
25th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், மீன் உருவம் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 11-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- அவற்றில் உறைகிணறுகள், சுடுமண் பானைகள், சுருள் வடிவ மற்றும் பீப்பாய் வடிவ வடிகால் அமைப்புகள், மூடிய மற்றும் திறந்த வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- முதலில் தோண்டப்பட்ட குழியில், சுமார் 160 செ.மீ. ஆழத்தில், ஒரு அடி விட்டமும் ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- அந்தப் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறு மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் 48-வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவின்படி, 2025-26-ம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையின்படி, சாரநாத்தின் பழமையான பௌத்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், இத்தகைய அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் 45-வது தளமாக இது திகழ்கிறது. கட்டடக்கலைச் சிறப்பு, பிராந்திய அடையாளம், சரித்திரத் தொடர்ச்சி போன்ற பன்முகத்தன்மை கொண்ட மரபுகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் நீடித்த கலாச்சாரப் பாரம்பரியத்தை, இந்த உலகளவிலான அங்கீகாரம் மூலம் கொண்டாடப்படுகிறது.
- யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்புத் தளம், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
- அவை சௌகண்டி ஸ்தூபி, சாரநாத்தின் தொல்பொருள் எச்சங்கள் (தமேக் ஸ்தூபி, தர்மராஜிகா ஸ்தூபி, மூலகந்தகுடி விகாரம், அசோகர் தூண் போன்றவை) ஆகும்.
- பௌத்த மரபில் ரிஷிபதனம், இஷிபதனம், மிருகதவம் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படும் சாரநாத் எனும் பழமையான இடத்தின் கட்டடக்கலை, தொல்பொருள் எச்சங்களை இவை ஒன்றிணைத்துப் பாதுகாக்கின்றன.
- இவை அனைத்தும் ஒரு புனிதமான இடத்தைக் குறிக்கின்றன. இங்குதான் கி.மு. 6-ம் நூற்றாண்டில், புத்தர் வருகை தந்து, "தர்மசக்கர பிரவர்த்தனம்" (அறத்தின் சக்கரத்தைச் சுழற்றுதல்) என்று அழைக்கப்படும் தனது முதல் போதனையை வழங்கினார்.
- இந்நிகழ்வு பௌத்த சங்கத்தின் தோற்றத்திற்கும், ஆர்ய அஷ்டாங்க மார்க்கம்'(எட்டு நல்வழிகள்) எனும் கோட்பாடுகளின் நிறுவலுக்கும் அடித்தளமாக அமைந்தது.
- டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
- நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது.
- இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
- இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் வெற்றிகரமாகத் தூக்கினார். இதன்மூலம் 130.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

