2026ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR LITERATURE 2026
TNPSCSHOUTERSOctober 08, 2026
0
2026ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR LITERATURE 2026: பாரம்பரிய இலக்கிய மரபோடு ஒரு விளையாட்டுத்தனமான உரையாடலை நிகழ்த்தி, சமகால இலக்கியத்துக்கு புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்தது. இந்தப் பரிசின் மதிப்பு 12 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் (1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
ஆன் கார்சன் 1990-களில் பல குறிப்பிடத்தக்க படைப்புகளை வெளியிட்டார். தனது ஒட்டுமொத்த எழுத்துப் பயணத்திலும் கவனத்துக்குரிய பாணியில் படைப்புகளை உருவாக்கியவர் ஆன் கார்சன்.
கனடாவை சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனின் படைப்புகள் பெரும்பாலும் கவிதை, உரைநடை, உரையாடல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, எந்தவொரு குறிப்பிட்ட இலக்கிய வகைக்குள்ளும் அடங்காத ஒரு கலவையாக அமைகின்றன.
செவ்வியல் கிரேக்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளுக்காக அவர் பரவலாக அறியப்படுகிறார். இந்த இலக்கிய மரபு அவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஓபரா இசை நாடகங்களுக்கான உரை (libretti) முதல் இலக்கிய விமர்சனம் மற்றும் 1998-ல் வெளியான 'ஆட்டோபயோகிராபி ஆஃப் ரெட்' போன்ற கவிதை நாவல்கள் வரை அவரது படைப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன.
ENGLISH
NOBEL PRIZE FOR LITERATURE 2026: The Swedish Academy in Stockholm announced that the Nobel Prize in Literature is awarded to Canadian writer Anne Carson for her bold and innovative works that engage in a playful dialogue with the tradition of classical literature and create new forms for contemporary writing.
The prize carries a value of 12 million Swedish kronor (1.2 million US dollars). Anne Carson published several notable works in the 1990s. Throughout her literary career, she has created works distinguished by a unique and noteworthy style.
The works of Anne Carson a Canadian poet and essayist often blend poetry, prose, dialogue, and translation, resulting in a hybrid form that defies categorization into any single literary genre.
She is widely recognized for her translations of classical Greek literature, a tradition that significantly influences her own writing. Her works have garnered great acclaim, ranging from libretti for operas to literary criticism and novels in verse, such as *Autobiography of Red* (1998).