Type Here to Get Search Results !

14th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. புதிய துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு
  • தமிழக ஆளுநரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராககே.பிச்சுமணியை நியமித்துள்ளார். பிச்சுமணி பதவியேற்கும் நாளில்இருந்து 3 ஆண்டுகள் துணைவேந்தர் பதவியில் இருப்பார்.
  • பேராசிரியர் பிச்சுமணி ஆசிரியர் பணியில் 37 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறையில் சிஎஸ்ஐஆர் கவுரவ விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். ஜப்பானில் உள்ள சினிகா அகாடமியிலும் தைபெய் மற்றும் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் கவுரவப் பேராசிரியராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
  • கடந்த 2016-ம் ஆண்டு வேதியியல் பாடப்பிரிவில் யுஜிசி சிறப்பு பேராசிரியர் விருது பெற்றஅவர், காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறையில் சிஎஸ்ஐஆர் கவுரவ விஞ்ஞானியாக நியமிக் கப்பட்டார்.



எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் '112'- வருகிற 19-ந்தேதி அமலுக்கு வருகிறது
  • தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு '100' என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு '101' என்றும், ஆம்புலன்சுக்கு '108' என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு '1090' என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் (ஹெல்ப்லைன்) உள்ளன.
  • இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் '112' என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் '911' என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • இந்த திட்டம், இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இந்நிலையில், தமிழநாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வருகிற 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கிறது இந்தியா புதிய ஒப்பந்தம்
  • ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற ஏ.கே.203 ரக இயந்திர துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளதாக தெரிகிறது.
  • கலாஷ்நிகோவ் ரக இயந்திர துப்பாக்கிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏ.கே.74, ஏ.கே.47, ஆர்.பி.கே. 74 போன்ற துப்பாக்கிகள், கலாஷ்நிகோவ் ரகங்களைச் சேர்ந்தவை ஆகும்.
  • தற்போதைய சூழலில், இந்த வகை இயந்திர துப்பாக்கிகளே பெரும்பாலான நாடுகளின் ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையில், இந்த துப்பாக்கிகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா விலைகொடுத்து வாங்கி வந்தது.
  • இந்நிலையில், ஏ.கே.47 ரக துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திடவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, 7.5 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel