Type Here to Get Search Results !

5th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




கடலாடியில் சூரிய மின் உற்பத்தித் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள வாலிநோக்கம் உப்பள வளாகத்தில் 50 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
  • அதன்படி, அந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மாரியூரில் டைடல் பார்க் நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 
  • இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.89 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு டைடல் பார்க் தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், தனது 50 சதவீத மின் தேவையை மரபு சாரா எரிசக்தியான சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்வதோடு, ஆண்டுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளுவர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம்
  • வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன ஆணையை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.



பயிர் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்ய இ-அடங்கல் செல்லிடப்பேசி செயலி அறிமுகம்
  • இ-அடங்கல் என்பது பயிர் சாகுபடி கணக்காகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும்,அப்பதிவேட்டில் விவசாயிகள் பருவ வாரியாக சாகுபடி செய்யும் பயிர்கள், விளைச்சல் விவரம், அரசு நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் இதர விவரங்களை,கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும்,கைப்பட எழுதி பராமரித்து வருகின்றனர்.இவ்வாறு கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் பதிவுகள், பிற வருவாய்த் துறை சார்ந்த மேற்பார்வை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.
  • அதைப் போல, விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை போன்ற பிற துறையினரும்,சாகுபடி விவரங்களைப் பதிவு செய்ய,தனிப் பதிவேடுகளை பராமரித்து வருகின்றனர்.
  • பல்லாண்டு காலமாக அடங்கல் பதிவேடானது, வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருவாய்த் துறையின் உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் தஙிகளது சாகுபடி விவரங்களை பதிவு செய்யவோ அல்லது பார்வையிடவோ வழிவகையின்றி, கிராம நிர்வாக அலுவலர்களின் பயிர் பதிவு விவரத்தின் அடிப்படையிலேயே அடங்கல் நகல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ-அடங்கல் செல்லிடப்பேசி செயலியை செயல்படுத்துவதன் மூலம், தங்களது நிலங்களில் சாகுபடி செய்த பயிர் விவரங்களை விவசாயிகளே பதிவேற்றம் செய்ய முடியும்.
ராஜ்காட்டில் புதிய விமான நிலைய பணி ரூ648 கோடி ஒப்பந்தம் பெற்றது ரிலையன்ஸ்
  • குஜராத் மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் ஹிராசர் நகரில் புதிய விமான நிலையம் கட்டும் பணியை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து ரூ648 கோடி ஒப்பந்தம் பெற்றுள்ளது ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரின்பெரா நிறுவனம். 
  • ராஜ்காட்டில் தற்போது உள்ள விமான நிலையத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் கட்டப்பட உள்ளது. அகமதாபாத், ராஜ்காட் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-8பி-யை இணைக்கும் வகையில் புதிய விமான நிலையம் கட்டப்படுகிறது. 
  • ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே 1,000 கி.மீ. சாலை அமைக்கும் திட்டம், 140 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 4,000 கி.மீ. தொலைவுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் லைன்களை அமைக்கும் பணி, 9,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கான டெண்டர்கள் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மோட்டார் பைக், கார்களில் கறுப்பு ஸ்டிக்கர் - உயர்நீதிமன்றம் அதிரடி
  • மோட்டார் வாகனங்களின் ஹெட்லைட்டுகளினல் இரண்டு வாரத்துக்குள் கறுப்புஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டுள்ளது. 
  • தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. அதிலும் இரவு நேரங்களிலேயே அதிகளவில் நடக்கின்றன. 
  • இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள அதிக ஒளியை உமிழும் லைட்டுகளும் ஒரு முக்கியக்காரணமாக இருந்து வருகின்றன. இந்த லைட்டுகளின் ஒளிக் கட்டுப்பாடு குறித்து பல விதிமுறைகள் இருந்தாலும் அதை யாருமேக் கண்டுக் கொள்வதில்லை.
  • அவரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இரண்டு வாரத்தில் மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel