//
Type Here to Get Search Results !

22nd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
  • தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.
  • இந்த பள்ளி வகுப்பறைகளில் பயிற்றுவிக்கும் வழிமுறைகள், டிஜிட்டல் நூலகம், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிடம், சிசிடிவி கேமரா என பல்வேறு வசதிகளைக் கொண்டு இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயர் 'காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றம்
  • திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதலமைச்சர் காலை உணவு திட்டம் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். 
  • இந்நிலையில் தற்போது, 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' எனும் பெயரை மாற்றி, 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • ஏற்கெனவே 'நான் முதல்வர்', 'முதல்வர் பதிப்பகம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றியமைத்த நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரையும் மாற்றம் செய்துள்ளது.
பர்கூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரையடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் வெள்ளச்சியம்மாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த நடுகல்லுக்கு கோயில் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன.
  • இவை 5 செ.மீ. உயரமும், 10 செ.மீ. அகலமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண சிறு குவளைகள் ஆகும். இது மட்டுமல்லாமல் 10 செ.மீ. உயரமும் 16 செ.மீ. குறுக்களவும் கொண்ட சற்று பெரிய கருப்பு சிவப்பு வண்ண மண் பாண்டம் சிறிது உடைந்த நிலையில் கிடைக்கப் பெற்றது. சுமார் ஒன்னேகால் அடி விட்டம் கொண்ட கருப்பு சிவப்பு வண்ணத் தட்டு ஒன்றும் உடைபட்ட நிலையில் கிடைத்துள்ளது.
  • குவளைகளில் சம இடைவெளிகளில் மூன்று இறந்த தலைவனின் குல கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இவை ஆறு கட்டங்களைக் கொண்டதாக உள்ளன. 
  • இது மட்டுமல்லாமல் கொம்பு போன்று செய்யப்பட்ட ஐந்து மண்ணாலான பகுதிகள் ஜாடி போன்ற மட்கலனின் தாங்கிகளும் கிடைத்துள்ளன.
  • இவை ஜாடியின் அடிப்பகுதியில் காணப்படும். 32 செ.மீ. விட்டமும், 15 செ.மீ. உயரமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண வாணலி மண்பாண்டம் கிடைத்துள்ளது. 
  • இது மூடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுசிறு வானைகள் உடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த மண்பாண்டங்களில் அனைத்தும் குலக்குறியீடுகள் கீறப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel