
11th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
- வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
- இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.
- நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வு அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருக வழிவகுக்கிறது.
- அதேபோல் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை நீட் தேர்வு இழந்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை மேற்கொள்ள வேண்டும்.
- நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். மாநிலங்களின் உரிமையை மதிப்பதே கூட்டாட்சி முறையாகும். இதனால் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
- தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதற்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு செய்தார்.
- மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று அழைக்கப்படும் நிலையில், அரசியல் சாசனத்தின் முதல் அட்டவணையில் 'கேரளா' எனப் பதிவாகியுள்ளது.
- இதனையடுத்து, மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றக் கோரி கேரள சட்டமன்றத்தில் 2024 ஜூன் 24 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநிலங்களின் எல்லைகள் மற்றும் பெயர்களை மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 3-ன் கீழ், கேரளம் பெயர் மாற்ற நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் 'கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026' ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.
- எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதேபோலக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிதியுதவியை வேகப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் வழிவகை செய்யும் 'தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026' மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோஹலால் அவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

