//
Type Here to Get Search Results !

6th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

6th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பல் 'அமினி' இந்தியக் கடற்படையிடம் ஒப்படைப்பு

  • கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஆழமற்ற நீருக்கடியில் செயல்படும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பலான 'அமினி', 2026 நவம்பர் 5 அன்று இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. 
  • இந்திய கப்பல் பதிவு நிறுவனத்தின் வகைப்பாட்டு விதிகளுக்கு இணங்க இப்போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • வாட்டர்ஜெட் மூலம் இயக்கப்படும் இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான அமினி, அதிநவீன இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டு ராக்கெட் ஏவுகணைகள், சோனார் அமைப்புகளைக் கொண்டுள்ளது. 
  • கடலுக்கு அடியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்டறிந்து தகர்க்கும் திறன் கொண்ட இக்கப்பல், கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு, கண்ணிவெடி அமைக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.
  • லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள அமினி தீவின் பெயர் இப்போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பழைய ஐஎன்எஸ் அமினி போர்க்கப்பலின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் இக்கப்பலுக்கு மீண்டும் அதே பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
  • 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள அமினி போர்க்கப்பல், இறக்குமதிச் சார்பைக் குறைத்து நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதுடன், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel