
4th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
- இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மற்றொரு முக்கிய சாதனையாக, இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
- வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், திட்டமிடப்பட்ட Sub-Geosynchronous Transfer Orbit எனப்படும் துணை புவிநிலை மாற்று சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
- EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும். பூமியின் பரந்த பகுதிகளை அடிக்கடி படம் பிடித்து கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும்.
- இதன் மூலம் புவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான இந்தியாவின் செயற்கைக்கோள் திறன் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- GSLV வரிசையில் இது 17வது ராக்கெட் என்றாலும், இந்தியாவின் Geosynchronous Satellite Launch Vehicle திட்டத்தின் 19வது பயணமாகும்.
- 4 மீட்டர் விட்டம் கொண்ட ஓஜிவ் வடிவ கலப்பு பேலோட் ஃபேரிங்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட், EOS-05 செயற்கைக்கோளை Sub-GTO சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

