Sunday, 29 April 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS APRIL 2018 TAMIL PDF - 27th, 28th & 29th APRIL 2018

Tnpsc Shouters



செங்கோட்டையை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்த டால்மியா குழுமம்
  • டெல்லி செங்கோட்டையினை பாரம்பரிய சின்னங்களை தத்தெடுக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டால்மியா பாரத் குழுமம் 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது!
  • இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் கலந்துகொண்ட இண்டிகோ நிறுவனம், GMR குழுமம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி ரூ. 25 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை டால்மியா பாரத் குழுமம் வென்றுள்ளது.
  • அந்த வகையில் நாட்டில் உள்ள 105 நினைவுச் சின்னங்களை ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக டெல்லி செங்கோட்டையினை தற்போது ஏலம் விட்டது. 
தென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு
  • வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதனால் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.
  • இந்த சந்திப்பால் இரண்டு நாடுகளுக்கும் இருந்த பிரச்னை மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது. 2015ல் வடகொரியா தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து முழுவதுமாக வேறுபட ஆசைப்பட்டு, தென் கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது.
  • இரு நாட்டு அதிபர்களும் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர். இதையடுத்து, கிம் ஜாங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார்.
  • அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மணிநேரம் அதிகமாகி உள்ளது. எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தனர்.



மணிமேகலை பிரசுரத்துக்கு தமிழக அரசின் பரிசு
  • பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின், தமிழ் கவிஞர் நாள் பரிசு, மணிமேகலை பிரசுரத்தின் இரண்டு நுால்களுக்கு வழங்கப்பட்டது.
  • மணிமேகலை பிரசுரம் சார்பில் வெளியிடப்பட்ட, பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி எழுதிய, 'பண்டை தமிழர் பண்பாடு - ஒரு புதிய நோக்கு' என்ற நுாலுக்கும், நுணாவிலுார் கா.விஜயரத்தினம் எழுதிய, 'காலத்தை வென்ற காவிய மகளிர்' என்ற நுாலுக்கும், பரிசுகள் கிடைத்தன.
பொதுச் செயலாளராக மீண்டும் சுதாகர் ரெட்டி தேர்வு
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில் சுதாகர் ரெட்டி தேர்வானார். 
சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தல்
  • சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா மூன்று தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
  • சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் செர்பியாவில் நடைபெற்றது. இதன் ஆடவருக்கான 91 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சுமித் சங்வான் - ஈகுவடாரின் கேசிலோ டோரெஸ் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • அதேபோன்றும், 49 கிலோ எடைப் பிரிவில் ஹிமான்ஷு சர்மா - அல்ஜீரியாவின் முகமது டெளவாரெக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
  • ஆடவருக்கான இதர எடைப் பிரிவுகளில் லால்தின்மாவியா 52 கிலோ எடைப் பிரிவில், வரிந்தர் சிங் 56 கிலோ எடைப் பிரிவில், பவன் குமார் 69 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றில் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • அதேபோன்று, 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் நரேந்தரும், 48 கிலோ பிரிவில் ராஜேஷ் நர்வாலும் வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றனர்.
  • இதனிடையே, மகளிருக்கான 51 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் - கிரீஸின் அய்கெடெரினியை தோற்கடித்து தங்கம் வென்றார்.
  • இதர இந்திய வீராங்கனைகளில், ஜமுனா போரோ 54 கிலோ எடைப் பிரிவில், ரால்தே லால்ஃபகாமாவி 81 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றில் வீழ்ந்து வெள்ளியை கைப்பற்றினர்.
  • பிரியங்கா தாகுர் 60 கிலோ எடைப் பிரிவில், ருமி கோகோய் 75 கிலோ எடைப் பிரிவில், நிர்மலா ராவத் 81 கிலோ எடைப் பிரிவில் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
  • ஆக மொத்தம், நேற்று நிறைவடைந்த பெல்கிரேட் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
ஜிஎஸ்டி வசூல் அமோகம்: 8 மாதங்களில் ரூ.7.41 லட்சம் கோடியை குவித்த நிதி அமைச்சகம்
  • நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதன் காரணமாக ரூ.7.41 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
  • இது மாதம் ஒன்றுக்கு சராரியாக Rs 89,885 கோடியாகும்.
  • இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.1.19 லட்சம் கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.1.72 லட்சம் கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.3.66 லட்சம் கோடியும், செஸ் மூலம் ரூ.62,021 கோடியும் வசூலாகி உள்ளது.
இந்தியாவின் 2021 சாம்பியன் கோப்பை போட்டிகள் உலகக் கோப்பையாக மாற்றம்
  • வரும் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை 20 ஓவர் போட்டிகள் உலகக் கோப்பை போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி அறிவித்துள்ளது.
  • கொல்கத்தாவில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் கமிட்டி பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக அமிதாப் சௌத்ரி கலந்துக் கொண்டார். அப்போது நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்த விவாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
  • இதன் படி வரும் 2019 ஆம் வருடமும் 2023 ஆம் வருடமும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருந்தது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாம்பியன் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Thursday, 26 April 2018

குரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TNPSC GROUP 1A RESULT PUBLISHED - ASSISTANT CONSERVATOR OF FORESTS IN THE TAMIL NADU FOREST SERVICE (2015-16 & 2016-17)-PRELIMINARY EXAMINATION

Tnpsc Shouters
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 1 ஏ பிரிவில் அடங்கிய, உதவி வன பாதுகாவலர் பதவியில், 14 இடங்களுக்கு, முதல்நிலை எழுத்து தேர்வு, 2017 டிச., 17ல் நடத்தப்பட்டது. இதில், 10 ஆயிரத்து, 459 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில், முதன்மை எழுத்து தேர்வுக்கு, 472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை, 28 முதல் ஆக., 4 வரை, சென்னையில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS APRIL 2018 TAMIL PDF - 25th & 26th APRIL 2018

Tnpsc Shouters



ச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே எம் ஜோசப் ஆகிய இரு பெயர்களை கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதில் இந்து மல்ஹோத்ராவுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. 
  • இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதியளித்திருந்தது. பொதுவாக மூத்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய பின் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்படுவர்.



கொல்லிமலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு
  • நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அண்மையில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டபோது, மலை கிராம மக்கள் அளித்த தகவலின்படி வீராகனூர்பட்டியில் இருந்த செக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வட்ட வடிவில் சற்று உயர்ந்த விளிம்புடன், உடைந்தும் சிதைந்தும், சில பகுதிகள் தேய்ந்தும் இருந்தன. இந்த செக்கு வெகு காலமாக பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்ததது. 
  • இந்த செக்கு கல்வெட்டு எழுத்துகளைக் கொண்டு பார்க்கும்போது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். தமிழும் கிரந்தமும் கலந்த நடையில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தில் வழங்கப்பட்ட செக்கு கொடை கல்வெட்டாகும். எழுத்துகள் சிதைந்தும் உடைந்தும் காணப்பட்டதால், அதனை படிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. விளம்பு பகுதியில் துவங்கி, உட்குழி நோக்கி சுருளாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 
ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று வீரர்கள் அபாரம்
  • ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுகா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
  • ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.
  • உகென்ஜ் நகரில் நடைபெறும் ஆசிய போட்டிகளின் இளையோர் பிரிவில் மொத்தம் 250 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் ஜெரேமி வென்று அசத்தியுள்ளார்.
  • மேலும், அவர் இரண்டு புதிய தேசிய சாதனைகளையும் படைத்து இந்தியாவை சிறப்பித்துள்ளார்.
  • மற்றொரு வீரரான சிதந்த் கோகோய் சிறுவர் பிரிவில் வெண்கலம் வென்றார். மேலும் மகளிர் பிரிவில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கிம் ஜோங் உன் - மூன் ஜே பேச்சுவார்த்தை
  • வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆன பின் முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். 
  • இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற கிம்மிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.முன்னதாக, கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக 6 அணு ஆயுத சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரள வைத்தார். 
  • இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து மேற்கொண்ட சமாதான முயற்சியினால் வட, தென் கொரிய அதிபர்கள் சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு மே மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 24 April 2018

தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National Panchayati Raj Day - 24th April)

Tnpsc Shouters



தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24
  • பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.இதை நினைவுகூறும் விதமாக
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day)  ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.
  • அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.
  • இச்சட்டத்தின் அடிப்படையில் ஊராட்சி மன்றத்தின் மூலம் கீழ்கண்ட பணிகள்நிறைவேற்றப்படுகின்றன.
  • தெரு விளக்குகள் அமைத்தல்.
  • ஊர்ச் சாலைகள் அமைத்தல்
  • குடிநீர் வழங்குதல்.
  • கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
  • சிறிய பாலங்கள் கட்டுதல்.
  • வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
  •  கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
  •  தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
  •  இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
  • இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பஞ்சாயத்து தலைவர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பஞ்சாயத்து தலைவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இக்கொண்டாட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது.

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS APRIL 2018 TAMIL PDF - 24th APRIL 2018

Tnpsc Shouters



மருத்துவ மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு கிடையாது உச்சநீதிமன்றம்
  • தமிழக அரசின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ மேற்படிப்புக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த புதிய விதிமுறைகளின் 50% இட ஒதுக்கீடு ரத்து செய்துள்ளது. 
  • இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விதிகளின்படி இனி 50% இட ஒதுக்கீடு கிடையாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் தான் பொருந்தும் என கூறி 50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தெரிவித்திருந்தது. 
  • இந்த தீர்ப்பை எதிர்த்து மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மேற்படிப்பில் சேர அளிக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்.
  • இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு இல்லை என தெரிவித்தது. அதுமட்டும் இன்றி இந்தாண்டு மட்டும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டுபிடிப்பு
  • ஆரிராசன் காடு என்ற தனியார் எஸ்டேட்டில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தொல்காப்பியம் என்ற நூல் ஆநிரைப்போரை பூசல் என குறிப்பிடுகிறது. கால்நடைகளே அப்போது மக்களின் பெரும் சொத்தாக இருந்துள்ளது.
  • ஓலக்கோடு பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் ஆநிரைப்போரின்போது பசுக்களை காத்து போரிட்டு இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும். இந்த நடுகல்லானது ஒரு பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
  • 100 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் உள்ளதாக நடுகல் உள்ளது. துவிபங்க நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். இடது பக்கம் திரும்பிய நிலையில் முகம், வலது கையில் குறு வாள், இடது கையில் நீண்ட வில்லுடன் வீரன் உள்ளான். கையில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்கள் இரண்டும் இடது பக்கம் திரும்பி போருக்கு விரைந்து செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான்.
  • வீரனுக்கு மேல்புறமும், இடது புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. எழுத்துக்கள் வட்டெழுத்தால் எழுதப்பட்டுள்ளன. எழுத்தை கொண்டு இவை 6 அல்லது 7-ம் நூற்றாண்டு என முடிவு செய்யலாம். மொத்தம் 14 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன.
  • "சிரி வலிகையார்" என கல்வெட்டு தொடங்குகிறது. மன்னர் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் இந்தப்பகுதியானது சுதந்திரமாக செயல்பட்டதை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. தகினூர் என்ற ஊர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
வங்கதேசம் - இந்தியா பஸ் போக்குவரத்து
  • வங்கதேசம் - இந்தியா - நேபாளம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில், பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.இம்மாதம், 27ல், இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையில், நட்புறவை வளர்க்கும் வகையில், முத்தரப்பு கூட்டம் நடக்க உள்ளது.'
  • வீடியோ கான்பரன்சிங்' மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில், பஸ் போக்குவரத்துக்கான பாஸ்போர்ட் மற்றும், 'விசா' நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதன் முன்னோட்டமாக, வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து, இந்தியா வழியாக நேபாளத்துக்கு, நேற்று முன் தினம் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.
  • தாகாவில் இருந்து, 45 பயணியருடன் புறப்பட்ட பஸ், இந்தியாவின், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி வழியாக, இன்று நேபாளத்தை சென்றடையும்.வங்கதேசத்தின், ரங்பூரிலும், இந்தியாவில், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியிலும், இரவு நேரத்தில் பயணியர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



சேமநல நிதி வட்டி விகிதம் 7.6%: தமிழக அரசு உத்தரவு
  • அரசு ஊழியர்களுக்கான பொது சேமநல நிதிக்கான (ஜிபிஎஃப்) வட்டி விகிதம் 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் கடந்த ஜன. 1-ஆம் தேதி முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வட்டி விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது.
  • ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான காலாண்டு காலத்தில் வட்டி விகிதத்தின் அளவை 7.6 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 
இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் 5 மாநிலங்கள் நிதி ஆயோக் சிஇஓ தகவல்
  • சர்வதேச அளவில் இந்தியா பின் தங்க உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரசேதம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்கள் தான் காரணம் என்று நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.
  • தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் பின்தங்கியுள்ளோம். 188 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது. 
  • கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன் மோசமான நிலையில் உள்ளது. 5வது வகுப்பு மாணவனால் 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துளளது'' என்றார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவின் சாங்வோன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்-2019 போட்டியை இந்தியா நடத்த முடிவு
  • உஸ்பெகிஸ்தானின் அர்கெஞ்ச் நகரில் கடந்த 22-ஆம் தேதி ஆசிய பளுதூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், "2019-ஆம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும்" என்று முடிவு எடுக்கப்பட்டது.
  • இத்தகைய வாய்ப்பை இந்தியா பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி நடைபெறும் தேதியும், நடத்தப்படும் நகரமும் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC GROUP 2A CERTIFICATE VERIFICATION INSTRUCTIONS ONLINE PROCESS

Tnpsc Shouters

Certificate Verification  Details

Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services) , 2017-18
(Date of Written Examination: 06.08.2017 FN)

CERTIFICATE VERIFICATION (I PHASE)

SL.No.
PARTICULARS
Name of the post
Assistant/Personal Clerk/ Steno-Typist
1.List of register number selected for 1st phase of Certificate VerificationVIEW
2Communal Category-wise overall rank fixed for 1 phase of certificate verificationVIEW



ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி – IIA)இல் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் (SCAN) செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முன் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை.

சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு அழைக்கப்பட்டவர்கள் தங்களது அழைப்பு கடிதத்தினை(CV -MEMO) கீழ்க்கண்ட முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC GROUP 2A CV MEMO DETAILS DOWNLOAD :: CV MEMO PDF


அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் பட்டியலை கீழ்க்கண்ட முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். சேவை மையங்கள்  .

LIST OF NEW E - SEVAI CENTRE DETAILS TALUKA WISE : DOWNLOAD

இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் பற்றி காண்போம்..
தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய கால அவகாசம் -  23.04.2018 முதல் 04.05.2018 வரை.. 
1.விண்ணப்பதாரரின் புகைப்படம்.
2.SSLC மதிப்பெண் பட்டியல்.
 தங்களது விண்ணப்பதில் தாங்கள் குறிப்பிட்டது சரியா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
3.HSC/Diploma/ITI/Teacher training மதிப்பெண் பட்டியல்.
 தங்களது விண்ணப்பதில் தாங்கள் குறிப்பிட்டது சரியா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
4. இளநிலைப் பட்டத்திற்கான சான்றிதழ்.
 தங்களது விண்ணப்பதில் தாங்கள் குறிப்பிட்டது சரியா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் விண்ணப்பதில் தாங்கள் Provisional Certificate அல்லது Degree Certificate ஆகிய இரண்டில் எதை குறிப்பிட்டுள்ளீர்களோ
அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5.சாதிச் சான்றிதழ்.
 தங்களது விண்ணப்பதில் தாங்கள் குறிப்பிட்டது சரியா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
6.நன்னடத்தைச் சான்றிதழ்.
   இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து வாங்க வேண்டும். இதற்க்கென தனி format இல்லை எனினும் தங்கள் புகைப்படம் இடம் பெறுவது போல வாங்குவது சிறப்பானது.மேற்க்கண்ட 6-ம் அனைவரும் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும்,
7.முதுநிலைப் பட்டத்திற்கான சான்றிதழ்
8.மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்
9.ஆதரவற்ற விதவை சான்றிதழ் (Destitute Widow Certificate)
 10.முன்னாள் இராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ்
11.இளநிலைப்பட்டம் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ( PSTM Certificate)
 விண்ணப்பதாரர் படித்த கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்பட வேண்டும். அஞ்சல்வழிக்கல்வி / தொலைதூரக்கல்வியில்  பயின்றிருப்பின் 
அதற்கானச் சான்று பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து பெறப்பட வேண்டும். அவ்வாறு பெறப்படும் சான்று பின்வரும் படிவத்தில் (Format) 
பெறப்படவேண்டும்.
12.தொழில்நுட்பக் கல்வித்தகுதி – (Technical Qualification) – தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் சான்றிதழ்கள்..
இவை 6-ம் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
13. ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்கள்  தடையின்மை சான்று NOC  கலந்தாய்வுக்கு செல்லும் போது சமர்பித்தால போதும் ...
14. Personal conduct certificate( நன்னடத்தை சான்று)  A  grade or B grade அலுவரிடமிருந்து  வாங்கி கலந்தாய்வுக்கு செல்லும்போது அசல் சமர்பிக்க வேண்டும்..
உங்களுக்கு A or B grade அலுவலர் யார் என்று தெரியவில்லை எனில் நீங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாங்கலாம், இவர் A grade அலுவலரே....குறைந்த பட்சம்  ஐந்து ஆண்டு தெரியும் என எழுதி வாங்கி கொள்ளுங்கள்.


1.     PSTM CERITIFICATE DOWNLOAD

2.     NOC CERITIFICATE  DOWNLOAD

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...



TNPSC ONLINE CERTIFICATE VERIFICATION INSTRUCTIONS PROCESS 

Bringing much cheer to candidates, who have passed the Tamil Nadu Public Service Commission (TNPSC) exam and plan to get TNPSC verify their qualification certificates before attending job interviews, an official release has stated that from now onwards candidates can avail the service online instead of spending valuable time at TNPSC offices.
According to a release from Collector S A Raman, the TNPSC has introduced the online verification facility on its website. To facilitate candidates who lack internet access, the Tamil Nadu Cable TV corporation would also extend this service from April 23.
Candidates can use the e-service centres of the corporation at the corporation office, corporation zonal offices, 13 taluk offices and municipal offices, including the ones at Ranipet, Melvisharam, Arcot, Gudiyattam, Pernambut, Vaniyambadi and Ambur.
Those who have passed the Group 2A exam can get their certificates verified online. If availing this facility at e-service centres, candidates should bring along a copy of the TNPSC exam pass letter and have to pay Rs 5 for scanning the document





ALL THE BEST FOR WHO ARE SELECT TNPSC GROUP 2 CERTIFICATE VERIFIACATION..




TNPSC GROUPS  EXAM GUIDE BOOK  CHECK OUT 



CONTACT 9698271399/9698694597

MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM


TNPSC BOOK :

TNPSC OFFICAL INSTRUCTIONS FOR  CERTIFICATE VERIFIACATION


The Original Certificates in support of the claims made in the on-line application, should be produced at the time of the Certificate Verification - Oral Test or when called for by the Commission. One set of xerox copies of all certificates along with a copy of photograph identical to the one that was submitted in the application, should also be handed over while attending the Certificate Verification - Oral Test or when called for. A candidate who has applied to the Commission on a previous occasion should produce the required documents even though they might have produced the same on a previous occasion and were returned to him.

a) Evidence of date of birth viz.

(i) the Secondary School-Leaving Certificate; or (ii) A certificate from a University or College, or School authority showing date of birth, according to the University or College or School records. (The certificate of Baptism or extract from Register of Births, cannot be accepted) ; or (iii) Extract from the Service Register showing date of birth in respect of persons holding regular appointment under the State Government. 

b) Two certificates of Character and Conduct:

(i) From the Head of the Institution (other than that of a Tutorial College or Tutorial School or a Type-writing and / or Shorthand Institution) in which the candidate last studied or is studying, as the case may be. (ii) From a Government Officer belongs to Group A or B who knows the candidate personally, obtained not earlier than the first day of the month, in which the recruitment is advertised in the newspapers. This certificate must be based on personal knowledge and experience of the candidate and not from a relative. 

Note:- i. If the period of study at the Institution in which the candidate last studied or is studying as the case may be, is less than one academic year, he must produce also another certificate from the Head of the Institution, in which he last studied for not less than one academic year. ii. No two certificates may be obtained from the same person. 

c) Documents evidencing the qualification prescribed for the appointment, including qualification in Tamil. 

Copies of Degree or Provisional Certificate alone will be accepted as evidence of qualifications. However, in case the Degree Certificate is lost or is not immediately available for reasons to be specified, extract from the Convocation Register will be accepted as evidence of qualification. Copies of Mark Sheets or Grade Certificates will not be accepted as sufficient evidence. In the case of an applicant, who claims to possess adequate knowledge in Tamil, whether his mother-tongue is Tamil or not, a certificate evidencing that he had taken Tamil as a language in his S.S.L.C. Public Examination or had taken all the non language subjects in the S.S.L.C. Public Examination in Tamil Medium or he had passed the Second Class Language Test (Full Test) in Tamil must be proceeded.

d) Practical / Other Experience / Bar Experience 

In cases where the qualifications announced for a post include a period of practical or other experience, in addition to educational qualification / technical qualification, such a period of practical or other experience, as the case may be should have been acquired after obtaining the educational / technical qualifications prescribed for such appointment unless otherwise specified.                          22/49                                                            Dt:28.04.2015 Certificate regarding Practical Experience, if any, prescribed, should conform to the requirements notified. Certificate regarding Bar Experience should conform to the requirements notified. These certificates will be subjected for verification. Hence, documents in support of the contents of such certificates must be available. 

e) Registration Certificates

Candidates applying for the posts for appointment to which registration of their names in Councils like Bar Council or Central Board of Indian Medicine, Chennai and / or the Board of Integrated Medicine, Chennai / Tamil Nadu Siddha Medical Council / Tamil Nadu Board of Indian Medicine, Tamil Nadu Medical Council or Tamil Nadu Homoeopathy Council or Tamil Nadu Veterinary Council, as the case may be, is a pre-condition, they should have registered their names before the date of the Commission’s notification for appointment and the copy of the Registration Certificate should be sent along with the other documents evidencing their qualification. Original of the same has to be produced at the time of oral test along with other certificates. 

f) Community Certificate

In the case of an applicant who claims to be a member of SC/ SC(A) or ST or MBC/DC or BC(Other than BCM)or BCM, a certificate from the following authority noted against each should be produced in the form as specified in G.O.Ms.No. 781, Revenue department, dated 2nd May 1988:- 
Community Certificate should have been issued by the competent authorities referred to above, in whose jurisdiction the candidate claims to have permanent residence, after personal enquiries and proper verification. The certificate obtained by the candidates in the form other than the one prescribed in G.O.Ms.No.781, Revenue department, dated 2nd May 1988 and solely based on the entries in S.S.L.C or Transfer Certificate or other School / College records will not be accepted. Candidates are warned that if the community recorded in the certificate produced by them from the competent authority is not included in the list of Scheduled Castes, Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities or Backward classes given in the Annexure of this “Instructions to the Candidates”, they will not be considered as belonging to Scheduled Caste, Scheduled Tribes or Most Backward Classes / Denotified Communities or Backward Classes as the case may be. They will, in that case, be considered only under ‘Others Category’ and if they are not qualified to be considered under ‘Others Category’, their applications will be rejected. 

g) No Objection Certificate

Persons who are in the service of the Indian Union or a State in India or in the employment of Local Bodies or Universities, or Quasi Government Organizations constituted under the authority of the Government of India or of a State in India whether in regular service or in a temporary service need not send their applications through their Head of Department or Employer. Instead, they may directly apply to the Commission after duly informing their Employer in writing that they are applying for the particular recruitment and with the condition that they should produce “No Objection Certificate” in the form prescribed below, from an authority not below their Officer / Division Head at the time of attending the Certificate Verification. 


 List of Documents to be produced at the time of Certificate Verification / Oral Test. (* If applicable) 


(i) ) Evidence of Date of Birth (SSLC / HSC / TC) 

(ii) Community certificate from the competent authority (ie. Life card) *
(iii) Evidence of Educational qualification (SSLC / HSC / Diploma / Degree / PG Degree or Provisional certificate etc.) 
(iv) B.Ed/M.Ed Degree / Provisional Certificate. * 
(v) M.Phil.,/Ph.D.* 
(vi) Evidence for Typewriting / Shorthand Qualification*. 
(vii) Evidence of Tamil qualification (viz. SSLC / HSC / Degree/ Certificate for having passed the second class Language Test (Full Test) in Tamil conducted by the Tamil Nadu Public Service Commission). 
(viii) Medical / Veterinary Registration Certificate / Bar Council Registration Certificate / Driving Licence * 
(ix) Evidence of Practical Experience if any prescribed for the post advertised.* 
(x) Certificate of character and conduct issued by Group A or Group B Officer on or after the first day of the month in which the Advertisement announcing the vacancies is published in the dailies. (xi) Certificate of character and conduct issued by the Head of the Institution in which he / she last studied or studying. (xii) Physical Fitness certificate. * 
(xiii) Differently Abled certificate from a Medical Officer to the effect that he / she is a fit person to discharge his / her duties and with the entries therein regarding the percentage of Differently abled * (xiv) A certificate of Destitute Widow from the RDO or the Assistant Collector or the Sub-Collector concerned in the format prescribed. * 
(xv) A certificate as evidence for claim in respect of Ex-serviceman. * 
(xvi) Evidence of extra–curricular activities if any * 
(xvii)No Objection Certificate *                           
(xviii) Special records, if any specified in the Notification / Advertisement.* 
(xix) Tamil Medium: Persons Studied in Tamil Medium (PSTM) have to produce the evidence, 

such as Transfer Certificate, Provisional Certificate / Convocation Certificate / Degree Certificate / Certificate if needed mark sheets after received from the Board or University or from the Institution, with a recording that he / she studied prescribed educational Qualification in Tamil Medium as per G.O Ms.No.145 P & AR (S) Department dated 30.09.2010. If no evidence for ‘Persons studied in Tamil Medium’ is available as said, then a certificate from the Head of the Institution as given below must be furnished

Monday, 23 April 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS APRIL 2018 TAMIL PDF - 23rd APRIL 2018

Tnpsc Shouters




மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்
  • மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தில் கூறியுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்கள் ஆதிக்கம் உள்ளன. இவர்களை ஓடுக்கவும், தற்காப்புக்காக சுட்டுக்கொல்லவும் ,துணை ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிகாரம் வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. 
  • இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மேகலாவில் கடந்த 31-3-2018 முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. 
  • தவிர அருணாச்சலப்பிரதேசத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் உள்ள 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருக்கும்.
உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டதை வென்றார் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார்
  • மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 255-ஆம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்று அசத்தினார்.
  • மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், வேலவன் செந்தில்குமார் தனது இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெலெவை எதிர்கொண்டார்.
  • விறுவிறுப்பான இந்த ஆட்டம் 56 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதில், 7-11, 13-11, 12-10, 11-4 என்ற செட்களில் வேலவன் வெற்றி பெற்றார்.
  • பிரிட்டிஷ் ஜூனியன் ஓபன், ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த வேலவன், முதல் முறையாக வெல்லும் சீனியர் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக அவர் 2 உலக டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணி சாம்பியன் வென்று அசத்தல்
  • கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • இந்த நிலையில், ஒரு புள்ளியுடன் இருந்த கொலம்பியாவை இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் வென்றது பிரேசில் மகளிரணி.
  • இந்த வெற்றியின் மூலமாக, அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் பிரேசில் மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன மயமாக்கப்படும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்
  • இந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப் பட்டு நவீன மயமாக்கப்பட உள்ளன.
  • இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்களில் 90 மி-17 ரக ஹெலிகாப்டர்கள் பழைய வடிவமைப்பில் உள்ளன. இவைகளில் மின்னணு பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப் படவில்லை. இந்த ஹெலிகாப்டர்களின் உற்பத்தியாளர்கள் இந்த ரக ஹெலிகாப்டர்களில் மாறுதலை செய்ய இயலாது என தெரிவித்து விட்டனர். 
  • தற்போது இந்த ஹெலிகாப்டர்கள் தற்போது இந்திய விமானப்படையின் சண்டிகர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் உள்ளன.

TNPSC ONLINE CERTIFICATE VERIFICATION PROCESS FAQ

Tnpsc Shouters

Q1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன?
A1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.
--------------------------------------------------------------------------------
Q2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்?

A2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
--------------------------------------------------------------------------------
Q3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

A3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்குத்  தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.
--------------------------------------------------------------------------------
Q4: எதற்க்காக தேவைக்கும் அதிகமானோரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு TNPSC அழைத்து அதில் சிலரை திரும்ப அனுப்புகிறது?

A4: சரியான நபர்களை அழைக்கும் பட்சத்தில் அவர்களில் பலர் ஏற்கனவே வேலையில் இருந்து இந்த வாய்ப்பை புறக்கணித்தல் அல்லது தகுதி இல்லாத போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளியேற்றப் படல் போன்ற நிகழ்வுகளால் TNPSC-க்கு மீண்டும் மீண்டும் அனைவரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கால விரயம் மற்றும் வேலைப் பளுவை குறைக்கவே தேவைக்கும் அதிகமானோர் அழைக்கப் படுகிறார்கள்.
--------------------------------------------------------------------------------
Q5: இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடந்து வந்தது?

A5: சென்னை TNPSC அலுவலகத்தில் நடந்து வந்தது. தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வரவேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q6: இனி சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடை பெரும்?

A6: இனி சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட போட்டியாளர்கள் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது மூலச் சான்றிதழ்களை (ஒரிஜினல்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்து  முடித்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------



Q7: அப்படியானால் நானே அருகில் உள்ள எனது நண்பன் நடத்தி வரும் கணினி மையத்திற்குச் (Computer center) சென்று எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாமா?

A7: கூடாது. இதற்க்கான வாய்ப்பு, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும்  E-சேவா மையங்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே  E-சேவா மையம் மூலம் அல்லாமல் தன்னிச்சையாக உங்களால்  உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பொது சேவை மையம் மூலமாக மட்டுமே பண்ண முடியும்.
--------------------------------------------------------------------------------
Q8: நான் இப்பொழுது வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பண்ணலாமா?

A8: உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தமிழ் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q9: பொது சேவை மையங்கள் எனது மாவட்டத்தில் எங்குள்ளது என்பதனை எப்படித் தெரிந்து கொள்வது?

A9: TNPSC வெளியிட்டுள்ள பொது சேவை மையங்களின் பட்டியல் மற்றும் அதன் முகவரிகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.
http://www.tnpsc.gov.in/docu/List_of_new_esevai_address_details.pdf
--------------------------------------------------------------------------------
Q10: பொது சேவை மையங்கள் செயல் படும் நேரம் எது?

A10: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
--------------------------------------------------------------------------------
Q11: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என TNPSC நிர்ணயித்துள்ள நாட்கள் எவை?

A11: ஏப்ரல் 23 , 2018, திங்கள் கிழமை முதல் மே 4, 2018, வெள்ளிக்கிழமை வரை. மே 4 க்கு பிறகு உங்களால் உங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது. TNPSC-யால் இதற்குண்டான இணையதளம் முடக்கப்பட்டு விடும்.
--------------------------------------------------------------------------------
Q12: ஏப்ரல் 23--மே 4, இந்த நாட்களில் நான் எந்த நாளில் செல்ல வேண்டும் என்று TNPSCஅறிவுறுத்தி உள்ளதா? நான் அந்த குறிப்பிட்ட நாளில்தான்  சென்று எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?

A12: இல்லை. இந்த நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர உங்களுக்கு தோதான எந்த நாளிலும் சென்று உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியரும் இந்த நாளில் தான் செல்ல வேண்டும் என TNPSC குறிப்பிடவில்லை.
--------------------------------------------------------------------------------
Q13: TNPSC குறிப்பிட்டுள்ள நாட்களில் எனது சான்றிதழ்களை  நான் பதிவேற்றம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

A13: நீங்கள் Gr-2A வேலைக்கான போட்டியில் இருந்து நிரந்தரமாக விலக்கப் படுவீர்கள். மறு வாய்ப்பும் அளிக்கப் படாது.
--------------------------------------------------------------------------------
Q14: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலில் எனது பதிவு எண் உள்ளது. இது தவிர எனக்கு தனிப்பட்ட கடிதத்தினை TNPSC அளிக்குமா?

A14: ஆம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வான போட்டியாளர்களுக்கு TNPSC-யால் வழங்கப்பட்டுள்ள  தனிப்பட்ட கடிதத்தினை கீழ்கண்ட இணைப்பில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.
http://www.tnpsc.gov.in/Resultget-g2a_cv_call2k17.html
--------------------------------------------------------------------------------
Q15: என்ன என்ன சான்றிதழ்களை நான் கொண்டு போக வேண்டும்?

1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
2. SSLC மதிப்பெண் சான்றிதழ் 
3. HSC / DIPLOMO/ITI / Teacher Training மதிப் பெண் சான்றிதழ்.
4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ். 
5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.
6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல்  தெரிவித்துள்ளபடி)
7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான  சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).
8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).
9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).
10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ். 
11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.   
12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).
--------------------------------------------------------------------------------



Q16: சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மேற்கண்ட சான்றிதழ்களைத் தவிர வேறு என்ன வேண்டும்?

A16: உங்களது நிரந்தர பதிவின் (One Time Registration) பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Pass word) தேவை.
--------------------------------------------------------------------------------
Q17: எனது மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) நன்னடத்தை உள்ளது. நான் தனியாக வாங்க வேண்டுமா?

A17: உங்கள் மாற்றுச் சான்றிதழில் (TC) உங்களது நன்னடத்தை இருப்பின், அதனையே பயன்படுத்தலாம்.
ஆனால், மாற்றுச் சான்றிதழில் "His/Her Conduct and Character is Good" என்ற வார்த்தை முழுவதுமாக இருக்க வேண்டும். His/Her Conduct is Good என்று மட்டும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாற்றுச் சான்றிதழில் உங்களது நன்னடத்தை கொடுக்கப்பட்டு இருந்தாலும், இறுதியாகப் பயின்ற கல்வி நிலையத்தில் சென்று சான்றிதழ் வாங்குவது சிறப்பு. இதனை ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும், அனைத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம். 
--------------------------------------------------------------------------------
Q18: நான் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்றேன். அப்படியானால் நான் எங்கு எனது நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டும்?

A18: நீங்கள் அதற்க்கு முன்னதாக எந்த கல்வி நிறுவனத்தில் ரெகுலரில் படித்தீர்களோ அங்கு இந்த நன்னடத்தைச் சான்றிதழை வாங்க வேண்டும். அதாவது குறைந்தது ஒருவருட கோர்ஸில் படித்து இருக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது மூன்று மாதம்  டிப்ளமோ கோர்ஸ் படித்த நிறுவனங்களில் வாங்கக் கூடாது.
உதாரணமாக நீங்கள் முதுகலை தொலைதூரக் கல்வி முறையில் படித்து இருந்தால், இளநிலை ரெகுலரில் படித்து இருந்தால் அங்கு வாங்கலாம். அல்லது முதுகலைக்கு முன்பு இளங்கலை கல்வியியல் (B.Ed) படித்து இருந்தால் அங்கு வாங்கலாம்.
நீங்கள் இளங்கலை தொலை தூரக் கல்வியில் படித்து இருந்தால், +2 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அங்கு வாங்கலாம். 
--------------------------------------------------------------------------------
Q19: இளங்கலை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்?

A19: ரெகுலரில் படித்தவர்கள் அவர்கள் கல்லூரி முதல்வரிடமும், தொலை தூரக் கல்வியில் படித்தவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமும் வாங்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------



Q20:   தமிழ் வழி சான்றிதழ் கொடுத்துள்ள ஆங்கிலப் படிவத்தில் தான் வாங்க வேண்டுமா?

A20: TNPSC ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் படிவம் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆங்கிலத்தில் வாங்குவது நலம். தமிழில் வாங்கி வைத்து இருப்பவர்கள் அதனை பதிவேற்றம் செய்து விட்டு, முடிந்தால் ஆங்கிலத்தில் ஒன்று வாங்கி கலந்தாய்வின்போது கொண்டு செல்லலாம். இரு சான்றிதழ்களும், தேதி மாறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.
--------------------------------------------------------------------------------
Q21: என்னிடம் தமிழ் வழி  சான்றிதழ் மற்றும் இறுதியாகப் பயின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கக் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்கள் இல்லை. கிடைக்குமா?

A21. கீழ்க் கண்ட இணைப்பின் மூலம், எனது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uRmRYQmNzUy1oTzBQV0dkbUNRMlNVLUNZbXlF
--------------------------------------------------------------------------------
Q22: இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. இதற்க்கு முன்பு குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழை கேட்டர்களே, அது மேற்கண்ட வரிசையில் இல்லையே?

A22: ஆமாம்,  குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இப்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. அதனை கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.
--------------------------------------------------------------------------------
Q23: நான் தற்சமயம் அரசு அலுவலராக உள்ளேன். நான் எப்பொழுது தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுக்க வேண்டும்? இப்பொழுது அதனை பதிவேற்றம் செய்யலாமா?

A23. அரசு ஊழியர்களுக்கான தடையின்மைச் சான்றிதழை தற்சமயம் பதிவேற்றம் செய்ய சொல்லவில்லை. எனவே இதனையும் கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.  
ஆனால், தடையின்மைச் சான்றிதழ் தற்சமயம் இருக்கும் பட்சத்தில், அதனையும் பதிவேற்றம் செய்யலாம், தவறில்லை என TNPSC-யில் தெரிவித்தார்கள்.
--------------------------------------------------------------------------------
Q24: நான் பட்டப் படிப்பிற்க்கான தகுதிக்கு (Degree Qualification) எனது மதிப்பெண் பட்டியல் (Cumulative Mark Sheet) சான்றிதழ் எண்ணையும், தேதியையும் கொடுத்து விட்டேன். அப்படியானால், நான் எதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்?

A24: நீங்கள், பட்டச் சான்றிதழை (Convocation) பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த, மதிப் பெண் பட்டியலை (Cumulative Mark Sheet) பதிவேற்றம் செய்ய தேவை இல்லை. 
--------------------------------------------------------------------------------
Q25: எனது சாதிச் சான்றிதழில் தவறு இருப்பதனை நான் தற்போதுதான் கவனித்தேன். அதனைப் பதிவேற்றம் செய்யலாமா?

A25: உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு போன்றவற்றில் தவறு இருப்பின் அது பெரும் பிழையாகக் கருதப்படும். நீங்கள் புதிதாக ஒரு சாதி சான்றிதழை வாங்கி அதனைப் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q26: அப்படியானால், நான் ஏற்கனவே விண்ணப்பத்தில் கொடுத்து இருக்கும் பழைய சாதி சான்றிதழுக்கும், தற்போதைய புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் (Certificate Number) வேறுபடுமே?

A26: சான்றிதழ் எண் வேறுபாட்டால் பரவாயில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படும். சாதி சான்றிதழைப் பொறுத்தவரை உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு மிகச் சரியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
--------------------------------------------------------------------------------
Q27: நான் பொதுச் சேவை மையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒரு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படமால் விடுபட்டு விட்டது. அதனை மறு நாள் சென்று பதிவேற்றம் செய்யலாமா?

A27: செய்யலாம். பொது சேவை அலுவலருக்கு தணிக்கை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரால், மே 4 வரை உங்கள் கணக்கில் உள்ள, எந்த ஒரு சான்றிதழையும் சேர்க்க முடியும், நீக்க முடியும்.
இருப்பினும், முதல் முறை பதிவேற்றம் செய்யும் பொழுதே கவனமாக செயல்படுதல் நலம்.
--------------------------------------------------------------------------------
Q28: நான் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் என்னையறியாமல் பெரிய தவறுகள் ஏதும் இருப்பின், அது எப்போது எனக்குத் தெரியப்படுத்தப் படும்?. கலந்தாய்வில் போதுதான் தெரிய படுத்துவார்களா?

A28: இல்லை. நான் இன்று அலுவலகத்தில் நேரில் சென்று கேட்ட பொழுது, பெரிய தவறுகள் உள்ள போட்டியாளர்களுக்கு, கலந்தாய்விற்கு முன்னனதாக தெரியப்படுத்தப் படும் என்று கூறினார்கள்.
--------------------------------------------------------------------------------
Q29: சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மேலும் எனக்கு ஏதும், குறுந்செய்தி அல்லது  மின் அஞ்சல் யிலிருந்து வருமா?

A29: உங்களது சான்றிதழ்களில் எந்த பிரச்சினையும் இல்லாத வரை எதுவும் வராது. 
--------------------------------------------------------------------------------
Q30: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படும்  பொழுது, எனது இளங்கலை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது. சான்றிதழ் பதிவேற்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட நாளும் முடிந்து விட்டது. இப்போது என் நிலை என்ன?

A30: அப்படி விடுபட்டுப் போனால், நீங்கள் இளங்கலை பட்டதாரியாக கருதப்பட மாட்டீர்கள். உங்களது கல்வித் தகுதி என்ற +2 அளவிலேயே TNPSC-யால் கணக்கில் கொள்ளப்படும். மேலும், Gr 2A தேர்விற்கு இளங்கலை பட்டம் என்பதே அடிப்படைத் தகுதி என்பதனால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்பட மாட்டீர்கள். எனவே, ஒவ்வொரு சான்றிதழையும் பதிவேற்றம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------



Q31:   நான் விண்ணப்பத்தில் முதுகலை என குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொழுது முதுகலை பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்தால் நான் முதுநிலை பட்டதாரியாக கருதப் பட வாய்ப்பு உண்டா?

A31: நிச்சயமாக இல்லை. நீங்கள் விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகளைக் குறிப்பிடாமல் சான்றிதழை மட்டும் பதிவேற்றம் செய்தால் அதனை TNPSC ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. 
--------------------------------------------------------------------------------
Q32: கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்ல முடியுமா?

A32: கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்க்கு உண்டான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை இழப்பீர்கள். 
--------------------------------------------------------------------------------
Q33:   பல்வேறு வேலைப் பளுவின் காரணமாக, குறிப்பிட்டுள்ள நாட்களில் (Apr 23 - May 04)  என்னால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே கொடுக்கப்பட்ட தேதி முடிந்த பின்னர் நான் அஞ்சலிலோ அல்லது அலுவலகத்திற்கு நேரிலோ எனது சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் பதிவேற்றம் செய்ய இயலுமா?

A33: கண்டிப்பாக முடியாது. பொது சேவை மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யமால் அதன் பின்னர் அஞ்சலில் அல்லது நேரில் பதிவேற்றம் செய்ய முடியாது. நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q34: நான் இந்த தேர்விற்க்காக TNPSC அறிவுறுத்தியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விட்டேன். நான் அடுத்து வரும் வேறு ஒரு தேர்வில் இதே போன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இதே போன்று மீண்டும் எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா?

A34: ஆமாம். ஒவ்வொரு தேர்விற்கும் நீங்கள் இதே போன்று ஒவ்வொரு முறையும் பொது சேவை மையத்திற்குச் சென்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
--------------------------------------------------------------------------------
Q35: நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். எனவே, எனது உறவினர் அல்லது நண்பர்களிடம் கொண்டு எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா?

A35: உங்களது சான்றிதழ்களை நீங்களே செய்வது தான் சிறப்பு. ஏனெனில் உங்களது விபரங்கள் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தவறு நடந்த பின் மனம் உடைவைத்தாய் விட, என்றும் வருமுன் காப்பது சிறந்தது. 
--------------------------------------------------------------------------------
Q36: நான் சான்றிதழை பதிவேற்றம் செய்தமைக்கு பொது சேவை மையத்திலிருந்து, எனக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் கொடுக்கப்படுமா?

A36: ஆமாம், புகைப்படத்தில் உள்ளவாறு எந்த எந்த சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் என்று பொது சேவை மையத்தினால்  ஒப்புதல் சீட்டு தரப்படும்.
--------------------------------------------------------------------------------
Q37. இந்த புதிய வகை ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?

A37: .ஒரு சான்றிதழுக்கு ரூ.வீதம் வசூலிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
Q38: இதனை முழுவதுமாகப் படித்த பின்னரும் எனக்கு ஐயம் தீரவில்லை. நான் என்ன செய்வது?

A38: பின் வரும் தொலைபேசி எங்களுக்கு அழைத்து நீங்களே உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். அல்லது, சென்னைக்கு அருகில் இருப்பின் நேரில் சென்று விபரம் கேட்கலாம்.
044-2533 2855
1800 4251 002
--------------------------------------------------------------------------------
Q39: எனக்கு மேற்கண்ட அனைத்தும் நன்றாக புரிந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?.

A39: கூறி இருப்பவற்றை பயன்படுத்தி நல்ல விதமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வாங்கவும். மேலும், அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த விபரத்தினைப் பகிரவும் (Share).
மேலும் இதில் சொல்லப் படாத கூடுதல் விபரங்கள் தெரிந்தால் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.
--------------------------------------------------------------------------------