சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு 2026 / GLOBAL PASSPORT INDEX 2026
TNPSCSHOUTERSJuly 05, 2026
0
சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு 2026 / GLOBAL PASSPORT INDEX 2026: பொதுவாக பாஸ்போர்ட் தரவரிசை என்றாலே, விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதே பலரின் நினைவுக்கு வரும். ஆனால், சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு (Global Passport Index) அதற்கு அப்பாற்பட்ட பல அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உலகளவில் கிடைக்கும் பயண சுதந்திரம், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், பொருளாதார சூழல் மற்றும் தனிநபர்களுக்கு கிடைக்கும் வசதிகள் உள்ளிட்ட காரணிகளை இணைத்து இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் பட்டியலின்படி, பயண சுதந்திரத்தில் இந்தியா 136-வது இடத்தையும், முதலீட்டு வாய்ப்புகளில் 94-வது இடத்தையும், வாழ்க்கைத் தரத்தில் 118-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்தியா 125-வது இடத்தில் உள்ளது.
இது கடந்த ஆண்டைவிட ஒரு இடம் பின்னடைவாகும். அதேசமயம், 2021-ம் ஆண்டு சர்வதேச பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா 127 இடத்தில் இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 2 இடங்கள் முன்னேறியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இந்த அறிக்கை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் பல நாடுகளுக்கு எளிதாக பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.
அதன்படி, நேபாளம், பூடான், ஜமைக்கா, பார்படோஸ், துனிசியா, அங்கோலா, மக்காவ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் அல்லது Visa on Arrival வசதியுடன் செல்ல முடிகிறது.
அதேவேளையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளுக்கு பயணம் செய்ய முன்கூட்டியே விசா பெறுவது கட்டாயமாக உள்ளது.
அதேசமயம், இந்தப் பட்டியலில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
ENGLISH
GLOBAL PASSPORT INDEX 2026: When people think of passport rankings, they usually consider only how many countries one can visit without a visa. However, the Global Passport Index takes various other factors into account.
This ranking is compiled based on factors such as global travel freedom for passport holders, investment opportunities, quality of life, economic conditions, and amenities available to individuals.
According to this year's list, India ranks 136th in travel freedom, 94th in investment opportunities, and 118th in quality of life. Overall, India holds the 125th position. This marks a drop of one place compared to the previous year.
However, it is also noted that India has improved by two places over the last five years, having ranked 127th in the 2021 global passport rankings.
The report further highlights that Indian passport holders enjoy easy travel access to many countries worldwide. Indians can visit nations such as Nepal, Bhutan, Jamaica, Barbados, Tunisia, Angola, and Macau either visa-free or with a 'Visa on Arrival' facility.
Conversely, obtaining a visa in advance is mandatory for travel to major countries like the United States, the United Kingdom, Canada, Germany, France, Japan, and Australia. Meanwhile, countries such as Sweden, Switzerland, and Finland occupy the top three spots on this list.