நலம் AI வாட்ஸ்அப் சேவை / NALAM AI WHATSAPP SERVICE
TNPSCSHOUTERSJuly 08, 2026
0
நலம் AI வாட்ஸ்அப் சேவை / NALAM AI WHATSAPP SERVICE: ஒரு காலத்தில் ஒரு அரசு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் கூட நாள் கணக்கான அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டி இருக்கும். ஆனால் இப்போது நிலைமையே வேறு. நம் போனிலேயே எல்லா வேலையும் முடித்து கொள்ள முடிகிறது.
பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும் அரசு மருத்துவமனைகளுக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் இன்றும் காலையிலேயே சென்று OP சீட்டு வாங்க காத்திருக்க வேண்டி தான் இருக்கிறது.
ஆனால் இனி அந்த நிலை தேவையில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு நலம்AI என்ற வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்துள்ளது.
இனிஅரசு மருத்துவமனை சேவைகள் உங்கள் விரல் நுனியில் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் புதிய முன்னெடுப்பான "நலம்AI" WhatsApp Chatbot சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
எனவே பொதுமக்கள் இனி வீட்டிலிருந்தபடியே அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவ முன்பதிவு (OP Appointment) மற்றும் சுய பதிவு (One-time Registration) செய்து கொள்ளலாம்.
உங்கள் போனில் வாட்ஸ் அப்பில் 96192 22999 என்ற எண்ணிற்கு "HI" என மெசேஜ் அனுப்பினாலே போது. உங்கள் மொழியை தேர்ந்தெடுக்க சொல்லி காட்டும். அதில் ஆங்கிலம் அல்லது தமிழ் என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
உடனே "NalamAI (TN-NHM)-க்கு வரவேற்கிறோம்! பதிவு, மருத்துவர் மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை மற்றும் அருகில் மருத்துவமனைகள் ஆகியவற்றில் நான் உங்களுக்கு உதவ முடியும்.
சேவையை தொடங்க, உள்நுழையவும் என காட்டும். உங்களின் மொபைல் நம்பரை உள்ளிட்டால் போதும். அரசு மருத்துவமனைக்காக OP சீட்டு கிடைக்கும். எனவே மருத்துவமனை சென்று நேரடியாக மருத்துவரை பார்க்கலாம்.
இது மட்டுமில்லாமல் உங்களின் லொகேஷனை பகிர்ந்தால் உங்களுக்கு அருகில் என்னென்ன அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட விவரங்களையும் வாட்ஸ் அப்பிலேயே காணலாம்.
முதல்கட்டமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை முறையில் இன்று தொடங்கும் இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதவி (one-time Registration) மற்றும் OP முன்பதிவை (Appointment booking) செய்து கொள்ள முடியும்.
இச்சேவை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலன் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை போனில் சேவ் செய்து கொள்ளுங்கள். இதற்கு "HI" என அனுப்பினால் போதும். அதிலேயே என்னென்ன சேவைகள் கிடைக்கின்றன என்ற தகவல் காட்டும், அவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதை கிளிக் செய்தால் போதும்.
ENGLISH
NALAM AI WHATSAPP SERVICE: There was a time when obtaining even a single government certificate required making multiple trips to government offices over several days. The situation is vastly different now; we can complete all such tasks right from our phones.
Although most government services have gone digital, visiting a government hospital previously meant arriving early and waiting in line just to get an Outpatient (OP) slip. That is no longer necessary. The TVK government, led by Chief Minister Vijay, has introduced a WhatsApp service called "NalamAI."
Government hospital services are now available at your fingertips. The Tamil Nadu government's new initiative, the "NalamAI" WhatsApp chatbot service, goes live today.
Consequently, the public can now book medical appointments (OP) and complete one-time registration for government hospitals from the comfort of their homes.
Simply send a message saying "HI" to the number 96192 22999 on WhatsApp. You will be prompted to select your preferred language—either English or Tamil.
It immediately greets you: "Welcome to NalamAI (TN-NHM)! I can assist you with registration, doctor's prescriptions, test reports, health ID cards, and locating nearby hospitals."
To start the service, you will be prompted to log in; simply enter your mobile number. You can obtain an Outpatient (OP) slip for government hospitals, allowing you to visit the hospital and consult a doctor directly. Additionally, by sharing your location, you can view details about nearby government hospitals right within WhatsApp.
Launched today on a trial basis in the Department of Respiratory Medicine at Rajiv Gandhi Government General Hospital, this initiative is set to expand statewide soon.
A government statement announced that, under the Chief Minister's guidance, the Department of Health and Family Welfare is launching the "NalamAI" WhatsApp chatbot service designed for interactive communication to ensure easy public access to government medical services.
Through this service, the public can complete one-time registration and book OP appointments from the comfort of their homes. It was announced with pleasure that the service would be implemented on a trial basis starting tomorrow in the Department of Respiratory Medicine at Rajiv Gandhi Government General Hospital.
Therefore, please save the number 96192 22999 on your phone. Simply send "HI" to this number; the available services will be displayed, and you can select the one you need.