Type Here to Get Search Results !

10th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




பிரதமர் தொடங்கி வைத்தார் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில்
  • சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து தொடங்கி வைத்தார். அத்துடன் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
  • இந்த மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இதனையடுத்து சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
  • இதேபோல திருச்சி விமான நிலையத்தின் 2-வது முனையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
  • கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. படகுகள் சீரமைப்பு பணிகள், மீன்பிடி வலைகள் வாங்க மீனவர்களுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • கஜா புயலால், மீனவர்கள் படகுகளை இழந்து, இரண்டு மாதமாக தவித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு 85 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.



தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
  • தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரயில்வே பட்டம் வென்றது.
  • முன்னதாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரோலிய அணி 4-1 என பஞ்சாப் சிந்து வங்கியை வென்று வெண்கலம் வென்றது.
  • ஹிஸாரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் கர்நாடக அணி 3-0 என கூர்க்கையும், ம.பி. ஹாக்கி அகாதெமி 3-1 என போபாலையும், மகாராஷ்டிரா 6-0 என சிஆர்பிஎஃப்பையும், பஞ்சாப் 3-0 என கேரளத்தையும் வீழ்த்தின.
இந்திய விமானப் படைக்கு புதிதாக 4 "சினூக்' ஹெலிகாப்டர்கள்
  • விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்படும். இந்திய விமானப் படையில் நிகழாண்டு இறுதியில் முறைப்படி இந்த ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்படும்.
  • அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
  • முதல் கட்டமாக, 4 சினூக் ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு போயிங் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்களின் வரவால், இந்திய விமமானப் படையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றையும், ராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இதுதவிர, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக அகதிகளை வெளியேற்றுவதற்கும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel