//
Type Here to Get Search Results !

9th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

9th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரூ. 15,037 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • 'முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (ஜூலை 09) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், நெல்லை மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. 
  • மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் சூரிய ஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), ஆகியவற்றுக்கிடையிலான கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் மனு சந்தானம் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
  • மின்துறையை உலகத் தரத்திற்கேற்ப மாநிலத்தின் நவீனமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள் (Technical Expert Audits), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் (Data-driven Decision Making) ஆகியவற்றை நீண்டகால ஒத்துழைப்பிற்கு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகுக்கிறது.
கோயம்புத்தூரில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 29-வது கூட்டம் 
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) -வின் 29-வது கூட்டம் இன்று (09.07.2026) கோயம்புத்தூரில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமியில் (CASFOS) நடைபெற்றது. 
  • இக்கூட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சரும், என்டிசிஏ-வின் தலைவருமான திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார். 
  • இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ராஜீவ் பிரதாப் ரூடி, திரு. ஹரிஷ் சந்திர மீனா, ஆணையத்தின் பிற உறுப்பினர்கள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், புலிகள் வாழிட மாநிலங்களின் தலைமை வனவிலங்கு காப்பாளர்கள், புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • நாட்டில் புலிகள் பாதுகாப்பு, வனவிலங்கு மேலாண்மை ஆகியவை தொடர்பான முக்கிய கொள்கை, மேலாண்மை, நிறுவனப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
  • இந்தியாவின் புலிகள் வாழ்விடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்தல் ஆகியவற்றில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின. 
  • முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயலாக்கத்தை ஆணையம் ஆய்வு செய்ததுடன், புலிகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட முன்மொழிவுகளையும் பரிசீலித்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது வருடாந்திர உச்சிமாநாடு
  • ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பானீஸீன் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 8 முதல் 10-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறார்.  அவர் மெல்பெர்னில் இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.
  • அப்போது வரலாற்று உறவுகள், மக்களிடையேயான தொடர்புகள், பகிரப்பட்ட உத்திசார் நலன்கள், பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை இருதலைவர்களும் நினைவுகூர்ந்தனர்.  
  • விரைவாக மாறி வரும் உலகளாவிய சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும்  பிராந்தியத்தின் அமைதி, வளம், ஸ்திரத்தன்மைக்கு  நன்மை பயக்கக் கூடிய புதிய ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஆராய்வதற்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இருதலைவர்களும்  தங்களுடைய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள்.
  • ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இருநாட்டுக் கூட்டாண்மையின் அடித்தளம் என்பதை இருநாட்டு பிரதமர்களும் உறுதிபடுத்தினார்கள். இதற்காக ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுத் தீர்மானத்தை அவர்கள் அறிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel