
26th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு
- கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, புதிய கல்வி அமைச்சராக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
- இதையடுத்து, இன்று பிரஹலாத் ஜோஷி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கல்வி அமைச்சக்தின் மூத்த அதிகாரிகளுடன் அவர் தனது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
- 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற, ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகாந்த சிங், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- ரிஷிகாந்த சிங் 'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோவையும் தூக்கி, மொத்தம் 264 கிலோ எடையை தூக்கினார்.
- கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அனஹத் சிங் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் இரண்டாம் நிலை வீராங்கனையான ருகையா சேலமை 3-0 (11-3,11-7,11-9) என்ற கணக்கில் தோற்கடித்து, எகிப்தின் 13 ஆண்டுக்கால தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- 2005 ஆம் ஆண்டில் "ஜோஷ்னா சின்னப்பா" ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
- அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது அனஹத் சிங் அவரின் சாதனையை விட ஒரு படி மேலேறி பட்டம் வென்று இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

