
21st AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரிசர்வ் வங்கி நிர்வாக வாரியத்திற்கு இயக்குனராக இஸ்ரோ மாஜி தலைவர் சோமநாத் நியமனம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், ரிசர்வ் வங்கியின் நிர்வாக வாரியத்தின் பகுதிநேர இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றி பல்வேறு விண்வெளி சாதனைகளைப் படைத்து கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்ற விண்வெளி ஆய்வு நிபுணர் எஸ்.சோமநாத், பெங்களூரு அருகே உள்ள சாணக்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
- இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக வாரியத்தில் பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குனராக எஸ்.சோமநாத் 4 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில், வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனிடையே, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்தராவின் பதவிக்காலமும் ரிசர்வ் வங்கி வாரியத்தில் மேலும் 4 ஆண்டுகளுக்கு பகுதிநேர இயக்குனராக நீட்டிக்கப்பட்டுள்ளது.

