
1st JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூன் 2026 மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி
- ஜூன் 2026-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.9% அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக இறக்குமதிகள் மீதான வரி வசூல் அதிகரித்ததே காரணம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.71 லட்சம் கோடியாக இருந்தது. மே 2026-ல் வெறும் 3.2% ஆக இருந்த மந்தமான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாத வளர்ச்சி ஒரு வலுவான மீட்சியைக் காட்டுகிறது.
- இதற்கு முன்னர், 2025-ம் ஆண்டு மே மாதத்தில் 16.4% என்ற அளவில் இதைவிட அதிக வளர்ச்சி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இறக்குமதி தொடர்பான ஜிஎஸ்டி வருவாய்தான்.
- கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.44,600 கோடியாக இருந்த இறக்குமதி ஜிஎஸ்டி, இந்த ஆண்டு 34.6% அதிகரித்து ரூ.60,038 கோடியாக உயர்ந்துள்ளது.
- இதற்கு மாறாக, உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் 6.5% என்ற மிதமான வேகத்திலேயே அதிகரித்து ரூ.1.35 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, வரி வசூல் உயர்வில் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்ததைக் காட்டுகிறது.
- உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 117.7 கிமீ தொலைவிற்கு பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ், போபால் – கான்பூர் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாக உள்ள இத்திட்டம் தற்போது 4 வழித்தடங்களைக் கொண்ட சாலையாகவும் எதிர்காலத்தில் 6 வழித்தடங்களாக விரிவுபடுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.
- ரூ.7,145.14 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண முறையில் செயல்படுத்தும். அத்துடன் தேசிய நெடுஞ்சாலை 34-ன் கான்பூர் – கப்ராய் பகுதியின் பராமரிப்பு, செயல்பாட்டு பணிகளை அது மேற்கொள்ளும்.
- இத்திட்டம் கான்பூர் – கப்ராய் இடையே தடையற்ற, அதிவிரைவு போக்குவரத்தை உறுதி செய்வதோடு சாகர், போபால் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பையும் வலுப்படுத்தும்.
- தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 8.1 கிமீ நீளத்தில் ரூ.6,969.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- இது மேற்கு, தெற்கு, தில்லிக்கு இடையே விரைவான போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும். குருகிராம், துவாரகா, இந்திரா காந்தி விமான நிலையம், மேற்கு தில்லியிலிருந்து தெற்கு தில்லி நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்குப் பயனளிக்கும்.
- எய்ம்ஸ், மஹிபால்பூர் இடையே உயர்மட்ட சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
- இந்த இணைப்பு சுரங்கப்பாதையை பாரமுல்லா உயர்மட்டச் சாலையுடன் இணைக்கும். இதன் மூலம் மேற்கு, தெற்கு தில்லிப் பகுதிகள், கிழக்கு தில்லி, காசியாபாத், நொய்டா ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

