//
Type Here to Get Search Results !

7th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

7th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
  • பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளுக்காக சுமார் ரூ.1,10,000 கோடி மதிப்பிலான பல்வேறு தளவாடங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • இந்த மொத்தக் கொள்முதலில் சுமார் 98 சதவீத தளவாடங்கள் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளது.
  • இந்திய ராணுவத்திற்காக ரசாயன, உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுதப் பாதிப்புகளைக் கண்டறியும் உளவு வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் இயங்கும் அதிநவீன வாகனங்கள், கண்ணிவெடி பதிக்கும் அமைப்புகள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இழுவை பீரங்கிகள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • உளவு வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டவை. நவீன வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடினமான சூழ்நிலைகளில் ராணுவப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படும்.
  • இந்திய கடற்படைக்காக ஆருத்ரா ரேடார்கள், கடல்சார் எரிவாயு டர்பைன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • ஆருத்ரா ரேடார்கள் தற்போதைய கண்காணிப்பு ரேடார்களுக்கு மாற்றாக செயல்படும். உள்நாட்டு எரிவாயு டர்பைன் உற்பத்தி, போர் கப்பல் துறையில் அயல்நாட்டு சார்புநிலையைக் கணிசமாகக் குறைக்கும்.
  • இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களின் போர் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • தரைவழி பல்நோக்கு ஜாமர்கள், பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பான அணுகல் அட்டை (Access Card) அமைப்பைப் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமர்கள் எதிரிகளின் ரேடார்களை முடக்கும் வல்லமை கொண்டவை. 
  • பாதுகாப்பான அணுகல் அட்டை அமைப்பு வழக்கமான காகித அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அதிநவீன ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் பலப்படுத்தும்.
சீனா மாஸ்டர்ஸ் 2026 - சாட்விக் சிராக் ஜோடி  சாம்பியன்
  • சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 
  • இறுதிப்போட்டியில் சீனாவின் ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடியை 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சீனா மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
  • இந்த வெற்றி நடப்பு சீசனில் சாட்விக்-சிராக் ஜோடிக்கு கிடைத்த 2-வது பட்டமாகும். இதற்கு முன்பு சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 தொடரில் இருவரும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். 
  • மேலும், தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 தொடரில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தனர். இதனால் இந்த சீசனில் இந்திய ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கோவாவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28வது கூட்டம்
  • மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28-வது கூட்டம் கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. 
  • இக்கூட்டத்தில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் & டையூ நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இக்கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மேற்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, தொழில்துறை, நிதிசார் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். 
  • 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பிராந்தியத்தின் பங்களிப்பு அளப்பரியது என்று பாராட்டினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel