Type Here to Get Search Results !

13th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




அண்ணா பல்கலை.யில் தமிழ் இணைய மாநாடு: செப்டம்பர் மாதம் நடக்கிறது
  • பதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20 முதல் 22-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
  • உத்தமம் நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கணினித் தமிழ் ஆய்வு குறித்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதுவரை 17 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. இப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 18 ஆவது மாநாடு நடத்தப்பட உள்ளது.
எந்த ஜாதியும் இல்லை எந்த மதமும் இல்லை! இந்தியாவிலேயே முதன்முறையாக சான்றிதழ் பெற்ற பெண்மணி
  • இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார்.
  • வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பார்திபராஜாவின் மனைவி சினேகா தான் எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார்.
ஐசிஏஐ புதிய தலைவராக பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு
  • இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவன (ஐசிஏஐ) புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கணக்குத் தணிக்கையாளர் அதுல் குமார் குப்தா தேர்வாகியுள்ளார்.
396 கோடி செலவில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா! - முதல்வர் பழனிசாமி
  • சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்-79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயமானது புதிதாக 2 மாநகராட்சிகள்!!தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள்
  • ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.இதை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.
  • இந்நிலையில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய மாநகராட்சி சேர்க்கப்பட்ட நிலையில் மொத்தம் தமிழகத்தில் 14 மாநகராட்சிகள் உள்ளது.



ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை- வங்காளதேசத்தில் புதிய சட்டம்
  • வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'விலங்குகள் நலச்சட்டம்' விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது.
  • இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கியுள்ளது. இது 'விலங்குகள் நலச்சட்டம் 2019' என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது.
  • இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்களுக்கு 5% இடஒதுக்கீடு
  • ரா ஜஸ்தானில், குஜ்ஜார் சமூகத்தைச் சார்ந்த மக்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கடந்த 2007-ம் ஆண்டுமுதல் போராட்டம் நடத்திவருகின்றனர். 
  • கடந்த ஜனவரி மாதம், பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
  • ஜ்ஜார் உள்ளிட்ட ஐந்து வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில், அமைச்சர் பி.டி.கல்லா தாக்கல் செய்துள்ளார்.
சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.250 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. 
  • கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டிருப்பது, சணல் பயிர் சாகுபடியில் முதலீடு அதிகரிப்பதை உறுதி செய்யும். இதனால், நாட்டில் சணல் உற்பத்தி அதிகரிக்கும் என்றார். 
  • குன்னூரில் தடுப்பூசி தயாரிப்பு மையம்: இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் உள்ள பாஸ்டியர் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், புதிதாக வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. 
  • தட்டம்மை, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும். 
  • இதன் மூலம் உயிர்காக்கும் தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
  • மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: இதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக மூலதன மானியம் அளிக்கும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதற்காக அரசுக்கு ரூ.2,900 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் உற்பத்தி பொருள்களின் தரத்தை அதிகரித்தல், கழிவுகள் அதிகரிப்பதை தடுத்தல், உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் உதவுகிறது. 



ரஃபேல்; காங்கிரஸை விட பாஜக அரசின் விலை ஒப்பந்தம் மலிவானது: சிஏஜி அறிக்கை
  • நாடாளுமன்றத்தில் தலைமைத் தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், ''இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை (India Specific Enhancements) பார்க்கும்போது பாஜக அரசின் ஒப்பந்தம் 17.08% மலிவாக உள்ளது. பொறியியல் சார்ந்த அம்சங்கள் மற்றும் தடவாளங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ரஃபேல் ஒப்பந்தம் 6.54% விலை அதிகமாக உள்ளது.
  • மொத்தத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2007-ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் 36 போர் விமானங்களின் விலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 2.86% குறைவாக உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
விவாகரத்துக்கான காரணத்தில் தொழுநோய் நீக்கம்: சட்ட மசோதா நிறைவேற்றம்
  • ணவன் - மனைவி இடையே விவாகரத்துக் கோர தீராத நோய் மற்றும் மலட்டுத் தன்மை போன்றவை தகுதியாக இருந்தது.
  • அந்த தீராத நோய் பட்டியலில் இதுவரை தொழுநோய் இருந்தது. ஆனால் தற்போது தொழுநோயைக் குணப்படுத்தலாம் என்பதால், விவாகரத்துக் கோருவதற்கான காரணப் பட்டியலில் இருந்து தொழுநோயை நீக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டதிருத்த மசோதாவைக் கொண்டு வந்தது.
  • இந்த சட்ட திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • எனவே, இந்த சட்டதிருத்தம் மூலம் தொழுநோயைக் காரணம் காட்டி கணவரோ, மனைவியோ விவகாரத்துக் கோர முடியாது.
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை
  • பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும். தென் இந்தியாவில் குறிப்பாக கேரளாவை மையமாக வைத்து இயங்கி வருகிறது.
  • தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் கால கட்டங்களில் மக்களுக்கு பல்வேவேறு உதவிகளை செய்துள்ளது. மேலும் இரத்த தானம் உள்ளிட்ட சமூக பணியிலும் இந்த அமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசனது, லவ் ஜிகாத், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு இந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆதரவு அளிப்பதாக பொய்யான ஒரு காரணத்தை கூறி, இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தீவிரம் காட்டுவதாக பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • இந்நிலையில், பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு ஜார்கண்ட் மாநில அரசு நேற்று செவ்வாய்கிழமை முதல் தடை விதித்து அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • இதற்கு மாநில அரசு காரணம், அம்மாநிலத்தில், பகூர் மாவட்டத்தில் அதிக ஆதரவுடன் இயங்கி வரும் பிஎஃப்ஐ அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் உடன் தொடர்புடையது. பிஎஃப்ஐ (பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா) அமைப்பில் இருந்து பலர் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர். எனவே ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த அமைப்புக்கு தடை விதிக்கிறோம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel