Type Here to Get Search Results !

20th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் ஆண்- திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு
  • தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தாய் நகரைச் சேர்ந்தவர் பா.அருண்குமார் (23). டிப்ளமோ படித்துள்ள இவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 2ஆம் ஆண்டு படித்து வரும் பி.ஸ்ரீஜா (21) என்ற திருநங்கையை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
  • ஆனால், இவர்களது திருமணத்தை பதிவு செய்ய கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது.இதையடுத்து, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகிய தம்பதியர், தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வலியுறுத்தினர். ஆனால், திருநங்கை திருமணத்தைப் பதிவு செய்வதில் உள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகள் காரணமாக அவர்களது திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது எனக் கூறிவிட்டனராம்.
  • இதையடுத்து, இத்தம்பதியர் வழக்குரைஞர் ராஜேந்திரன் மூலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அண்மையில் தீர்ப்பு வழங்கினார். அதில், திருநங்கைகளும் சக மனிதர்கள்தாம். எனவே, அவர்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
  • அந்த உத்தரவின் அடிப்படையில் அருண்குமார்- ஸ்ரீஜா திருமணம், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் உள்ள 2ஆவது இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்பூர்வமாக ஆன்லைன் மூலம் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டது. இணை சார்-பதிவாளர் வித்யா இந்த திருமணத்தை பதிவு செய்தார். இதையடுத்து, தம்பதியர் பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றி, மோதிரம் அணிவித்து தங்களது திருமண பந்தத்தை உறுதி செய்தனர்.
அரசு ஊழி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு
  • தமி​ழக அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு அளித்து மாநில அரசு உத்​த​ர​விட்​டுள்​ளது. இதற்​கான அரசு உத்​த​ரவை மாநில நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்​டார். 
  • விலை​வாசி உயர்​வைக் கணக்​கில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜன​வரி மற்​றும் ஜூலை மாதங்​க​ளில் அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்​கான அக​வி​லைப்​படி உயர்த்தி அளிக்​கப்​பட்டு வரு​கி​றது. மத்​திய அரசு எப்​போ​தெல்​லாம் தனது ஊழி​யர்​க​ளுக்கு அக​வி​லைப்​ப​டியை உயர்த்தி வழங்​கு​கி​றதோ, அப்​போ​தெல்​லாம் தமி​ழக அர​சும் அக​வி​லைப்​ப​டியை உயர்த்தி அளிக்​கும். அந்த வகை​யில், கடந்த ஆண்டு ஜூலை​யில் மத்​திய அர​சின் அறி​விப்​பைத் தொடர்ந்து, தமி​ழக அர​சும் அறி​விப்பு வெளி​யிட்​டது.



திரு‌ப்​ப‌த்​தூ​ரி‌ல் கழு​வே‌ற்ற‌ நடு​க‌ல் க‌ண்​ட​டு‌ப்பு
  • திரு‌ப்​ப‌த்​தூ​ரி​லு‌ள்ள ச‌க்​தி​ந​க‌ர் 7-ஆவது தெரு​வி‌ல் தீ‌ப்​பா‌ஞ்​சி​ய‌ம்​ம‌ன் கோயி​லி‌ல் கள ஆ‌ய்​வினை‌ மே‌ற்​கொ‌ண்​யைா‌ம். தீ‌ப்​பா‌ஞ்​சி​ய‌ம்​ம‌ன் கோயி​லி‌ன் வெளியே 3 அடி உய​ர​மு‌ம், 2 அடி அக​ல​மு‌ம் கொ‌ண்ட அரிய வகை கழு​வே‌ற்ற‌ நடு​க‌ல் ஒ‌ன்று க‌ண்​ட​றி​ய‌ப்​ப‌ட்​டது. இது ப‌ல்​ல​வ‌ர் கால‌த்தை‌ச் சே‌ர்‌ந்​த​தா​க‌த் தெரி​கி​ற‌து. 
  • கழு​வே‌ற்​ற‌ம் எ‌ன்​பது ஆச​ன‌​வா​யி​லி‌ல் கூரிய மர‌க்​க​ழுவை ஏ‌ற்​றி‌க் கொ‌ல்​லு‌ம் த‌ண்​டனை​யா​கு‌ம். இ‌ந்​த‌க் கழு​வே‌ற்​ற‌த் த‌ண்​டனை​க‌ள் கி.பி. 7-ஆ‌ம் நூ‌ற்​றா‌ண்டு வா‌க்​கி‌ல் சம​ய‌ப்​பூ​ச‌ல் கார​ண​மாக ஏ‌ற்​ப‌ட்​டவை.
  • சிலை​யி‌ன் முக‌ம் ம‌ற்​று‌ம் மூ‌க்​கு‌ப் பகு​தி​க‌ள் சிதை‌ந்த நிலை​யி‌ல் காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. வலது கை அ​ரு‌ள்​பா​லி‌க்​கு‌ம் த‌ன்​மை​யு​ட​னு‌ம், இடது கை இ​டது தொடை​யி‌ல் வை‌த்த நிலை​யி​லு‌ம் காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. இடது கையு‌ம் சிதை‌ந்த நிலை​யி‌ல் காண‌ப்​ப​டு​கி​ற‌து. 
முதன்முறையாக புதுச்சேரியில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு உருவாக்கம்
  • இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து புதுச்சேரி காவல்துறையில் முதல்முறையாக தீவிரவாதத் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தீவிரவாதத் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி டி.ஜி.பி.நந்தா உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் 18 காவலர்கள் அடங்கிய தீவிரவாதத் தடுப்புப்பிரிவு தொடங்கப்பட்டு
ஃபேஷன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்
  • ஆண்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பில் இந்தியாவின் முன்னணி பிராண்டான `இந்தியன் டெரைன்', அதன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனியை ஒப்பந்தம் செய்திருக்கிறது. 
இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 3.7% சதவீதத்துக்கு மேல் அதிகரித்து அபார ஏற்றம்
  • இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 3.7% சதவீதத்துக்கு மேல் அதிகரித்து அபார ஏற்றம் அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1422 புள்ளிகள் உயர்ந்து 39,353 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 426 புள்ளிகள் அதிகரித்து 11,833 புள்ளிகளாக உள்ளது. 



இந்தியாவுக்கான புதிய தூதரை நியமித்தது பாகிஸ்தான்
  • பாகிஸ்தானின் இந்தியத் தூதராக இருந்த சோஹைல் மெஹ்மூத், அந்நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். 
  • அதில், இந்தியா, சீனா, ஜப்பான் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய தூதர்களை நியமிப்பதற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்தார். அதன்படி, புதிய இந்தியத் தூதராக மொயினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது பிரான்ஸ் தூதராக உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் இன்று பங்கேற்பு
  • சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெறுகிறது. 
  • 2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்.
  • இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிஷ்கேக்கில் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவுள்ளார். அந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார்.
துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர தீர்மானம்
  • சுவிஸில் தற்போது நடைமுறையிலுள்ள துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் காணப்படும் சிலவரிகளுடன் ஒத்தவகையில், சுவிஸில் தற்போது நடைமுறையிலுள்ள துப்பாக்கிப் பயன்பாட்டுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
  • இந்த வாக்கெடுப்பில் 33 வீதமானோர் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெரிஸ் மற்றும் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தது.
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி
  • இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  • விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel