர்டு அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
  • முடிவில் 6க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி எப்ஏ கோப்பையை தட்டிச்சென்றது.
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் 'சாம்பியன்'
  • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் இறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்) மோதினார். 
  • விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். 
  • ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா 'சாம்பியன்'
  • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 
  • 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel