Type Here to Get Search Results !

உபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்

  • காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணார் உபவடி நிலத்தை தட்பவெப்ப நிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டமானது, (Climate Adaptation in Vennar Sub-Basin in Cauvery Delta Project (CAVSCDP)) இந்திய அரசின் 2008- ம் ஆண்டின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் பற்றிய தேசிய செயல் திட்டத்தையும் (NAPCC) மற்றும் அதன் தேசிய நீர் மிஷன் (NWM) ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. 
  • இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணார் உபவடி நிலத்தைச் சேர்ந்த 6 ஆறுகளையும் அந்த 6 ஆறுகளினால் பயன் பெறும் 78,000 ஹெக்டேர் நிலங்களையும், அதன் உள்கட்டமைப்பு முதலீடுகள், நீர் வள மேலாண்மை மற்றும் வெள்ள ஆபத்து குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது.



திட்டம்
  • இத்திட்டம் புதிய வடிவமைப்பின் மூலம் பாசன அமைப்பை நவீனமயமாக்கவும், கட்டுமானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை சார்ந்தும் ஏற்படுத்தபட்டுள்ளது.
  • இத்திட்டம் நதிகளையும் / கால்வாய்களையும் முறைப்படுத்தி அதன் கரைகளை வலுப்படுத்துவதும், ஆற்றில் படுகையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுவதும், தலைப்பு / குறுக்கு ரெகுலேட்டர்களையும், வடிகால் வெளியேற்ற புனரமைப்பு, பாசன உள்வரத்து மற்றும் வெளியேற்ற புனரமைப்பு முதலியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வெண்ணார் உபவடி நில ஆறுகளான ஹரிச்சந்திராநதி ஆறு, அடப்பார் ஆறு, பாண்டவையார் ஆறு, வெள்ளையார் ஆறு, வளவனார் ஆறு மற்றும் வேதாரண்யம் கால்வாய் ஆகியவற்றை நெறி படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel