//
Type Here to Get Search Results !

3rd AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

3rd AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உடல் உறுப்பு தானத்தில் மீண்டும் 'தமிழகத்திற்கு' முதலிடம்
  • டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகத் தமிழ்நாடு மாநிலத்திற்குத் தேசிய அளவில் 'சிறந்த மாநிலத்திற்கான' விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், ஒன்றிய சுகாதாரம், குடும்பநலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இந்த உயரிய விருதைத் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்ற மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் விவாதமின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
  • இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34-லிருந்து, 38-ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த திருத்த மசோதாவை ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவசர சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 
  • நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறை செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறி உள்ளது. 
  • விரைவில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு பின் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel