//
Type Here to Get Search Results !

8th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

8th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
  • முதல்வர் விஜய் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து டிரீம் ஒலிம்பிக்ஸ் 2026 என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ்க்கு ரூ.1 கோடி 55 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார். 
57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. 
  • குறிப்பாக, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கைது நடவடிக்கைக்கான அதிகாரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், வரி ஏய்ப்பு தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி அமலாக்க நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், தொழிலதிபர்கள் தேவையற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • இனி வரி ஏய்ப்பு தொடர்பான விவகாரங்களில் உடனடியாக கைது செய்வதற்கு பதிலாக, வரி, வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்ட சிவில் நடைமுறைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்கப்படும்.
  • இதுவரை ரூ.1 கோடியாக இருந்த குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச வரி ஏய்ப்பு வரம்பு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • இதனால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், அதிக அளவிலான நிதி முறைகேடுகள் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்.
  • உள்ளீட்டு வரி விலக்கு (ITC) தொடர்பான நடைமுறைகளில் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்கவும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரும் ரீஃபண்ட் தொகையில் 90% தொகையை தானியங்கி முறையில் விரைவாக வழங்கும் திட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஜிஎஸ்டி தொடர்பாக தேவையற்ற மற்றும் சிறிய அளவிலான நோட்டீஸ்கள் வழங்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், ரூ. 10,000க்கு குறைவான நோட்டீஸ்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • டெலிவரி சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, ரீஃபண்ட் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • மேலும், ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்திற்கு நிறுவனங்கள் செலுத்தும் ஜிஎஸ்டிக்கு உள்ளீட்டு வரி விலக்கு (ITC) பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
  • கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel