//
Type Here to Get Search Results !

21st SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

21st SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சென்னையில் அமைக்க உள்ள உலகளாவிய திறன் மையம், இந்தியாவில் அந்நிறுவனம் அமைக்கும் முதல் GCC ஆகும்.
  • இந்த மையம் இந்தியாவில் ஸ்டார்பக்ஸின் சில்லறை வணிகத்துக்கான Tata Consumer Products நிறுவனத்துடனான கூட்டு நிறுவனத்திலிருந்து தனித்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்
  • சென்னை, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, வீடுகள் தோறும் பசுமை மின்சாரம் தன்னிறைவு பெற்ற பசுமைத் தமிழ்நாடு ' மார்ச் 2027க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்இணைப்பு எனும் இலக்கை வென்றிட "தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத்திட்டத்தை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். 
டி-72, டி-90 பீரங்கி வாகனங்களுக்கான துணை மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்
  • டி-72, டி-90 பீரங்கி வாகனங்களுக்கான துணை மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அக்கியூரேட் இன்டஸ்ட்ரியல் கன்ட்ரோல்ஸ் தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 
  • புதுதில்லியில் 2026 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில்  ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • துணை மின் உபகரணங்கள் என்பது பீரங்கி வாகனங்களின் பல்வேறு  பாகங்களுக்கு மின் உற்பத்தி செய்வதற்கான ஒரு மாற்று முறையாகும். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட துணை மின் உபகரணங்களை அறிமுகப்படுத்துவது இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுகளின்  செயல்பாட்டு தயார்நிலை, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.
  • இக்கொள்முதல், பீரங்கி வாகனங்களின் முக்கிய துணை பிரிவுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதை நோக்கிய ஒரு சிறப்புமிக்க நடவடிக்கையாகும். அத்துடன், தொழில்துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இது நிரூபிக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போவதோடு பாதுகாப்புத்துறையில் தற்சார்பை அடைவதற்கும், உலக அளவில் போட்டித்தன்மைமிக்க இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையை கட்டமைப்பதற்கும் ஒரு மைல்கல்லாக அமைகிறது.
20வது ஆசிய விளையாட்டுப் போட்டி - 2வது நாள்
  • 20வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அகதிகள் அணியினரும் கலந்துகொண்டுள்ளனர்.
  • இந்திய அணியில் 269 வீரர்கள் மற்றும் 234 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 36 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் களம் காண்கின்றனர். இந்தியா இன்று 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றது.
  • துப்பாக்கி சுடுதல் - ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • துப்பாக்கி சுடுதல் - ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷு தில்லான் மற்றும் பார்த்த் மானே ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • கலப்பு தற்காப்புக் கலை (Mixed Martial Arts) - பெண்களுக்கான பாரம்பரிய 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சிங்கப்பூரின் டியோ ஹுய் ஹூனிடம் தோல்வியடைந்த சுச்சிகா தரியல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel