- சமீபத்தில், முன்னாள் வருவாய்த் துறைச் செயலர் என்.கே.சிங் தலைமையில் மத்திய அரசு 15-வது நிதிக் குழுவினை அமைத்திருக்கிறது.
- 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று, வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களோடு பகிர்ந்துகொள்வதாக அரசு ஒப்புதல் தந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டங்களுக்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்றும் கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தச் சிக்கலுக்கு 15-வது நிதிக் குழு எப்படித் தீர்வு காணப்போகிறது என்பது அதன் முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது.
- நிதிக் குழு, அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயை, மத்திய அரசும் மாநில அரசுகளும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கும் அதிகாரம் நிதிக் குழுவிடமே உள்ளது.
- அரசு நிர்வாகிகள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் நிதிக் குழு முடிவெடுக்கும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள 15-வது நிதிக் குழு, 2019 அக்டோபருக்குள் தனது பணியைப் பூர்த்திசெய்து அறிக்கையை அளித்துவிட வேண்டும். 2020 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலத்துக்கு இக்குழுவின் பரிந்துரைகள் தான் அமலில் இருக்கும்.
- ‘புதிய இந்தியா-2022’ திட்டத்துக்கு ஏற்பவும், மத்திய அரசின் இப்போதைய வரவு-செலவு நிலவரத்துக்குப் பொருத்தமாகவும் வரி வருவாயைப் பிரித்துத் தருமாறு மத்திய அரசு நிதிக் குழுவிடம் கேட்டுக்கொள்ள இருக்கிறது.
- மேலும் ராணுவம், நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு, அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சி, பருவநிலை மாறுதலுக்கேற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காகவும் கூடுதலாக நிதி தேவை என்று வலியுறுத்தப் போகிறது.
- மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 42% நிதியைக் குறைத்தால், மாநிலங்களுக்கு நிச்சயமாக நிதி நெருக்கடி ஏற்படும். ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்பது ஏற்பட இயலாததாகிடக் கூடும்.
- ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதால் வருவாயை இழக்கும் மாநிலங்களுக்கு, 2022 ஜூன் வரையில் மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்து தான் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
- இவை போக, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொதுச் சரக்கு – சேவை வரி நிர்வாகத்தை விரிவுபடுத்துவது, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகிய அம்சங்களில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்குவதாகவும் மத்திய அரசு சொல்லியிருக்கிறது.
- வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விலைவாசிக் கட்டுப்பாடு ஆகிய இலக்குகளும் இருக்கின்றன. எனவே, இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, அவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டுக்கான சூத்திரத்தை 15-வது நிதிக் குழு வகுக்க வேண்டும்.
Monday, 31 December 2018
GENERAL KNOWLEDGE
TNPSCSHOUTERS
18:11
CURRENT AFFAIRS
TNPSCSHOUTERS
17:52
TNPSC SHOUTERS - DECEMBER 2018
CURRENT AFFAIRS
| ||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st DECEMBER 2018
| |
2.
|
2nd DECEMBER 2018
| |
3.
|
3rd DECEMBER 2018
| |
4.
|
4th DECEMBER 2018
| |
5.
|
5th DECEMBER 2018
| |
6.
|
6th DECEMBER 2018
| |
7.
|
7th DECEMBER 2018
| |
8.
|
8th DECEMBER 2018
| |
9.
|
9th DECEMBER 2018
| |
10.
|
10th DECEMBER 2018
| |
11.
|
11th DECEMBER 2018
| |
12.
|
12th DECEMBER 2018
| |
13.
|
13th DECEMBER 2018
| |
14.
|
14th DECEMBER 2018
| |
15.
|
15th DECEMBER 2018
| |
16.
|
16th DECEMBER 2018
| |
17.
|
17th DECEMBER 2018
| |
18.
|
18th DECEMBER 2018
| |
19.
|
19th DECEMBER 2018
| |
20.
|
20th DECEMBER 2018
| |
21.
|
21st DECEMBER 2018
| |
22.
|
22nd DECEMBER 2018
| |
23.
|
23rd DECEMBER 2018
| |
24.
|
24th DECEMBER 2018
| |
25.
|
25th DECEMBER 2018
| |
26.
|
26th DECEMBER 2018
| |
27.
|
27th DECEMBER 2018
| |
28.
|
28th DECEMBER 2018
| |
29.
|
29th DECEMBER 2018
| |
30.
|
30th DECEMBER 2018
| |
31.
|
31st DECEMBER 2018
|
900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு தமிழகத்தில் கண்டெடுப்பு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக் காலத்தில் பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு கோவலூரைச் சேர்ந்த இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக இந்தத் தூம்பினை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
- இந்த கல்வெட்டில் முக்கிய குறிப்பாக "இந்தத் தூம்பினை காப்பவர்கள் காலடியை என் தலைமேல் காப்பேன்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது
கஜா புயல் பாதிப்பு: மத்திய அரசு ரூ.353 கோடி இடைக்கால நிவாரணம்
- கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
- கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட எட்டு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
- நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்ள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.
- இதற்கிடையே கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து அறிய மத்தியக் குழு ஒன்றையும் ஆய்வுக்காக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதனையடுத்து தமிழகம் வந்த மத்தியக் குழு மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.
- இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா விமானம்
- உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
- இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.
முதன் முறையாக மல்யுத்தத்திலும் சம்பள ஒப்பந்தம் : அமல்பஜ்ரங், வினேஷ், பூஜாவுக்கு ரூ.30 லட்சம்
- இந்திய மல்யுத்த சங்கம் முதன் முறையாக வீரர், வீராங்கனை களுக்கு சம்பள ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளது.
- இதன்படி ஏ பிரிவில் நட்சத்திர வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், பூஜா தன்டா ஆகியோர் இடம் பெற்றுள் ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப் படும்.
- பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் இந்த ஆண்டு நடை பெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். அதேவேளையில் பூஜா தன்டா உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
- இருமுறை ஒலிம்பிக்கில் பதக் கம் வென்ற சுஷில் குமார், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய சாக் ஷி மாலிக் ஆகியோர் சம்பள ஒப்பந்தத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒராண்டுக்கு ஊதியமாக தலா ரூ.20 லட்சம் பெறுவார்கள்.
- சி பிரிவில் சந்தீப் தோமர், சஜன் பன்வால், வினோத் ஒம் பிரகாஷ், ரித்து போகத், சுமித் மாலிக், தீபக் பூனியா, திவ்யா கரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- டி பிரிவில் இடம் பெற்றுள்ள ராகுல், நவீன், சச்சின் ரதி, விஜய், ரவி குமார், சிம்ரன், மான்ஷி, அன்சு மாலிக் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகில் 2018ல் நடந்த மிக பெரிய அழிவு: கேரள வெள்ளம் முதலிடம்
- குறிப்பாக, வெள்ளத்தால் 14 மாவட்டங்களில் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 443 பேர் பலியானதாகவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- மேலும் சர்வதேச வானிலை மையத்தின் அறிக்கையில்,தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் 2018 மிகவும் வெப்பமானதாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜப்பான், கொரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டத்து. அதே போல், பாகிஸ்தானில் இந்த வருடம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது.
- உலக அளவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பொருளாதார அளவில் பெருத்த இழப்பினை சந்தித்த முதல் இடமாக அமெரிக்காவின் ஃப்ளோரண்ஸ் மாகாணமும், நான்காவது இடமாக கேரளாவும் அறிவிக்கப்பட்டது.
- சராசரியாக 53 புயல்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் மட்டும் சுமார் 70 புயல்கள் உருவாகியுள்ளன. அவை அனைத்தும் வடக்கு ஹெமிஸ்பியரில் ஏற்பட்டதன் விளைவாக 2018ம் ஆண்டில் அனேக ஐரோப்பிய நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்தன.
- இந்த வருடம் மட்டும் 17.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் மழை மற்றும் இதர கால நிலை மாற்றங்களால் 2.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி
- இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.
- Nomophobia.. No Mobile phone Phobia.. இதுதான் இந்த வார்த்தையின் விரிவாக்கம். கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.இந்த ஆண்டின் வார்த்தை
- Nomophobiaவுடன் போட்டியில் இருந்த மற்ற 3 வார்த்தைகள் gender gap, ecocide மற்றும் no-platforming. ஜென்டர் கேப் அனைவருக்கும் அர்த்தம் தெரியும். ஈகோசைட் என்பது சுற்றுச்சூழல் அழிவு என்பதைக் குறிக்கும் வார்த்தை. கிட்டத்தட்ட சூசைட் போன்ற அர்த்தம். நோ பிளாட்பார்மிங் என்பது, ஒவரது சிந்தனை அல்லது யோசனையை செயல்படுத்தவோ அல்லது ஏற்கனவோ இடம் கொடுக்காமையை குறிக்கும் வார்த்தையாகும்.
ANNUAL PLANNER, TNPSC
TNPSCSHOUTERS
17:30
- அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து, பயிற்சிகளை மேற்கொள்வர்.
- ஒவ்வொரு ஆண்டும், இந்த அட்டவணை, மார்ச் மாதமே வெளியாகி வந்தது.இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, புத்தாண்டு துவங்கும் முன்னரே வெளிவரவுள்ளதால், தேர்வர்கள் பயிற்சிகளின் போக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட இயலும்.
- இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் கூறுகையில், ''வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஒப்புதல் பெற்றதும், மூன்று நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
Friday, 28 December 2018
GENERAL KNOWLEDGE
TNPSCSHOUTERS
09:09
- வரும் 2018-ஆம் ஆண்டினை “உலக சிறு தானியங்கள் ஆண்டாக” அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரையினை மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு சமீபத்தில் அனுப்பி இருக்கிறது.
- இந்தியா முன்வைத்துள்ள இக்கோரிக்கையானது ஏற்கப்படுமானால், நுகர்வோர், கொள்கைகளை வகுப்போர், தொழில் துறையினர் மற்றும் வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு சிறு தானியங்கள் குறித்தும், அவற்றின் தேவை, பயன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படக் கூடும்.
- தற்போது நாட்டில் உணவுப் பொருள்கள் தேவை அதிகமாக உள்ளது. மக்கள் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசியையே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது. உணவு தானியவரத்துக் குறைவால், விலைகள் உயர்ந்துள்ளன என்று அவ்வப்போது காரணம் சொல்லப்படுகிறது.
- அதிக வருவாய் ஈட்டித் தரும் குறிப்பிட்ட சில உணவு தானியங்களை மட்டும் விவசாயிகள் சாகுபடி செய்வதும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந் நிலையில் பரந்துபட்ட தானியங்களை சாகுபடி செய்ய வேண்டியது அவசியம் என்பதை விவசாயிகளும் அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை மக்களும் உணர வேண்டும்.
- சிறு தானியங்கள் எனப்படும் வரகு, சாமை, மாப்பிளை சம்பா, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் முதலியவை தற்போது நாம் பயன்படுத்தி வரும் அரிசி, கோதுமைக்கு மாற்றாக விளங்கும். இத்தகைய சிறு தானியங்களே நம் முன்னோர்களுக்கு பிரதான உணவாக இருந்தது. காலமாற்றத்துக்கேற்ப, இவையெல்லாம் வழக்கொழிந்து விட்டன.
- தற்போது உணவுத் தேவையை சமாளிக்க சிறு தானியங்களை அதிக அளவில் பயிரிட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது. வேளாண் துறையினர் இதைப் பெரிதும் வலியுறுத்தி வருகின்றனர்.
- வளரும் நாடுகளிலேயே சிறு தானியங்கள் பெருமளவு பயிரிடப்படுகின்றன. இந்தியா, ஆப்ரிக்காவில் இவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இருந்தாலும், உற்பத்திப் பரப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வேளாண் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
- நமது நாட்டில் சுமார் 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத் தொழிலையே தங்களது பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, வேளாண் ஆராய்ச்சிப் பணிகளில் இந்தியா வலுவாகவும் முன்னிலையிலும் உள்ளது. நெல், கோதுமை, பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பால், பால் பொருள்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றுள்ளது.
- இருந்தாலும், பருவநிலை மாறுபாடு, இயற்கைச் சீற்றம், மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. முதல் பருவத்தில் அதிக உற்பத்தி, அடுத்த பருவத்தில் குறைவான உற்பத்தி என சமநிலையற்ற போக்கு நிலவுகிறது. மேலும், விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவரும் நிலையில், சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது.
- நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3 சதவீதமாக அதிகரித்திருந்த உணவு தானிய உற்பத்தி, இரண்டாவது காலாண்டில் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், தேவை அதிகரித்து வருகிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும். மாற்றுப் பயிருக்கு மாற வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
- வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை பல்வேறு வடிவங்களில் உணவுப் பொருள்களாக இருந்த நிலை மாறி, இன்று மருந்துப் பொருள்களாகக் காட்சியளிக்கின்றன. சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் சாப்பிட வேண்டிய பொருள்களாகிவிட்டன.
- தமிழகத்தைப் பொறுத்தவரையில் பரவலாக இவை சாகுபடி செய்யப்படவில்லை. குறைந்த அளவிலேயே இவை சாகுபடி செய்யப்படுவதால், இவை அதிக அளவில் சந்தைக்கு வருவதில்லை. மானாவாரிப் பயிர்களான இவை, குறைந்த காலத்தில் அதிக மகசூலைத் தரக்கூடியவை என்று விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை.
- மேலும், பெரு நகரங்களில் உள்ள பெரிய அங்காடிகளில் இவற்றுக்கென தனிப் பிரிவை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதுபோல, இயற்கை உணவகங்கள் என்ற பெயரில் நகரங்களில் இவை செயல்படுகின்றன. அங்கு தான் பல்வேறு வகையான உணவு வகைகள் கிடைக்கின்றன.
- மத்திய – மாநில அரசுகள் சிறு தானியங்களைச் சாகுபடி செய்வது குறித்தும், அவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில், ஏதாவது ஓராண்டை “உலக சிறு தானியங்கள் ஆண்டு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும்.
- சாகுபடி முறையில் ஆகட்டும், உணவாகப் பயன்படுத்துவதில் ஆகட்டும் சிறு தானியங்கள் எளிதானவையே, சிறந்தவையே என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- இவற்றை சாகுபடி செய்ய அதிக நீர் தேவைப்படாது. பராமரிப்புச் செலவும் குறைவே. இவை பசி தாங்கும் தானியங்கள். அரிசியை விட கம்பு அதிக இரும்புச்சத்து கொண்டது. இதில் கால்சியம், புரதம் ஆகியவை அதிகம் உள்ளன. கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு.
- சீனாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தினைப் பயிரானது இதயத்தை வலுப்படுத்தப் பெரிதும் உதவும். உடல் எடையைக் குறைக்க வரகு சிறந்த உணவுப் பொருள் ஆகும்.
- சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள், மானியங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
- விளைந்த சிறு தானியங்களை சந்தைப்படுத்த உரிய வழிமுறைகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
- அனைத்துப் பகுதிகளிலும் இவை தாராளமாகக் கிடைக்க சிறப்பு அங்காடிகளை ஏற்படுத்த வேண்டும்.
- பொதுமக்களும் இவற்றை உணவாகப் பயன்படுத்த, இவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
Thursday, 27 December 2018
இந்தியாவிலுள்ள சட்டங்கள்
TNPSCSHOUTERS
08:31
- இந்தியாவில் இதர மாநிலங்களைக் காட்டிலும் காஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுளதை நாம் அறிவோம். மேலும் மத்திய அரசு இயற்றும் அனைத்துச் சட்டங்களிலும், ஜம்மு-காஷ்மீர் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.
வரலாற்றுப் பின்னணி
- மேற்கே காபுல் (இன்றைய ஆப்கானிஸ்தான்) முதல் கிழக்கே இமய மலையின் அடிவாரம் வரை பரவியிருந்தது அப்போதைய காஷ்மீர். "காஷ்யப்" என்ற துறவி காஷ்மீரை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர்.
- இமய மலை முழுவதும் சென்று அருட்பணி ஆற்றியவர். காஷ்மீர் என்றால் சமஸ்கிருத்தில் உலர்விக்கப்பட்ட நிலம் (கா= தண்ணீர்+ ஷமீர்=உலர்ந்த நிலம்) என்று பொருள். கல்ஹனர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்னும் வரலாற்று நூலில், காஷ்யப் வாராகமுல்லை மலையை (இன்றைய பெயர் பாரமுல்லா) பிளந்து தண்ணீர் வரச்செய்து, பின்னர் தண்ணீர் உலர்ந்ததும் பண்டிதர்களை குடியிருக்கச் செய்ததாக கூறுகிறது.
- ஜம்மூவின் பெயர் காரணம் சற்று விசித்திரமானது, ஜம்பூலசன் என்னும் அரசன் ஒருமுறை காஷ்மீர் மலைப் பகுதிக்கு வேட்டைக்கு சென்ற போது, ஒரே இடத்தில் ஒரு சிங்கமும், ஒரு ஆடும் ‘தவி’ ஆற்றில் நீர் அருந்துவதைப் பார்த்து பரவசமடைந்து அங்கே ஒரு நகரத்தை தோற்றுவித்தார்.
- அதற்கு, ஜம்பூ என அவர் பெயரையே சூட்டி இருந்தார். பின்னாளில் மருவி ஜம்மு என்றானது. முதலில் பண்டிதர்களும், பிறகு புத்த மதமும் காஷ்மீரில் கால் பதிக்க புத்த கோவில்களும், விகாரங்களும் காஷ்மீரில் எழுந்தன. கி.மு 250 வரை அசோகரும் பின் மௌரிய வம்சத்தினரும் ஆண்டு வந்தனர்.
- மௌரியர்களைத் தொடர்ந்து குஷான வம்சத்தினர் காஷ்மீரின் மிச்ச வருடங்களை ஆண்டனர். பண்டிதர்களும், புத்த மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த 13-ம் நூற்றாண்டில், சரியாக சொல்வதென்றால் கி.பி 1326-ல் மேற்கில் இருந்து வந்தது வினை.
- ஷாமிர் என்ற மன்னன் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் வழியில் உள்ள அத்தனை ஊர்களையும் சூரையாடிவிட்டு காஷ்மீருக்கு வந்தார். காஷ்மீரைப் பொறுத்தவரை காண்பவர் எவரும் அதன் அழகில் மயங்கி அமைதி அடைவர், ஆனால் ஷாமிர் மேலும் உற்சாகமடைந்து ஊரை சூரையாடத் தொடங்கினான்.
- இப்படியாக இஸ்லாம் காஷ்மீரில் நுழைந்தது. பின்னர் அங்கு வந்த சுல்தான் சிக்கந்தர் அங்கு இருந்த மக்களையும், குறு நில ஆட்சியாளர்களையும் இஸ்லாத்திற்கு மாறும்படி பணித்தார். இஸ்லாம் அல்லாத மற்ற மக்களுக்கு வரி விதிப்புகளும், சிறப்பு சட்டங்களும் இயற்றப்பட்டன.
- இவர் காலத்தில் தான், பெர்ஷிய சிற்பக் கலையும், கம்பளி தயாரிப்பும் வளர்ச்சி அடைந்தது. 16-ம் நூற்றாண்டு தொடங்கி பண்டிதர்களும், பவுத்தர்களும் இரண்டாம் தர குடிகள் ஆனர்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டு முடிவில் அவுரங்கசீப் மறைவிற்கு பின் முகலாய அரசர்களின் பிடி தளர்ந்தது.
- 1846 ல் ஏற்பட்ட ஆங்கிலோ சீக்கிய போரின் முடிவில், குலாப் சிங் லாகூர் மற்றும் சில மேற்கு பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு காஷ்மீரை வாங்கிக் கொண்டார். காஷ்மீருக்கு அவர் ஆங்கிலேயருக்கு வருடம் இவ்வளவு என்று வரி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். குலாப் சிங்கிற்கு காஷ்மீர் கிடைத்தது ஒரு சுவையான சம்பவம்.
- அப்போதைய பஞ்சாப், காஷ்மீர் வரை நீண்டிருந்தது. குலாப் சிங், தோக்ரா என்ற மலைவாழ் இனத்தை சார்ந்தவர். ஆங்கிலோ சீக்கிய போரில் வீரம் காட்டிய குலாப் சிங்கிற்கு காஷ்மீரை பரிசாக கொடுத்தார் பஞ்சாப் அரசர். குலாபிற்கு பின் வந்த ரன்பீர் சிங், இப்போதைய கில்கிட் பால்டிஸ்தான் வரை கைப்பற்றினார். அதன் பின் காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங். காஷ்மீர் இவருக்கு தாத்தா சொத்து.
- ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு.
- தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஸ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர்.
- ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஸ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.
- 1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்.
- இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
- ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐ நா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐ நாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26 ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.
சட்டப்பிரிவு 35-A என்ன சொல்கிறது?
- 1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு - காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் 35-A சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
- 1954ஆம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவின் படி 35-A சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் சட்டப்பிரிவு 370- உடன் சேர்க்கப்பட்டது. இது, மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை 35-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழங்குகிறது. மேலும் சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, அம்மாநில சட்டப்பேரவை எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.
370வது பிரிவு சொல்வது என்ன?
- இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.
- இதன்படி, இந்திய நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடி உண்டு ஆயினும் இந்தக் கொடியை இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும். இம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனமும் உண்டு
- அம்மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது, அம்மாநில முதல்வரை ஆலோசித்தப் பின்னரே நியமிக்க வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தால் அவர்கள் நிலம் வாங்க முடியும்.
- ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
- முதலில் உருவாக்கப்பட்ட 370வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது.
- அதன்பின்னர் 1952 நவம்பர் 15-ல் அதில், அதாவது 370வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது.
- அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.
Subscribe to:
Posts (Atom)