//
Type Here to Get Search Results !

9th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

9th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பட்டணப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியீடு
  • தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3 ஆம் தேதி (03.09.2026) அன்று சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
  • இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பட்டணப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலங்கள் புதிய கட்டிட வளாகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டன. 
  • இந்நிலையில் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
  • அதில் இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடுகளுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • மேலும், இதற்கான கட்டிடக் கலை ஆலோசனை நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆரம்ப மற்றும் இறுதி கட்ட கட்டிட வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை இறுதி செய்வதற்கும் மூன்று பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல-தட ரயில்வேத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தமிழ்நாட்டில், அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே, 77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3, 4-வது ரயில் வழித்தடம் அமைத்தல், ஓசூர் – ஓமலூர் இடையே, 147 கி மீ தொலைவிற்கு  இரட்டை வழித்தடம் அமைத்தல், சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே, 159 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம்  அமைத்தல் ஆகிய மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்.
  • மேலும், வைட்பீல்ட் – பங்காரப்பேட்டை இடையே, 47 கி மீ தொலைவிற்கு 3, 4-வது ரயில் பாதை அமைத்தல், செகந்திராபாத் (காட்கேசர்) – காசிபேட் இடையே, 110 கி மீ தொலைவிலான பல-தட ரயில் பாதைகள் அமைத்தல்  ஆகியவை அடங்கும்.
  • புதிய ரயில் வழித்தடங்கள், போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்த உதவிடும். இதன் மூலம், பயணிகளிடையே, ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறன், சேவையின் நம்பகத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 14 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று பலவழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10,783 கோடி ஆகும். இந்தத் திட்டத்தில், கரக்பூர் – ஜார்சுகுடா (பாக்தேஹி) 4-வது வழித்தடம், கட்னி – பென்ட்ரா சாலை 4-வது வழித்தடம், பிலாஸ்பூர் (உஸ்லாபூர்) – பென்ட்ரா சாலை 3-வது வழித்தடம் ஆகியவை அடங்கும்.
  • ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகள், பயணிகளின் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்வதுடன், ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறனையும், சேவை சார்ந்த நம்பகத்தன்மையையும் அதிகரிக்க உதவிடும்.
  • இந்த பலவழி ரயில் மேம்பாட்டுத் திட்டங்கள், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், கூட்ட  நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel