
4th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) குஜராத்தின் சனந்தில், சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் (OSAT) என்ற செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார்.
- இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தனது இலக்குகளை அடைவதில் தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்தத் தொடக்க விழா ஒரு சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
- நாடு தனது வலுவான தீர்மானங்களை எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியான செயல்களாகத் தொடர்ந்து மாற்றி வருகிறது என்று அவர் கூறினார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.
- அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
- நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், உலகத் தரம் வாய்ந்த விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) 'உடான்' திட்டத்தின் அடுத்த கட்டமான விக்சித் உடான் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
- ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய கலாச்சாரம் - சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

