சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 1 ஏ பிரிவில் அடங்கிய, உதவி வன பாதுகாவலர் பதவியில், 14 இடங்களுக்கு, முதல்நிலை எழுத்து தேர்வு, 2017 டிச., 17ல் நடத்தப்பட்டது. இதில், 10 ஆயிரத்து, 459 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில், முதன்மை எழுத்து தேர்வுக்கு, 472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை, 28 முதல் ஆக., 4 வரை, சென்னையில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.