
- தமிழகத்தில் 8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
- காவல்துறை, சிறைதுறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 62 பின்னடைவு பணியிடங்கள் உள்பட காலியாக உள்ள 8888 இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
- இந்த தேர்வு எழுத விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம். இம் மாதம் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வுக் குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் இம் மாதம் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
- இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என்றார் அவர்.
COMMON RECRUITMENT - 2019
(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)
(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)