
7th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக உயர்வு
- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2023 பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, அதாவது சுமார் 3 ஆண்டுகள் 8 மாதங்களுக்குப் பிறகு ரெப்போ வட்டி முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2023 பிப்ரவரியில் ரெப்போ வட்டி 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2025ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி பல கட்டங்களாக வட்டியை குறைத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ வட்டி 5.25 சதவீதமாக இருந்தது.
- வங்கிகளுக்கு குறுகிய கால தேவைகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டியே ரெப்போ வட்டி. இந்த வட்டி உயர்த்தப்படும்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும்.
- இதன் தாக்கம் வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களில் ஏற்பட்டு, வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி மற்றும் இ.எம்.ஐ அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- அதேநேரத்தில் வங்கிகளின் வைப்பு வட்டிகளும் உயர வாய்ப்புள்ளதால் சேமிப்பாளர்களுக்கு சாதகமான தாக்கமும் ஏற்படலாம்.
- கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்து, ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடந்தது.
- அடுத்த மூன்று காலாண்டுகளில் சராசரி பணவீக்கம் சுமார் 5.8 சதவீதமாக இருக்கும் எனவும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 4.4 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
- அதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பணப்புழக்கத்தையும் கடன் தேவையையும் ஓரளவு கட்டுப்படுத்துவதற்காகவே ரிசர்வ் வங்கி தற்போது வட்டியை உயர்த்தியுள்ளது.
- இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வரும் அவர், வரும் அக்டோபர் 31ந்தேதி பிற்பகல் ஏர் சீஃப் மார்ஷல் பதவியில் பொறுப்பேற்க உள்ளார்.
- இந்திய அரசின் நியமன அறிவிப்பின்படி, அசுதோஷ் தீக்சித் இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக பதவியேற்கிறார். தற்போதைய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அக்டோபர் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.
- 1966-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பிறந்த அசுதோஷ் தீக்சித், 1986-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இணைந்தார்.

