Type Here to Get Search Results !

22nd MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கடற்படைக்கு ரூ.1,200 கோடியில் 3-டி ரேடார்கள் தயாரிப்பு: டாடா பவருக்கு வழங்கியது மத்திய அரசு
  • இந்தியக் கடற்படையில் பயன்படுத்தக் கூடிய அதிநவீன வான் கண்காணிப்பு ரேடார்களை, ரூ.1,200 கோடியில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறையிடமிருந்து டாடா பவர் ஸ்ட்ரேடஜிக் என்ஜினியரிங் டிவிஷன் (எஸ்இடி) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
  • போர்க் கப்பல்களில், வான் கண்காணிப்புக்காகப் பொருத்தப்படும் அதிநவீன 3-டி ரேடார்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா எஸ்இடி நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் 23 ரேடார்களை எங்கள் நிறுவனம் தயாரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் அந்த ரேடார்கள் தயாரிக்கப்பட்டு, கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.
  • வெளிநாட்டு பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரித்து, கொள்முதல் செய்வதற்கான 2013-ஆம் ஆண்டின் மத்திய அரசு கொள்கை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை
  • பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை ஒட்டி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாமல் உள்ளது. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட எதிர்ப்பு எழுந்தது. இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன
  • பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி, 'ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே முழுக் காரணம் ஆகும். இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடி கிரிக்கெட்டை அரசியல் ஆக்கி உள்ளனர்.
இந்தியாவில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடல்நீர் சுத்திகரிப்பு மையம்! ஐஐடி சென்னை சாதனை
  • இந்தியாவில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை ஏற்படுத்தி ஐஐடி சென்னை சாதனை படைத்துள்ளது.
  • நம்மாநிலத்தில் ஏற்கனவே கடல்நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டாலும் கடல் நீரில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. 
  • ஏனெனில் நாட்டில் தண்ணீர் பிரச்னை மிக அதிகமாகும்போது கடல்நீர் சுத்திகரிப்புதான் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இருக்கும். இந்நிலையில் நாட்டில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடலர்நீர் சுத்திகரிப்பு மையம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினை மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் நாள் ஒன்றுக்கு 10,0000 லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும்.
  • இந்திய புவியியல் அறிவியல் மையத்தின் ரூ.1.22 கோடி நிதி உதவியுடன் இந்திய அறிவில் ஆய்வுக்கழகம், சென்னை மூலமாக இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது
  • பேராசிரியர் திரு.மணி, (IIT-M இயந்திரவியல் துறையின் குளிர்பதன மற்றும் குளிர்சாதன ஆய்வு) அவர்கள் கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு மையம் எப்படி செயல் படுகிறது என்பதை விளக்கினார்.
  • இந்த சுத்திகரிப்பு மையத்தில் கடல்நீரை கொதிக்கவைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாட்டிற்கு ஒரு நாளைக்கு 15 கேவி அளவுள்ள மின்சாரம் தேவைப்படும், எனவே இவற்றைப்பூர்த்தி செய்ய சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை சூரிய ஒளி இருக்கும்போது மட்டுமே செயல்படும், அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும்.



பழநி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த மாலைக்கோயில் கண்டுபிடிப்பு
  • பழநி அருகே கணக்கன்பட்டியில் கிபி 18ம் நூற்றாண்டை சேர்ந்த மாலைக்கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
  • மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கட்டிடத்தின் முன்புறம் மண்ணிற்குள் புதைந்த நிலையில் ஒரு சிற்ப தொகுதி உள்ளது. இக்கட்டிடம் மாலைக்கோயில் வகையை சேர்ந்தது. மாலைக்கோயில் என்பது நாயக்க மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் மறைவிற்குப்பிறகு அவர்களின் நினைவாக எழுப்பப்படும் சமாதி கோயில். ஒற்றைக் கருவறை விமானத்துடன் இந்தக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானத்திற்கு சுண்ணாம்புக்காரையை பயன்படுத்தியுள்ளனர். கோயிலின் முன்புறம் மண்ணில் புதைந்த நிலையில் உள்ள சிற்பம் கருவறையின் உள்ளே இருந்ததாகும். ஒரு பாளைக்காரர் தனது 4 மனைவிகளுடன் வணங்கிய நிலையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் நினைவாக இந்த மாலைக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் கட்டிட அமைப்பும், சிற்ப அமைப்பும் கிபி 18ம் நூற்றாண்டை சேர்ந்தவை என எளிதில் உணர்த்துகிறது. 
பிரிவினைவாதம் தூண்டுதல்: யாசின் மாலிக் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை
  • பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, யாசின் மாலிக் இயக்கத்துக்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்து உள்ளது.
  • யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
  • வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸை வேட்பாளராக அங்கீகரித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் படிவங்களில் கைரேகை வைக்கும்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதே போன்று இந்த கைரேகை டாக்டர் பாலாஜியின் முன்னிலையில் தான் பெறப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. 
  • மேலும் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக பெருவிரல் ரேகை இடம்பெற்றுள்ளது. இதனை தேர்தல் ஆணையம், ஒரு கடிதத்தின் வாயிலாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது சட்ட விரோதமானது. எனவே ஏ.கே.போஸை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனு படிவங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel