Type Here to Get Search Results !

தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National Panchayati Raj Day - 24th April)




தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24
  • பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.இதை நினைவுகூறும் விதமாக
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day)  ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.
  • அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.
  • இச்சட்டத்தின் அடிப்படையில் ஊராட்சி மன்றத்தின் மூலம் கீழ்கண்ட பணிகள்நிறைவேற்றப்படுகின்றன.
  • தெரு விளக்குகள் அமைத்தல்.
  • ஊர்ச் சாலைகள் அமைத்தல்
  • குடிநீர் வழங்குதல்.
  • கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
  • சிறிய பாலங்கள் கட்டுதல்.
  • வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
  •  கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
  •  தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
  •  இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
  • இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பஞ்சாயத்து தலைவர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பஞ்சாயத்து தலைவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இக்கொண்டாட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel