Type Here to Get Search Results !

11th & 12th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF






4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • தமிழகத்தில் அடுத்த 4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து மேலும் காலதாமதம் கூடாது எனவும் மாநில அரசுக்கு நேற்று அறிவு றுத்தியுள்ளது.
  • தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அடுத்த 3 மாதத்தில் உருவாக்கி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அமைப்பை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது திருச்சி விமான நிலையம்
  • டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலுள்ள விமானநிலையங்கள் தவிர, நாடு முழுவதும் 52 இடங்களில் இரண்டாம் நிலை(நான்-மெட்ரோ) விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை(ஏதேனும் ஒரு மாதத்தில்) இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தால் நியமிக்கப்படும் தனியார் நிறுவனம் மூலம் சர்வே நடத்தப்படும்.
  • இதன்படி, 2018-ம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான அரையாண்டுக்கான சர்வே முடிவுகளை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது. 
  • இதில் ராய்ப்பூர்(4.86 புள்ளிகள்) முதலிடமும், திருச்சி(4.82 புள்ளிகள்) 2-ம் இடமும், உதய்ப்பூர்(4.80) 3-ம் இடமும் பிடித்துள்ளன. இதேபோல, மதுரை விமானநிலையம் (4.72 புள்ளிகள்) 7-வது இடத்தையும், தூத்துக்குடி விமான நிலையம் (4.40 புள்ளிகள்) 28-வது இடத்தையும் பிடித்துள்ளன.

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம்
  • தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.
  • இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவர்.

திருப்பதி லட்டுக்கான நெய் கொள்முதல்: ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவில்லட்டு பிரசாதம் செய்வதற்கு தேவையான நெய்யை ஆவினில் இருந்து கொள்முதல் செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படும் நெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரி அறிவிப்புவெளியிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் (சேலம் - ஈரோடு ஒன்றியங்கள்) டெண்டருக்கு விண்ணபித்திருந்தது.
  • இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில்ரூ.23 கோடி மதிப்பில், 7.24 லட்சம் கிலோநெய் கொள்முதல் செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு முன்பு 2003 - 2004 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனத்துடன் 72,400 நவீன ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
  • அமெரிக்க நிறுவனமான சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் பிப்ரவரி 12ம் தேதியன்று SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ஜனவரி, 2018-ல் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் 72,400 ரைபில்கள், 93,895 கார்பைன்கள் (சிறு ஆட்டமேடிக் ரைபில்) வாங்க அனுமதி அளித்தது. இதன் உத்தேச தொகை ரூ.3,547 கோடி. பெரிய ரைபில்கள் 7.63மிமீ, கார்பைன்கள் 5.56 மிமீ அளவு கொண்டதாகும்.
  • இந்த 72,400 ரைபில்களில் ராணுவத்திற்கு 66,400, கடற்படையினருக்கு 2000, இந்திய விமானப்படையினருக்கு 4000 துப்பாக்கிகளும் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து 12 மாதங்களில் ஒட்டுமொத்த ரைபில்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும்.

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ரூ.1,157 கோடிசெலவிட்ட நிதி அமைச்சகம்: சிஏஜி அறிக்கையில் தகவல்
  • நாடாளுமன்றத்தில் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  • கடந்த 2017-18-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ததில், நாடாளுமன்றத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் ரூ.1,156.80 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
  • கூடுதலாகச் செலவிட்டதற்கு எந்தவிதமான பொருத்தமான சேவையையோ அல்லது புதிய செயல்பாடு குறித்த திட்டமிடலோ நிதி அமைச்சகத்திடம் இல்லை. நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செலவினத்துக்கு முன்கூட்டியே நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெற தவறிவிட்டது.
  • பொதுக் கணக்குக் குழுவின் 83-வது அறிக்கையில்கூட மானியங்கள், உதவித்தொகை அளித்தது குறித்து குறிப்பிட்டு இருந்தது. அதில் அமைச்சகங்கள், துறைகள் நிதித்துறை விதிகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை, தவறான பட்ஜெட் கணக்கீடுகளை அளித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.



வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத்துக்கு புதிய கட்டுப்பாடு மசோதா தாக்கல்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதா மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களை (NRI) திருமணம் செய்திருந்த பெண்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அதில் அவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அவர்களை திருமணம் செய்துவிட்டு கொடுமை படுத்தியதாக தெரிவித்திருந்தனர். வெளியுரவுத் துறை அமைச்சகமும் கடந்த மூன்று ஆண்டுகளில் 4300 புகார்கள் வந்துள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் கட்டுப்பாடு கொண்டுவரப் போவதாக தெரிவித்தது.
  • இந்த மசோதாவின்படி வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்யவேண்டும். அத்துடன் இந்த மசோதா பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளவிருக்கிறது. அதன்படி 30 நாட்களுக்குள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் திருமணத்தை பதிவுசெய்யாவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும்.
  • மேலும் இந்த மசோதா இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973லும் திருத்தம் கொண்டுவருகிறது. அதில் நீதிமன்றமங்கள் இந்திய வெளியுரவுத் துறையின் இணையதளத்தின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம் என்றிருக்கிறது. மேலும் வெளிநாடுவாழ் இந்தியர் நீதிமன்றத்தின் சம்மனிற்கு ஆஜாராகவில்லை என்றால் அவரது சொத்துகளையும் முடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் ஆஜராகாத வெளிநாடுவாழ் இந்தியரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் அறிவிக்கலாம் என்று இந்த மசோதா தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம்: குடியரசு தலைவர் ராம்நாத் திறந்து வைத்தார்
  • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் வழங்கி கவுரவிக் கப்பட்ட நிலையில், அவரது உருவப்பபடம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைப்பது குறித்து கடந்த அண்டு இறுதியில் மக்களவை சபாநாயகர் தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஒப்புதல் அளித்ததின் பேரில், வாஜ்பாய் உருவப்பபடம் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பிப்ரவரி 12-ம் தேதி வாஜ்பாய் படம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
  • அதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

ஆசியாவிலே மிகப்பெரிய ராணுவ விமான கண்காட்சி
  • இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி பெங்களூரில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வெளிநாட்டு போர் விமானங்கள் பங்கேற்கின்றன.
  • இந்த கண்காட்சியை நடத்துவதால் இந்திய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் , அதிகரிக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி ராஜஸ்தான் மாநிலம் மாநிலம் குக்கரனில் இம்மாதம் 16ம் தேதியன்று நடக்கின்றது.இதில் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் பரிசோதிக்கப்பட உள்ளது.




அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது இந்தி

  • ஐக்கிய அரபு அமீரகங்களில் சுமார் 50 லட்சம் பேர் வசித்துவருகின்றனர். இந்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வெளிநாட்டினர் ஆவர்.
  • அவர்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். எனவே, இங்குள்ள நீதிமன்றங்களில் இந்தியையும் அலுவல் மொழியாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.
  • இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தியை மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக அபுதாபி அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக, இனி அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள், வாத, பிரதிவாதங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிகள்இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

மூன்று கிராமி விருதுகளை அள்ளிச் சென்றார் 'லேடி காகா'
  • உலக அளவில் சிறந்த இசைக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் தான் இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
  • 84 பிரிவுகளின் கீழ‌ வழங்கப்படும் விருதுகளில் 3 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளார் பாப் பாடகி லேடி காகா. Joanne இசை ஆல்பத்துக்காக பெஸ்ட் பால் சோலோ பர்ஃபார்மன்ஸ் மற்றும் ஷாலோவ் ஆல்பத்துக்காக இரு விருதுகளையும் லேடி காகா பெற்றுள்ளார். பெஸ்ட் அமெரிக்கன் ரூட்ஸ் பர்ஃபார்மன்ஸ், பெஸ்ட் அமெரிக்கன் ஆல்பம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பரண்டி கார்லேவும் மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார்.
  • இது தவிர பெஸ்ட் ராப் பிரிவுக்கான விருதை பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்ததுள்ளார். இது அவரது ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
  • பிரிட்டன் பாடகரான டுவா லிபா, சிறந்த புதுமுக கலைஞர் பிரிவுக்கான விருதை வென்றுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தபடி அவர் மேடையேறி சென்றார். மேலும் முதன்முறையாக பாப் பாடகி அரியானா கிராண்டே, கிராமி விருதை வென்றுள்ளார். ஸ்வீட்நெர் இசை ஆல்பத்தில் பாடியதற்காக இவருக்கு best pop vocal album என்ற பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பங்கேற்காததால், கிராண்டேவுக்கு பதிலாக விழா குழுவினரே அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
  • சில்டிஷ் காம்பினோவின் திஸ் இஸ் அமெரிக்கா பாடல், இந்த ஆண்டுக்கான சிறந்த பாடல் பிரிவுக்கான கிராமி விருதை வென்று அசத்தியுள்ளது. துப்பாக்கி வன்முறையால் ஏற்படும் உயிரிழப்புகளை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் வெளிய‌டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெடரேஷன் கோப்பை தேசிய எறிபந்துப் போட்டியில் கோப்பை வென்ற தமிழக மகளிர்
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பைக்கான தேசிய எறிபந்து போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது!
  • விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாது நடந்த இறுதிப் போட்டியில், கேப்டன் வர்ஷா தலைமையிலான வீராங்கணைகள் 15 - 10 ; 15- 12 என்ற கணக்கில் மத்தியப் பிரதேச அணியைத் தோற்கடித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel