
27th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தென்மாநிலங்களுக்கான கவுன்சில் தமிழக உறுப்பினர்கள் நியமனம்
- நாட்டில் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும், தனித்தனி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், இந்த கவுன்சில்கள் செயல்படுகின்றன.
- அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் அடங்கிய, தென்மாநிலங்களுக்கான மண்டல கவுன்சில் செயல்படுகிறது. அதன் தலைவராக, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார்.
- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கவுன்சிலின் தமிழக பிரதிநிதிகளாக, சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- தமிழக அரசின் தலைமை செயலர், கவுன்சிலின் முதலாவது ஆலோசகராக இருக்கும் நிலையில், இரண்டாவது ஆலோசகராக உள்துறை செயலர் மணிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- பிரதமர் மோடி அறிவித்த உயர்மட்ட குழு, தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்படி பல முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
- இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத், முன்னாள் ஐபி இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னை இயக்குநர் வி. காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலாளர் அனிதா அகர்வால், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு அசத்தலாகச் செயல்பட்டு, காமன்வெல்த் போட்டிகளில் தனது 3வது தொடர்ச்சியான தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
- ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் 28 வயதான சானம்பம் ரிஷிகாந்த சிங் மொத்தம் 264 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவுக்கு முதல் வெள்ளியைப் பெற்றுத் தந்தார்.
- ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துபாண்டி மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி (ஸ்னாட்ச் 126 கிலோ + கிளீன் & ஜெர்க் 160 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

