//
Type Here to Get Search Results !

19th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

19th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதல்வர் விஜய், விதி எண் 110ன் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
  • தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும் ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும்.
  • வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான "பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை" அமைக்கப்படும்.
  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
  • திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தரும மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
  • செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பி.எஸ்சி செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், "முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்" (Chief Minister's Cancer Care Mission) 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
  • மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். 
  • சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் வணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நான்கு ரயில்வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ரயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ.9,450 கோடி செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • கும்மிடிப்பூண்டி-கூடூர் 3-வது, 4-வது வழித்தடம்-90 கிலோ மீட்டர் (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு), காரக்பூர்-பத்ராக் (ராணிடால்) 4-வது வழித்தடம்-173 கிலோ மீட்டர் (மேற்கு வங்கம், ஒடிசா), பத்ராக்-ஹரிதாஸ்பூர் 4-வது வழித்தடம்-75 கிலோ மீட்டர் (ஒடிசா), கட்டாக்-பாரதீப் (படபந்தா) 3-வது, 4-வது வழித்தடம்-72 கிலோ மீட்டர் (ஒடிசா) ஆகிய இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை 2030-31-ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ள இந்த நான்கு திட்டங்களால் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 410 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும்.  இந்தப் பல்தடத் திட்டங்கள் சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் 6,448 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
பீகாரில், முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா இடையே தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த ரூ.3,590.73 கோடி மதிப்பீட்டிலானத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
  • பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை - 22-ன். முசாஃபர்பூர்-சீதாமர்ஹி - சோன்பர்சா வழித்தடத்தை, 4-வழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • 82.578 கி.மீ நீளம் கொண்ட இத்திட்டம், மொத்தம் ரூ.3,590.73 கோடி மூலதனச் செலவில், பொது - தனியார் துறை முதலீட்டுடன்  செயல்படுத்தப்படும்.
  • பீகாரின் விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிடத்தக்க பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 
  • இது இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில்  உள்ள சோன்பர்சாவையும், தேசிய நெடுஞ்சாலை-27-ல் (கிழக்கு-மேற்கு வழித்தடம்) உள்ள முசாஃபர்பூர் போன்ற பொருளாதார மையங்களையும் இணைக்கும் ஒரு முக்கியப் பாதையாக அமையும். 
  • முசாஃபர்பூர், முக்ஸுத்பூர், ருன்னி சையத்பூர், தும்மா, டும்ரா, புதாஹி, சோன்பர்சா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை இத்திட்டம் கணிசமான அளவில்  குறைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel