- அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து, பயிற்சிகளை மேற்கொள்வர்.
- ஒவ்வொரு ஆண்டும், இந்த அட்டவணை, மார்ச் மாதமே வெளியாகி வந்தது.இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, புத்தாண்டு துவங்கும் முன்னரே வெளிவரவுள்ளதால், தேர்வர்கள் பயிற்சிகளின் போக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட இயலும்.
- இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் கூறுகையில், ''வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஒப்புதல் பெற்றதும், மூன்று நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை / TNPSC ANNUAL PLANNER 2019 ANNOUNCED
December 31, 2018
0
Tags