Type Here to Get Search Results !

போட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம் ஏன் ? - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி அறிவியல் (TNPSC & UPSC SCIENCE)




போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரையில், இயற்பியல் பாடத்தைப் போன்றுதான் வேதியியல் பாடமும். யு.பி.எஸ்.சி தேர்வில் 1-2 கேள்விகள் வரலாம்; ஒரு கேள்விகூட வராமலும் போகலாம். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சில கேள்விகள் ஆண்டுதோறும் கேட்கப்படுகின்றன. இந்தச் சில கேள்விகளுக்கு நம் நேரத்தையும் உழைப்பையும் எப்படிப் பயன்படுத்துவது எனப் புரிந்துகொள்வது அவசியம். போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நாள்களில் அனைவருக்கும் அவசியம் இருக்கவேண்டிய மிக முக்கியமான பண்பு, நேரத்தை சரிவர நிர்வகித்தல்.
``நான் சுமாராகத்தான் படிப்பேன். என்னால் IAS தேர்வில் வெற்றிபெற முடியுமா?" என்று கேட்டால், ``கடினமாக உழைத்தால் நிச்சயம் முடியும்" என்பதே என் பதில். அதே மாணவன், ``தினமும் நேரத்தை தேவையற்ற விஷயங்களில் வீணடிக்கும் பழக்கமும் உண்டு. என்னால் IAS தேர்வில் வெற்றிபெற முடியுமா?" என்று கேட்டால், ``நீங்கள் நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வரை உங்களால் போட்டித்தேர்வுகளில் நிச்சயம் வெற்றிபெறவே முடியாது" என்றுதான் கூறுவேன். இப்படி உங்கள் வெற்றி-தோல்விகளை நிர்ணயம்செய்யும் இந்த நேர மேலாண்மையை எளிதாக்கத்தான், நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய பகுதிகளை எடுத்துரைக்கிறேன்.
வேதியியலில் முதலில் பல்வேறு வஸ்து (matter) மற்றும் வடிவங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். திடப் பொருள்கள் (Solid), திரவப் பொருள்கள் (liquids) மற்றும் வாயுக்கள் (gases), கலவைகள் (mixtures), கலவைகளைப் பிரிக்கும் வழிமுறைகள் - வடிகட்டும் (filteration), படிகமாக்கல் (crystallisation), வடித்தல் (Distillation) போன்றவை, அணு அமைப்பு (atomic structure) அதன் பல்வேறு அங்கங்கள், தாம்சன் மாடல், ரூதர்ஃபோர்டு மாடல், போர் (Bohr model), அணுக்களின் அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பகுதியில் சில முக்கிய ஒரு வரி விளக்கங்களைப் பார்ப்போம்.



அணு எண் (Atomic number) (Z) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் (protons) எண்ணிக்கை (நியூட்ரல் அணுவாக இருந்தால் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் அதுதான்).
பொருண்மை எண் (Mass number) (A) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுத்தொகை.
அணுத்திணிவு (Atomic mass) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் மட்டும் எலெக்ட்ரான்கள் ஆகியவற்றின் கூட்டுத்தொகை
ஐசோடோப்ஸ் (Isotopes) - ஒரே அணு எண். ஆனால், வெவ்வேறு பொருண்மை எண்களைக்கொண்டுள்ள தனிமங்கள் (elements).
ஐசோபார்ஸ் (Isobars) - ஒரே பொருண்மை எண். ஆனால், வெவ்வேறு அணு எண்களைக்கொண்ட தனிமங்கள் (elements).
இதுபோன்ற முக்கிய வரையறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல், போர்-பரி (Bohr- burry scheme), அஃபௌ(Aufbau) விதி, ஹந் விதி (Hund rule), பாலி (Pauli) விதி ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கதிரியக்கம் (Radioactivity), அதன் பல்வேறு பயன்பாடுகள், ரசாயனப் பிணைப்பின் (chemical bonding) முக்கிய அம்சங்கள், முக்கிய ரசாயன எதிர்வினைகள் (அடிப்படை அம்சங்கள் மட்டும்), மின் வேதியியல் (electro chemistry), முக்கியமான அமிலங்கள் (acids), உப்புகள் ( salts), பிற ரசாயனப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றி குறிப்பாக, அவற்றால் நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பயன்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்ததாக, நாம் பார்க்கப்போகும் முக்கியத் தலைப்பு தனிமங்களின் அட்டவணை (periodic table) - அதன் பல்வேறு மாதிரிகள், முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல் அனைத்து முக்கிய உலோகங்கள், தாதுக்கள் (ores) ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் அமைந்துள்ளன.
உதாரணக் கேள்வி
இவற்றில் எது சரி?
சின்னபார் (cinnabar) என்பது மெர்குரியின் தாது.
காசிடரைட் (cassiterite) என்பது காரிய (lead) தாது.
1 only
2 only
Both are correct (பதில்)
Both are wrong
முக்கிய உலோகங்கள் மற்றும் கலவைகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு படித்துக்கொள்ளுங்கள். முக்கிய உலோகக் கலவைகளின் (alloys) பெயர்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற முக்கியத் தனிமங்களைப் பற்றி குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உணவுப்பொருள்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களைப் பற்றிய குறிப்புகளில் நம் போட்டித்திறன் தேர்வுகளுக்கு மிக முக்கியம். அதேபோல், நம் அன்றாட வாழ்வில் பயன்படும் வேதியியல் பொருள்களை, சுற்றுச்சூழலில் பங்குவகிக்கின்ற வேதியியல் பொருள்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.
உதாரணக் கேள்வி (UPSC 2017):
பயன்படுத்தப்படும் பொருள்கள் கலந்துள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள்
1) லிப் ஸ்டிக் (lip stick) - லெட் (lead)
2) குளிர்பானங்கள் - புரோமினேட்டட் வெஜிடபிள் ஆயில் (brominated vegetable oil)
3) சீனத் துரித உணவுகள் - மோனோ சோடியம் குலூட்டமேட் (monosodium glutamate)
இவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
Only 1
2 and 3
1 and 3
1, 2, 3 (பதில்)
ஆக, வேதியியலைப் பொறுத்தவரையில் நாம் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்ததைப்போல் ஒரு ஈக்குவேஷனைக்கூட (Equation) விடாமல் படிக்கத் தேவையில்லை; மிக ஆழமாகவும் படிக்கத் தேவையில்லை. அடிப்படை விஷயங்களையும் அன்றாட விஷயங்களையும் படித்தாலே போதுமானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel