//
Type Here to Get Search Results !

5th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

5th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

விபி-ஜி-ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி முதல் தவணை - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் விடுவித்தார்
  • மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று (04.07.2026) அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலை வாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் எனப்படும் விபி-ஜி-ராம் ஜி திட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்தார். 
  • இக்கூட்டத்தின் போது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி மதிப்பிலான முதல் தவணையை அவர் விடுவித்தார்.
ககன்யான் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த பாராசூட் சோதனை வெற்றி
  • விண்கலன் என்பது விண்வெளி வீரர்கள் ஏவுதலின் போதும், விண்வெளிப் பயணங்களின் போதும் மற்றும் கடலில் வந்து இறங்கும் போதும் தங்கியிருக்கக்கூடிய ஒரு சிறப்பு அழுத்தப்பட்ட விண்வெளி வாகனமாகும்.
  • இதற்கிடையில், சோதனைகளை மேற்கொள்வதற்காக திண்ம மோட்டாரை அடிப்படையாகக் கொண்ட 'பரிசோதனைகளுக்கான துணை-வட்டப்பாதை ஏவுகணை' என்ற திட்டத்தை தாங்கள் உருவாக்கி வருவதாக இஸ்ரோ சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 
  • இது பல்வேறு சோதனைச் சூழல்களின் கீழ் ஏராளமான பரிசோதனைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பு சோதனை ராக்கெட்டாகும். 
  • இத்தகைய சோதனைகளின் போது, விண்கலனானது 10 முதல் 17 கி.மீ உயரத்தில் இருக்கும்போது இந்த ஏவுகணையிலிருந்து பிரிக்கப்படும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையின் போது சுமார் 10 பாராசூட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது. 
  • விண்கலன் கீழே இறங்கி கடலில் வந்து விழுவதற்கு ஏதுவாக, அதன் வேகத்தைக் குறைப்பதில் இந்த பாராசூட்டுகள் முதன்மையான பங்காற்றுகின்றன.
தேசிய மின்-ஆளுகை விருது 2026 - ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கம் வென்றது
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR) முதன்மை முன்முயற்சியான, தேசிய சுகாதார ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டம் எனப்படும் ஐசிஎம்ஆர் - மைண்ட்ஸ் (ICMR-MINDS) பணியாளர், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  
  • மின்-ஆளுகைக்கான இந்த தேசிய விருதுகளில், 'மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவையும் பிற நவீன கால தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் புதுமை படைத்தல்' என்ற பிரிவு 2-ன் கீழ் ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel