Type Here to Get Search Results !

6th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 'இ-மதி' அம்மா சமுதாய வானொலி தொடக்கம்
  • இந்தியாவிலேய முதன்முறையாக, மகளிர் சுய உதவிக்குழுவினருடன் உரையாடும் வகையில், 'இ மதி' என்ற அம்மா சமுதாய வானொலி சேவை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கப் பட்டது. இந்த வானொலி சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
  • நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மொபைல் போன் உதவியுடன் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அரசின் செய்திகள் மற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு செல்லும் வகையில் சமுதாய வானொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூய்மையான நகரம்: இந்தூருக்கு 3 வது முறையாக விருது
  • தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.
  • இந்தியாவில் தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சத்தீஷ்கரில் உள்ள அம்பிகாபூர், கர்நாடகாவில் உள்ள மைசூர் ஆகிய நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தூய்மையான மிகப்பெரிய நகரத்துக்கான விருது அகமதாபாத்துக்கும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கும் வழங்கப்பட்டுள் ளது.
  • சிறந்த கங்கா மாவட்டத்துக்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஜவுளிக் கொள்கை: முதல்வர் வெளியிட்டார்
  • கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்களை ஊக்குவித்து மேம்படுத்த, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை வெளியிடப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. 
  • அதில், மாநிலத்தில் உள்ள 15 ஆண்டுகளுக்கு முந்தைய இயந்திரங்களின் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனப்படுத்துதலுக்கான முதலீடுகளின் மீது 2 சதவீதம் வட்டி மானியம், தொடக்கக் கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கான வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தி வழங்குதல் போன்ற சலுகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
  • கைத்தறி ரகங்களுக்கான தள்ளுபடி மானியத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடிடை, ஆண்டுக்கு ரூ.80 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்தி வழங்குதல், ஜவுளித் தொழிலின் அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிக்கும் வகையில், ஜவுளித் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஜவுளித் தொழிலில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என இந்த புதிய ஜவுளிக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கடந்த மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்
  • வேலையில்லா திண்டாட்டம் கடந்த பிப்ரவரியில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை 5.9 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 10,000 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட சர்வேயின்படி இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு, கடந்த டிசம்பர் மாதம் இந்த மையம் எடுத்த புள்ளி விவரங்கள் கசிந்தன. இதில் வேலையில்லா திண்டாட்டம் 2017-18ல் நிதியாண்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக கூறப்பட்டது. 
ரூ.5150 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
  • அரசு நலத்திட்டங்கள் விழா மற்றும் கூட்டணி கட்சிகளின் மெகா மாநாட்டிற்காக காஞ்சிபுரம்வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரூ.5150 கோடி மதிப்பிலான பல்வேறுநலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
  • இதில் பிரதமர் மோடி, விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5150 கோடி மதிப்பிலானஎண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • திருச்சி - சேலம், கரூர் - திண்டுக்கல், ஈரோடு - கரூர், இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை காணொலிமூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உலக பணக்காரர் பட்டியல்: 19ல் இருந்து 13க்கு முன்னேறிய முகேஷ் அம்பானி
  • உலக பணக்காரர்கள் பட்டியலை பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார்.
  • கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, தற்போது 13வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேசமயம், அவரது சகோதரர் அணில் அம்பானி, 1349வது இடத்தில் இருந்து வருகிறார்.
  • இந்த ஆண்டு வெளியாகி உள்ள பட்டியலிலி, அமேசானின் நிறுவனர் பெசோஸ் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel