//
Type Here to Get Search Results !

30th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

30th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரூ. 300 கோடி முதலீட்டில் கார் உதிரிபாகம் உற்பத்தி நிலையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழகத்தில் எல் நினோ பாதிப்பு குறித்த தமிழக அரசு புதிய சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு அமைப்பு
  • தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டில் வலுவான 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் பாதிப்புகளை அறிவியல் ரீதியாகக் கண்காணிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 'சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு' ஒன்றை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • இத்தகைய காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளவும், வறட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கண்டறிந்து அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் 'தமிழ்நாடு பேரிடர் ஆபத்து குறைப்பு முகமையின்' (TNDRRA) கீழ் சிறப்பு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் தலைவராகச் செயல்படும் இக்குழுவில், பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த காலநிலை மாற்ற வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • பேராசிரியர் எஸ். கண்மணி - இயக்குநர்/துறைத் தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
  • டாக்டர் பாலாஜி நரசிம்மன் - பேராசிரியர், ஐ.ஐ.டி மெட்ராஸ்.
  • டாக்டர் அறிவுடை நம்பி அப்பாதுரை - இயக்குநர், டபிள்யூ.ஆர்.ஐ இந்தியா.
  • பேராசிரியர் டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன் - ஆலோசகர், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்.
  • டாக்டர் ஆர். வெங்கடேசன் - உறுப்பினர், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு.
  • டாக்டர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் - இயக்குநர், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம்.
  • பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) - மூத்த மேலாளர், டி.என்.யு.ஐ.எஃப்.எஸ்.
23வது காமன்வெல்த் போட்டி - 7வது நாள்
  • 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்தை வேட்டையாடி வருகின்றனர்.
  • 7வது நாளான நேற்று இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிபதக்கம் கிடைத்தது. இந்தியாவின் மாற்றுத்திறனாளி தடகள வீரர் திலீப் மஹாது காவித் ஆண்களுக்கான 100 மீட்டர் டி47 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 
  • பந்தயத் தூரத்தை வெறும் 10.71 வினாடிகளில் கடந்து, புதிய காமன்வெல்த் சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் பாரா-தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போட்டியில் மற்றொரு வீரரான முகமது பாசில் 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முரளி சங்கர் 8.09 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதல் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.
மக்களவையில் வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றம்
  • மசோதாவானது 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971'-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட தேசியச் சின்னங்களை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
  • இந்த திருத்தம் நடைமுறையானால், 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது, அதற்கு இடையூறு விளைவிப்பது ஆகியவைகளுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
  • இந்த நிலையில் இன்று மக்களவையிலும் 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா, 2026' நிறைவேறியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel