//
Type Here to Get Search Results !

6th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

6th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டம் ‘கோபர்தன்’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.
  • 2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், உயிரிஎரிவாயு உற்பத்தியை நாட்டின் எதிர்கால எரிசக்திக் கட்டமைப்பின் முக்கியத் தூணாக மாற்றும். 
  • மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், உள்நாட்டு உற்பத்தியைப் பத்து மடங்கு வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
அசாமில் பைஹாடா சரியாலிலிருந்து தேஜ்பூர் வரை ரூ 8,970.20 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • அசாமில் தேசிய நெடுஞ்சாலை 15-ல் 135.871 கிலோ மீட்டர் தொலைவிலான நான்கு வழித் தடங்களைக் கொண்ட குவகாத்தி-தேஜ்பூர் வழித்தடத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் ரூ 8,970.20 கோடி மொத்த மூலதன செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையுடன் இணைந்து தேஜ்பூர் புறவழிச் சாலையில் அவசரகாலத் தரையிறங்கும் வசதி (4.9 கிமீ) அமைக்கப்பட உள்ளது. 
  • இது பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள என்எச்27 (கிழக்கு-மேற்கு வழித்தடம்) சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். 
  • இத்திட்டத்தில் 58.7 கிமீ தொலைவிற்கு ஐந்து பெரிய புறவழிச்சாலைகள் அமைப்பதும் அடங்கும். இதன் காரணமாக, பைஹாடா சரியாலி, சிபஜார், கருபேடியா, தேக்கியாஜூலி, தேஜ்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
  • அத்துடன், 15 பெரிய பாலங்கள், 30 சிறிய பாலங்கள், 19 மேம்பாலங்கள், 1 யானை கடந்து செல்லும் பாதை (தேஜ்பூர் புறவழிச்சாலையில்) ஆகியவை அமைக்கப்பட உள்ளன.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel