Type Here to Get Search Results !

DOWNLOAD TNPSC SHOUTERS CURRENT AFFAIRS APRIL 2018 - TAMIL PDF




TNPSC SHOUTERS  - APRIL 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st APRIL 2018
2.
2nd APRIL 2018
3.
3rd APRIL 2018
4.
4th APRIL 2018
5.
5th APRIL 2018
6.
6th APRIL 2018
7.
7th APRIL 2018
8.
8th APRIL 2018
9.
9th APRIL 2018
10.
10th APRIL 2018
11.
11th APRIL 2018
12.
12th APRIL 2018
13.
13th APRIL 2018
14.
14th APRIL 2018
15.
15th APRIL 2018
16.
16th APRIL 2018
17.
17th APRIL 2018
18.
18th APRIL 2018
19.
19th APRIL 2018
20.
20th APRIL 2018
21.
21st APRIL 2018
22.
22nd APRIL 2018
23.
23rd APRIL 2018
24.
24th APRIL 2018
25.
25th APRIL 2018
26.
26th APRIL 2018
27.
27th APRIL 2018
28.
28th APRIL 2018
29.
29th APRIL 2018
30.
30th APRIL 2018


பழனியில் கண்டறியப்பட்ட 18-ஆம் நூற்றாண்டு செப்பேடு
  • திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்ட செப்பேடு இருந்துள்ளது. இதை, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்துள்ளார். அதில், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 
  • இந்த செப்பேடு 36.4 செ.மீ. உயரமும், 20.2 செ.மீ. அகலமும், 870 கிராம் எடையுடனும் உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் மொத்தம் 139 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடு, சாலி வாகன சகாப்தம் 1627 ஆம் ஆண்டு (கி.பி.1705) பார்த்திப ஆண்டு சித்திரை மாதம் 30 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. 
  • ரகுநாத சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் அவரது மகன் ரெணசிங்க தேவரவர்கள் கட்டளைப்படி, மருதப்ப பிள்ளை எழுதிய மூல தாமிரசாசன பட்டயத்தின் நகல்தான் இந்த செப்பேடு. 
  • இந்த நகல் பட்டயத்தை, சிவகங்கை சீமையின் இரண்டாவது அரசரான முத்து வடுகத்தேவர் மற்றும் அவர் மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு காரியகர்த்தராக இருந்த புகழ்பெற்ற தாண்டவராயப்பிள்ளையின் கட்டளை மற்றும் உதவியோடு, திருப்புத்தூர் பழனி ஆசாரி மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார். 
  • மூலபட்டயம் எழுதி 5 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்த 77 ஊர்களைச் சேர்ந்த 36 சாதிக்காரர்கள் ஒன்றுகூடி, அரச கட்டளைப்படி இந்த பட்டயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
  • பழனி மலையில் கந்த புராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தைச் சேர்ந்த ஏகாம்பர உடையாருக்கு மடம் ஒன்றை கட்டி வைத்து, பூசை நடத்துவதற்கான ஏற்பாட்டுக்காக இந்த செப்பேடு எழுதப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டுக்கு, அரண்மனையில் வசிக்கும் ராஜவம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு ஐந்து பொன்னும், ஒரு துப்பட்டியும், மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் குடி ஒன்றுக்கு (சாதி ஒன்றுக்கு) 6 பணமும் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • அத்துடன், வீரபத்திரன், ரணசிங்கம் பிள்ளை, தாண்டவராய பிள்ளை ஆகியோர் முருகக் கடவுளுக்கு திருமாலைக் கட்டளைக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு பொன்னும், இரண்டு பணமும் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இச் செப்பேடு மூலம் தெரியவந்துள்ளது.
சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க தனி ஆணையம்
  • தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கால்நடைப் பல்கலைக் கழக துணைவேந்தராக பாலசந்திரன் நியமனம்
  • சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணை வேந்தராக சி.பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட பாலசந்திரன் மூன்றாண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார். 
  • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாலசந்திரன் ஏற்கெனவே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பதிவாளர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்(டீன்) ஆகிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர் ஆவார். பேராசிரியராக 21 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 6 நூல்களை எழுதியுள்ள இவர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 9 பேருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
சந்தோஷ் கோப்பை: பெங்கால் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பை வென்றது கேரளம்
  • சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி கேரள அணி வாகை சூடியது. சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
  • ஆறாவது முறையாக சந்தோஷ் கோப்பை பட்டம் வென்ற கேரளம், கடைசியாக 2004-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் ரஃபேல் நடால் மீண்டும் முதலிடம்
  • உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் ரஃபேல் நடால். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஜர் பெடரை பின்னுக்கு தள்ளி, 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஃபேல் நடால் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 
'இன்கிரெடிபிள் இந்தியா' பட்டியலில், 'ஆதியோகி'
  • கோவை மாவட்டம், பூண்டி அருகே, ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி பிரமாண்ட ஆதியோகி சிலையை, கடந்தாண்டு, பிப்., மாதம், மகாசிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், இந்த சிலை இடம் பெற்றுள்ளது. இந்த சிலையை, அதிகாரப்பூர்வ சுற்றுலாத்தலமாக மத்திய சுற்றுலாத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. 
  • தற்போது, 'இன்கிரெடிபிள் இந்தியா' எனப்படும், வியத்தகு இந்தியாவின், பிரபல சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், இந்த சிலை சேர்க்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் வாட்டர் போலீஸ் கேப்டவுன் வறட்சியால் தென்னாப்பிரிக்க அரசு அதிரடி
  • பூவுலகில் தண்ணீரே இல்லாத நகரம் என்ற பூஜ்ஜிய நாளை நோக்கி வேதனையுடன் நகர்கிறது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம். இந்த நிலை மிகவும் கொடுமையானது. 
  • ஒரு தனிநபர் பயன்பாட்டுக்கு தினமும் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது. நம் ஊரில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றுவதைப் போல, அங்கு ரேஷன் கடைகளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். 
  • இந்நிலையில், கேப்டவுன் நகரில் தண்ணீரைப் பாதுகாப்பதற்காகக் காவலர்களை நியமித்துள்ளார்கள். உலக அளவில் தண்ணீரைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிப்பது இதுவே முதல்முறை. 
  • கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால், கேப்டவுன் நகரில் தண்ணீர் தொடர்பான பல்வேறு முறைகேடுகள், குற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதைத் தடுப்பதற்காகவே, இந்தக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
தூய்மை இந்தியா-வின் மின்சாரம் தயாரிக்கும் பயோ-டாய்லெட்
  • ஐ.ஐ.டி.காரக்பூர் சாதனை! கழிவுநீரை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாது, மின்சாரமும் தயாரிக்க்கும் பயோ-எலெக்ட்ரிக் டாய்லெட் உருவாக்கியுள்ளது. 
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி பங்களிப்பு உதவியுடன் இந்த பயோ- எலெக்ட்ரிக் டாய்லெட்டை உருவாக்கி உள்ளோம். இதை பேராசிரியர் எம்.எம்.காங்ரேகர் தலைமையிலான குழு உருவாக்கியது.
  • இந்த பயோ- எலெக்ட்ரிக் டாய்லெட் 1,500 லிட்டர் கொள்ளளவை கொண்டது. இந்த பயோ எலெக்ட்ரிக் டாய்லெட் தற்போது சோதனை முறையில், ஐ.ஐ.டி.வளாகத்திலேயே தினமும் 5 பேர் என்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • அது மட்டுமல்லாது இதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரிய செய்வதற்கும், மொபைல் போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கும் பயன்படுகிறதாம்.
  • பயோ எலெக்ட்ரிக் டாய்லெட்டிற்கு, மத்திய அரசின் "தூய்மை இந்தியா விருது" வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel